பாடசாலை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – வட மாகாண ஆளுநர், ஐ.நா சிறுவர் நிதியத்திடம் கோரிக்கை
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய பிரதிநிதிகளுக்கும், வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது. யாழ்பாணத்திலுள்ள ஆளுநர் மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் சிறுவர் மேம்பாட்டு நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த விசேட சந்திப்பு நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Christian Skoog, உதவி பிரதிநிதி Begona Arellano, கல்வி உத்தியோகத்தர் உள்ளிட்ட குழாத்தினர் […]
