தேசிய மின்சார அமைப்பிற்கு தினசரி 6.5% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்கும் திட்டம் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தேசிய மின்சார அமைப்பிற்கு தினமும் 6.5% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்கும் சூரிய சக்தி மின் அமைப்பு ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக தனியார் நிறுவனம் ஒன்றினால் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும் என கூறப்படுகின்றது. தனியார் சூரியப்படல நிறுவனம் ஒன்றின் தலைவர் திரு.ஜயந்த சமரகோன் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் பூநகரி ஏரியை அண்மித்த பகுதிகளில் 6000 ஏக்கர் நிலப்பரப்பில் இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. 1000 ஏக்கரில் 700 மெகாவோல்ட் சூரிய சக்தி மின் அமைப்பு […]
