பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்று (05.10.2021) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் மெய்நிகர் இணைய வழி மூலம் இடம்பெற்ற கலந்துரையாடலில் கௌரவ வடமாகாண ஆளுநர் அவர்கள் ஆளுநர் செயலகத்திலிருந்து இணைந்திருந்தார்.
Casino Review – Top on App & Mobile!இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு வட மாகாண கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் அனைத்து மாகாண ஆளுநர்களினாலும் கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் இம்மாதம் 21ம் திகதி 200 மாணவர்களுக்குட்பட்ட தரம் 1-5 வரையிலான வகுப்புக்களை கொண்டமைந்துள்ள வட மாகாணத்தில் உள்ள 680 பாடசாலைகளினை மீள ஆரம்பிக்கமுடியும் என தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் அனைத்து மாகாண ஆளுநர்கள், பிரதம செயலாளர்கள் மற்றும் கல்வி செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.