ஒரு கிராமத்தின் வளர்ச்சிக்குக் கல்வி மிகவும் இன்றியமையாததாகும். பலர் கல்வியைப் பணம் சம்பாதிப்பதற்கான வழியாகவே பார்க்கின்றனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும். – ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
கல்வியானது பணம் சம்பாதிப்பதற்கோ அல்லது பதவிகளை அடைவதற்கோ மட்டுமன்றி, மக்களுக்குச் சேவை செய்வதற்கே பயன்பட வேண்டும் எனவும், கல்வி கற்பதன் மிக உயர்ந்த நிலையே மக்களுக்குச் சேவை செய்யும் ஒருவராக உருவாவதுதான் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். அளவெட்டி ஞானோதயா நம்பிக்கை நிதியத்தின் ஆண்டு விழாவும், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று (25.06.2026) வியாழக்கிழமை மாலை பன்னாலை வரத்தலம் பிள்ளையார் கோவில் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த […]
