இந்திய தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாளில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் கௌரவ வடக்கு மாகாண ஆளுநர்.
கடந்த 07.10.2023 அன்று இந்திய துணைத்தூதரகத்தால் நடாத்தப்பட்ட இந்திய தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாளில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் ‘இந்திய தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டமானது, 400 இற்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு பல்வேறுபட்ட துறைகளான தகவல் தொழிநுட்பம், ஆங்கிலமொழி, முகாமைத்துவம், கிராமிய அபிவிருத்தி, நிதி, தொடர்பாடல் போன்றவற்றில் ஆற்றல் விருத்தியையும் பயிற்சிகளையும் வழங்குவது ஒரு பொன்னான வாய்ப்பு’ என கூறியதோடு இத்திட்டத்தை செயற்படுத்துகின்ற இந்திய […]
