கொடிகாமம் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் நவீன போத்தல் கள் அடைப்பு நிலைய திறப்பு விழா
காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை உள்வாங்கிப் பயணித்தால்தான் முன்னோக்கிச் செல்ல முடியும் என்பதை கூட்டுறவுத்துறையினர் உணர்ந்துகொள்ளவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியீட்டத்தின் கீழ் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தால் அமைக்கப்பட்ட கொடிகாமம் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் நவீன போத்தல் கள் அடைப்பு நிலைய திறப்பு விழா 30.04.2025 அன்று புதன்கிழமை வரணி, நாவற்காட்டில் அமைந்துள்ள கூட்டுறவுச் சங்கத்தின் நிலையத்தில் நடைபெற்றது. […]
