ஆளுநர்

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் மெய்நிகர் இணைய வழி மூலமான கலந்துரையாடல்

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில்  இன்று (05.10.2021) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் மெய்நிகர் இணைய வழி மூலம் இடம்பெற்ற கலந்துரையாடலில்    கௌரவ வடமாகாண ஆளுநர் அவர்கள் ஆளுநர் செயலகத்திலிருந்து இணைந்திருந்தார். இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு  வட மாகாண கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் அனைத்து மாகாண ஆளுநர்களினாலும் கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் இம்மாதம் 21ம் திகதி 200 மாணவர்களுக்குட்பட்ட தரம் 1-5 வரையிலான வகுப்புக்களை கொண்டமைந்துள்ள வட […]

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் மெய்நிகர் இணைய வழி மூலமான கலந்துரையாடல் Read More »

இந்திய அரசாங்கத்தின் நிதியுடன் நிர்மாணிக்கப்பட்ட வட/மத்திய மகளிர் கல்லூரியின் கட்டடத்திறப்பு விழா

தேசிய அளவில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிறைவேற்றப்பட்ட அபிவிருத்தி திட்டங்களின் திறப்பு விழாவானது 04.10.2021 அன்று காலை 10.30 மணிக்கு கௌரவ பிரதம அமைச்சர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இருந்து மெய்நிகர் இணைய வழி தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்திய அரசாங்கத்தின் வெளிநாட்டு செயலாளர் கௌரவ சிறி ஹர்ஷ வர்தன் ஸ்ரீ றீங்லா அவர்கள் கலந்து கொண்டார். இந் நிகழ்வின் துணை நிகழ்வு மற்றும் வட/மத்திய மகளிர்

இந்திய அரசாங்கத்தின் நிதியுடன் நிர்மாணிக்கப்பட்ட வட/மத்திய மகளிர் கல்லூரியின் கட்டடத்திறப்பு விழா Read More »

வட மாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி. எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையிலான விசேட ஊடக மாநாடு 29.9.2021

வட மாகாணத்தில் கடந்த இரு வருட காலப்பகுதியில் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்தின் அடிப்படையிலும் கௌரவ பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கௌரவ நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அவர்களின் வழிகாட்டலின் கீழும் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஊடகங்களுக்கும் மக்களுக்குமான அறிவித்தலை வழங்கும் நோக்கில் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி. எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களினால் கடந்த புதன் கிழமை (29 .9 .2021 ) மதியம் வடமாகாண

வட மாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி. எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையிலான விசேட ஊடக மாநாடு 29.9.2021 Read More »

தாளையடி உப தபால் நிலையம், தபால் நிலையமாக தரமுயர்த்தப்பட்டது.

நேற்றைய தினம் (2021.09.09) யாழ் மாவட்டத்துக்கான களவிஜயத்தை மேற்கொண்ட இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான கௌரவ நாமல் ராஜபக்ச அவர்கள் யாழில் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நேரடியாக பார்வையிட்டார். இவ் விஜயத்தின் போது, வட மாகாண கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸின் முயற்சியினால் தரமுயர்த்தப்பட்ட தாளையடி தபால் நிலையத்திற்கான ஆவணத்தை கௌரவ அமைச்சர் அவர்கள் தபால்மா அதிபர் மதுமதி வசந்தகுமாரிடம் கையளித்தார்.

தாளையடி உப தபால் நிலையம், தபால் நிலையமாக தரமுயர்த்தப்பட்டது. Read More »

மூலோபாய நகர அபிவிருத்தி மற்றும் நூறு நகர பல்பரிமாண அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

மூலோபாய நகர அபிவிருத்தி மற்றும் நூறு நகர பல்பரிமாண அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய நடைமுறை நிலைமைகளை ஆராயும் கலந்துரையாடல் 27.07.2021 காலை 10 மணிக்கு வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில், மூலோபாய நகர திட்டமிடலில் நிறைவடைந்துள்ள திட்டங்கள் தொடர்பான நிலைமை குறித்தும் குறித்த திட்டத்தை முன் கொண்டு செல்வதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள்

மூலோபாய நகர அபிவிருத்தி மற்றும் நூறு நகர பல்பரிமாண அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் Read More »

பாற்பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு விழா

வவுனியா மாவட்ட மரக்காரம்பளைப் பிரதேசத்தில் மீள ஆரம்பிக்கப்பட்ட பாற் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 15 யூலை 2021 அன்று மாலை 3 மணிக்கு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தொழிற்சாலையை திறந்து வைத்த வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவுடன் தொழிற்சாலையை மீள ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்ததுடன் இதன் மூலம் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் விவசாயிகளுக்கான சந்தை

பாற்பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு விழா Read More »

மத்திய கமத்தொழில் அமைச்சினால் மாகாண விவசாய திணைக்களத்தின் ஊடாக கொவிட் 19 அவசர நிலைமைகளின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் வடமாகாணத்தின் வவுனியா மாவட்டத்திற்கான களஞ்சிய வசதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

மத்திய கமத்தொழில் அமைச்சினால் மாகாண விவசாய திணைக்களத்தின் ஊடாக கொவிட் 19 அவசர நிலைமைகளின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் வடமாகாணத்தின் வவுனியா மாவட்டத்திற்கான களஞ்சிய வசதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு15 யூலை 2021 அன்று மதியம் 12 மணிக்கு நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் களஞ்சியசாலைக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்து உரையாற்றிய வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ். எம் சார்ள்ஸ் அவர்கள் இத் திட்டமானது கிராமப்புற

மத்திய கமத்தொழில் அமைச்சினால் மாகாண விவசாய திணைக்களத்தின் ஊடாக கொவிட் 19 அவசர நிலைமைகளின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் வடமாகாணத்தின் வவுனியா மாவட்டத்திற்கான களஞ்சிய வசதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு Read More »

கிளிநொச்சி சித்த ஆதார  வைத்தியசாலையின் பெண்கள் விடுதி திறப்பு விழா வைபவம்

மாகாண குறித்து ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட கிளிநொச்சி சித்த ஆதார  வைத்தியசாலையின் பெண்கள் விடுதி இன்று (15.07.2021) காலை 10.30 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த பெண்கள் விடுதி திறப்பு விழா ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் திரைக்கல்லினை திரைநீக்கம் செய்து  கட்டடத்தொகுதியினை திறந்து வைத்ததுடன் குறித்த வைத்திய சாலையின் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். குறித்த நிகழ்வில்   வடமாகாண 

கிளிநொச்சி சித்த ஆதார  வைத்தியசாலையின் பெண்கள் விடுதி திறப்பு விழா வைபவம் Read More »

கொடிகாமம் சித்த விசேட சிகிச்சை நிலைய திறப்பு விழா வைபவம்

மாகாண குறித்து ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட சித்த விசேட சிகிச்சை மையம்  இன்று காலை 9 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.குறித்த சிகிச்சை நிலைய திறப்பு விழா ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் திரைக்கல்லினை திரைநீக்கம் செய்து  கட்டடத்தைத் திறந்து வைத்ததுடன் அங்குள்ள உட்கட்டமைப்பு வசதிகளையும் நேரடியாக பார்வையிட்டார். குறித்த நிகழ்வில்  வடமாகாண  சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு

கொடிகாமம் சித்த விசேட சிகிச்சை நிலைய திறப்பு விழா வைபவம் Read More »

உலக வங்கி நிதி உதவியுடன் விவசாயிகளுக்கான களஞ்சிய வசதிகளை கட்டமைக்கும் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

மத்திய கமத்தொழில் அமைச்சினால் மாகாண விவசாய திணைக்களத்தின் ஊடாக கொவிட்- 19 அவசர நிலைமைகளின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் விவசாயிகளுக்கான களஞ்சிய வசதிகளை கட்டமைக்கும் செயற்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு முறையே அச்சுவேலி பிரதேசத்திலும், குப்பிளான் தெற்கு விவசாய சம்மேளன பிரிவிலும் அன்று 14.07.2021 காலை இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் வெங்காய களஞ்சியத்திற்கான அடிக்கல்லினை அச்சுவேலி பிரதேசத்திலும், உருளைக்கிழங்கு

உலக வங்கி நிதி உதவியுடன் விவசாயிகளுக்கான களஞ்சிய வசதிகளை கட்டமைக்கும் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு Read More »