தினக்குரல் பத்திரிகை, யாழ் தினக்குரல் பத்திரிகை, நொதேர்ன் மருத்துவனை ஆகியனவற்றின் நிறுவுனரும் தொழிலதிபருமான சாமி என்று அழைக்கப்படும் செல்லையா பொன்னுசாமி அவர்களின் இழப்பையொட்டி வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி
தினக்குரல் பத்திரிகை, யாழ் தினக்குரல் பத்திரிகை, நொதேர்ன் மருத்துவனை ஆகியனவற்றின் நிறுவுனரும் தொழிலதிபருமான சாமி என்று அழைக்கப்படும் செல்லையா பொன்னுசாமி அவர்களின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்புகள் எமது சமூகத்தில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளன. கொழும்பில் காலத்தின் தேவைகருதி அவர் ஆரம்பித்த தினக்குரல் பத்திரிகை சமாதான காலத்தில் யாழ்ப்பாண மண்ணிலிருந்தும் வெளிவரத் தொடங்கியது. பிராந்திய ஊடகங்களின் செல்வாக்கு மிகுந்த வடக்கு மண்ணிலிருந்து ஏற்கனவே வெளிவந்த பிராந்தியப் பத்திரிகைகளுக்கு மேலதிகமாக […]
