ஆளுநர்

தனியார் மற்றும் கூட்டுறவுத்துறை அரிசி ஆலை உரிமையாளர்கள்; அரச, தனியார் வங்கிப் பிராந்திய முகாமையாளர்களுடனான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் உற்பத்தியாகும் நெல், வேறு மாகாணங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து அரிசியாக மாற்றப்பட்டு மீண்டும் எமது மாகாணத்துக்கே விற்பனைக்கு வருகின்றது. இதனால் எமது விவசாயிகளும், நுகர்வோரும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையை மாற்றியமைத்து, எமது நெல்லை எமது மாகாணத்திலேயே அரிசியாக்கி விநியோகிப்பதற்குத் தனியார் மற்றும் கூட்டுறவுத்துறை ஆலைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்திலுள்ள தனியார் மற்றும் கூட்டுறவுத்துறை அரிசி ஆலை உரிமையாளர்கள், அரச மற்றும் தனியார் வங்கிப் […]

தனியார் மற்றும் கூட்டுறவுத்துறை அரிசி ஆலை உரிமையாளர்கள்; அரச, தனியார் வங்கிப் பிராந்திய முகாமையாளர்களுடனான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. Read More »

தொழில் முயற்சியாளர்கள் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்த விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மற்றும் புதிய தொழில் முயற்சியாளர்கள் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (06.02.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. அரசாங்கம் உற்பத்திப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்ற போதிலும், அத்தகவல்கள் உரிய காலத்தில் தொழில் முயற்சியாளர்களைச் சென்றடைவதில்லை என்ற

தொழில் முயற்சியாளர்கள் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்த விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

“திட்டத்தை ஆவணமாக முடக்காது, நடைமுறைப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுங்கள்” – ஆளுநர் பணிப்புரை.

வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் தயாரிக்கப்பட்ட ‘2026 – 2030 வடக்கு சுற்றுலா அபிவிருத்தி மூலோபாயத் திட்டம்’ இன்று வெள்ளிக்கிழமை (06.02.2026) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, திட்ட அறிக்கை ஆளுநரிடம் கையளிக்கப்பட்டதோடு, அத்திட்டம் தொடர்பான விரிவான முன்னளிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், வவுனியாப் பல்கலைக்கழக வியாபாரக்

“திட்டத்தை ஆவணமாக முடக்காது, நடைமுறைப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுங்கள்” – ஆளுநர் பணிப்புரை. Read More »

மாற்றத்துக்கான ஒரு புதிய சகாப்தத்தில் நாம் இப்போது அடியெடுத்து வைத்திருக்கின்றோம். அந்த மாற்றத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் சுதந்திர நாள் உரையில் அழைப்பு

காலம் மாறிக் கொண்டிருக்கிறது. மாற்றத்துக்கான ஒரு புதிய சகாப்தத்தில் நாம் இப்போது அடியெடுத்து வைத்திருக்கின்றோம். அந்த மாற்றத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், இலங்கையின் சுதந்திர நாள் உரையில் அழைப்பு விடுத்தார். இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை காலை (04.02.2026) கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபைக்கட்டடத் தொகுதியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. வரலாற்றில்

மாற்றத்துக்கான ஒரு புதிய சகாப்தத்தில் நாம் இப்போது அடியெடுத்து வைத்திருக்கின்றோம். அந்த மாற்றத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் சுதந்திர நாள் உரையில் அழைப்பு Read More »

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் 78ஆவது சுதந்திர தின வாழ்த்துச் செய்தி.

இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், வடக்கு மாகாண மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். சுதந்திரம் என்பது வெறுமனே கடந்த காலத்தை நினைவுகூரும் ஒரு சம்பிரதாய நிகழ்வு மட்டுமல்ல, அது எமது எதிர்காலத்தை நாமே வடிவமைத்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்புமாகும். இனம், மதம், மொழி என்ற வேற்றுமைகளைக் கடந்து, ஒற்றுமை, சமாதானம் மற்றும் செழிப்பில் வேரூன்றியதொரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான உறுதியை நாம் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் 78ஆவது சுதந்திர தின வாழ்த்துச் செய்தி. Read More »

காணி விடுவிப்பு மற்றும் விவசாயப் பண்ணைகளை விடுவிப்பது குறித்து ஆராய்வு; – யாழ். கட்டளைத் தளபதியுடனான சந்திப்பில் ஆளுநர்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (03.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகக் கடந்த 27ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா, வடக்கு மாகாண ஆளுநரை இன்று சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பொதுமக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பாகவும்,

காணி விடுவிப்பு மற்றும் விவசாயப் பண்ணைகளை விடுவிப்பது குறித்து ஆராய்வு; – யாழ். கட்டளைத் தளபதியுடனான சந்திப்பில் ஆளுநர். Read More »

இலங்கை கல்விசாரா ஊழியர் சங்கத்தின் வடக்கு மாகாணப் பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில், இலங்கை கல்விசாரா ஊழியர் சங்கத்தின் வடக்கு மாகாணப் பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று திங்கட்கிழமை மாலை (02.02.2026) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது ஊழியர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த ஆளுநர், வடக்கு மாகாண அதிகார எல்லைக்குள் தீர்க்கப்படக்கூடிய பிரச்சனைகளைச் சாதகமாகப் பரிசீலித்து, அதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதேவேளை, வடக்கு மாகாண அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டதும், தேசிய ரீதியாகக் கொள்கை அளவில்

இலங்கை கல்விசாரா ஊழியர் சங்கத்தின் வடக்கு மாகாணப் பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் Read More »

7ஆவது சர்வதேச திருக்குறள் மாநாடு வவுனியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது

நவீன அறிவியல் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் கண்டுபிடித்த மூன்றாம் விதியை, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தனது திருக்குறளின் ஊடாக உலகுக்குச் சொன்னவர் தெய்வப்புலவர் திருவள்ளுவர். மனித குலத்துக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய வாழ்வியல் நெறிகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு பொக்கிஷமாக திருக்குறள் விளங்குகின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். மொறிசியஸ் சர்வதேச திருக்குறள் மன்றம், வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில், ‘மனித மாண்பு’ எனும்

7ஆவது சர்வதேச திருக்குறள் மாநாடு வவுனியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது Read More »

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா அவர்களின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா அவர்கள் பதவி ஆசையற்றவர்;, சலுகைகளுக்கு விலைபோகாதவர். தனக்கென எதனையும் எதிர்பார்க்காது, தமிழ் மக்களின் உரிமைக்காகப் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மிகச் சிறந்ததொரு மனிதரை நாம் இழந்திருக்கின்றோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் தலைவருமான காலஞ்சென்ற மாவை.சோ.சேனாதிராசா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாவிட்டபுரத்தில் அமைக்கப்பட்ட அன்னாரது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா அவர்களின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது Read More »

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு

போரின் இறுதிக் காலத்தில் நான் கிளிநொச்சி மாவட்டச் செயலராகக் கடமையாற்றியவன் என்ற வகையில், இப்பகுதி மக்கள் அனுபவித்த வேதனைகளை நான் நன்கறிவேன். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதே எமது நோக்கம். பணம் படைத்த எல்லோருக்கும் உதவுவதற்கு மனம் வருவதில்லை. ஆனால், சிங்கப்பூரைச் சேர்ந்த துரை குடும்பத்தினருக்கு அந்தத் தாயுள்ளம் வந்திருக்கின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். சிங்கப்பூரைச் சேர்ந்த திரு.திருமதி ரி.ரி.துரை குடும்பத்தினர் மற்றும் செல்வி சரசீஜா ராமன் ஆகியோரின்

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு Read More »