npc2018z

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற நவீன தொழில்நுட்பங்களின் சேர்க்கையாக விளங்கிய விவசாயக் கண்காட்சி

மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் வட்டக்கச்சி, கிளிநொச்சியில் 01.10.2020 மற்றும் 02.10.2020 ஆம் திகதிகளில்“தற்சார்பு விவசாய பொருளாதார அபிவிருத்தியை நோக்கி” என்னும் தொனிப் பொருளிலான விவசாயக் கண்காட்சி – 2020 ஆனது காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இக் கண்காட்சியின் முதலாம் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக மீன்பிடித்துறை அமைச்சர் கௌரவ கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவர்களும் இரண்டாம் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் கௌரவ […]

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற நவீன தொழில்நுட்பங்களின் சேர்க்கையாக விளங்கிய விவசாயக் கண்காட்சி Read More »

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் கலை மற்றும் இலக்கியத் துறைக்கு பங்களிப்பு செய்து தற்போது வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு உதவுத் தொகை வழங்கல் நிகழ்வு

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் உள்ள கலைஞர்களுக்கு உதவுதொகை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் 06 ஒக்டோபர் 2020 அன்று கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்கள் சிறப்பு

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் கலை மற்றும் இலக்கியத் துறைக்கு பங்களிப்பு செய்து தற்போது வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு உதவுத் தொகை வழங்கல் நிகழ்வு Read More »

விவசாயக் கண்காட்சி – 2020

மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் வட்டக்கச்சி, கிளிநொச்சியில் 01.10.2020 மற்றும் 02.10.2020 ஆம் திகதிகளில் “தற்சார்பு விவசாய பொருளாதார அபிவிருத்தியை நோக்கி” என்னும் தொனிப்பொருளிலான விவசாயக்கண்காட்சி – 2020 காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை நடைபெறவுள்ளது. இக் கண்காட்சியின் முதலாம் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்றொழில் அபிவிருத்தி மற்றும் நீரியல்துறை அமைச்சர் கௌரவ கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவர்களும் இரண்டாம் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் கௌரவ. திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களும்

விவசாயக் கண்காட்சி – 2020 Read More »

சுகாதார அமைச்சின் 2020 ஆம் ஆண்டுக்கான துறைசார் மீளாய்வுக் கூட்டம்

2020ம் ஆண்டிடுக்கான சுகாதாரம், சுதேச மருத்துவம் மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களங்களின் துறைசார் கூட்டமானது மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மாநாட்டு மண்டபத்தில் 15.09.2020 அன்று  நடைபெற்றது. வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. பா.செந்தில்நந்தனன் அவர்களின் தலைமையில் கீழ் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாணஆணையாளர் – சுதேச மருத்துவ திணைக்களம், மாகாணஆணையாளர் மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம், அனைத்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் வைத்திய அத்தியட்சர்கள், திட்டமிடல்

சுகாதார அமைச்சின் 2020 ஆம் ஆண்டுக்கான துறைசார் மீளாய்வுக் கூட்டம் Read More »

“சுபீட்சமானநோக்கில் விவசாய மறுமலர்ச்சி”எனும் தொனிப் பொருளில் கமத்தொழில் அமைச்சர் அவர்களின் யாழ் மற்றும் கிளிநொச்சிக்கான விஜயம்

“சுபீட்சமான நோக்கில் விவசாய மறுமலர்ச்சி” எனும் தொனிப் பொருளில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் விவசாய உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் 15.09.2020 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த கமத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களின் தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் விவசாயிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடல் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டைசார்ந்த தொழில் இராஜாங்க அமைச்சர் கௌரவ டி.பி.ஹேரத்,

“சுபீட்சமானநோக்கில் விவசாய மறுமலர்ச்சி”எனும் தொனிப் பொருளில் கமத்தொழில் அமைச்சர் அவர்களின் யாழ் மற்றும் கிளிநொச்சிக்கான விஜயம் Read More »

வடக்கு மாகாண சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி கொழும்பு ஆசிரி மருத்துவமனையில் நடைபெற்றது

வடக்கு மாகாண சுகாதார ஊழியர்களுக்கு சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சி நெறி கொழும்பு ஆசிரி மத்திய மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று நிறைவடைந்தது. இப் பயிற்சி திட்டங்கள் மருத்துவ மற்றும் மருத்துவரல்லாத ஊழியர்களுக்காக இரண்டு பிரிவுகளாக ஏற்பாடு செய்யப்பட்டன, மேலும் இப் பயிற்சியில்  மருத்துவ நிர்வாகிகள், மருத்துவ அதிகாரிகள், மருத்துவமனை கணக்காளர்கள், திட்டமிடல் அதிகாரி, தாதிய பரிபாலகர், விடுதி சகோதரிகள், உணவு மேற்பார்வையாளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 100 க்கும்

வடக்கு மாகாண சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி கொழும்பு ஆசிரி மருத்துவமனையில் நடைபெற்றது Read More »

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான புகுமுகப் பயிற்சிநெறி

அண்மையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான புகுமுகப் பயிற்சிநெறி ஒன்று முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி அலகினால் 2020.09.14 ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்டது. பிரதம விருந்தினராக திருமதி. அ.ஸ்ரானலி டிமெல், பிரதிப் பிரதம செயலாளர் – ஆளணி மற்றும் பயிற்சி, வடமாகாணம் அவர்கள் கலந்துகொண்டு பயிற்சி நெறியை ஆரம்பித்துவைத்தார். 10 நாட்களைக் கொண்ட இப் பயிற்சி நெறியானது முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி அலகின் பணிப்பாளர் திரு.வே.ஆயகுலன் தலைமையில் திரு.சு.செந்தூரன், பயிற்சி உத்தியோகத்தர் அவர்களது வரவேற்பு உரையுடன்

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான புகுமுகப் பயிற்சிநெறி Read More »

திட்ட முன்மொழிவு தயாரித்தல் தொடர்பான பயிற்சிப்பட்டறை

தொழிற்துறைத்திணைக்களத்தில் திட்ட முன்மொழிவு தயாரித்தல் தொடர்பான பயிற்சிப்பட்டறை நேற்று 08/09/2020 திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இப் பயிற்சிக்கு யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் வளவாளராக திணைக்களத்தின் கைத்தொழில் மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு ப.ராகவன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

திட்ட முன்மொழிவு தயாரித்தல் தொடர்பான பயிற்சிப்பட்டறை Read More »

பருத்தித்துறை தள வைத்தியசாலையில் புனரமைப்புச் செய்யப்பட்ட குழந்தைகள் விடுதி  கையளிக்கப்பட்டது

பருத்தித்துறை தள வைத்தியசாலையில் புனரமைப்பு செய்யப்பட்  குழந்தைகள் விடுதி  திறப்பு விழா செப்டம்பர் 07, 2020 அன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ. திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு விடுதியை திறந்தவைத்தார். மறைந்த விஜயரத்னா குருக்கள் மற்றும் மறைந்த சந்திரகுமாரி அம்மா ஆகியோரின் நினைவாக  திரு , திருமதி கீதா மாதவன் ஐயரின் நிதி உதவியுடன் விரைவான புதுப்பித்தல் திட்டம் 2020 இன் கீழ் இந்த குழந்தைகள் விடுதி 

பருத்தித்துறை தள வைத்தியசாலையில் புனரமைப்புச் செய்யப்பட்ட குழந்தைகள் விடுதி  கையளிக்கப்பட்டது Read More »

இலங்கை மத்தியவங்கி ஆளுநர் வடமாகாண ஆளுநர் சந்திப்பு

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் தேசமான்ய  பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஸ்மன் வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்திர் 07 செப்ரெம்பர் 2020 அன்று சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது வட மகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தொழில் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் இலகு தவணை கடன்களை வழங்கக்கூடியவிதத்தில் வங்கிகள் செயற்பட வேண்டுமெனவும் மக்கள் இலகுவாக அணுகக்கூடிய விதத்தில் வங்கிகள் தமது கிளைகளை மேலும் விஸ்தரிக் வேண்டும் எனவும் வட மாகாண ஆளுநர் வலியுறுத்தினார். இக்கலந்துரையாடலில்

இலங்கை மத்தியவங்கி ஆளுநர் வடமாகாண ஆளுநர் சந்திப்பு Read More »