Balasingam Kajenderan

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் வழிப்படுத்தலில், லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பினூடாக இடர்கால நிவாரணம்

வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக நிலவும் பலத்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் தொடர்ச்சியாக வழங்கப்படுவதுடன், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் நெறிப்படுத்தலின் ஊடாக பல அரசசார்பற்ற, தனியார் நிறுவனங்களும் இடர்க்கால நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளன. அந்தவகையில், லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பினூடாக பத்தாயிரம் அமெரிக்க டொலர் (USD 10,000) பெறுமதியான உலருணவு பொதிகளை பாதிக்கப்பட்ட ஆயிரம் குடும்பங்களுக்காக வழங்குவதற்குரிய அங்குரார்ப்பண நிகழ்வு, வடக்கு […]

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் வழிப்படுத்தலில், லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பினூடாக இடர்கால நிவாரணம் Read More »

கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தி

மண்ணக மாந்தரின் பாவம் போக்க விண்ணக தேவன் மனித உருவெடுத்த இந்த நாளை உலகவாழ் மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையாக இன்று கொண்டாடுகின்றனர். இந்த மகிழ்ச்சி பொங்கும் நன்நாளில் இலங்கைவாழ் கிறிஸ்தவர்களுக்கு நத்தார் வாழ்த்து தெரிவிப்பதில் அகமகிழ்வடைகின்றோம். “வாக்கு மனிதனானார் நம்மிடையே குடிகொண்டார்” -(யோவான் 1:14 ) என திருவிவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய, இறைமகன் இயேசு குழந்தையாக அவதரித்த திருநாள் கிறிஸ்துமஸ் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது.தியாகம்,கருணையை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடியாக இயேசுவின் பிறப்பு அமைந்துள்ளது. இறைமகன் இயேசு என்றும் எம்மோடு இருக்கிறார் என்பதை கிறிஸ்மஸ் பண்டிகை உணர்த்துகின்றது.

கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தி Read More »

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழாவும் பண்பாட்டியல் காண்பியக்கூடக் கண்காட்சியும் – 2023

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் 2023ஆம் ஆண்டிற்கான பண்பாட்டுப் பெருவிழாவானது கிளிநொச்சி மாவட்டத்தில் 2023-12-06 ஆம் நாள் புதன்கிழமை வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழாவும், பண்பாட்டியல் காண்பியக்கூட கண்காட்சியும் எனும் கருப்பொருளில் பண்பாட்டலுவல்கள் அலகினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இவ்விழாவானது பண்பாட்டு விழா, பண்பாட்டு ஊர்வலம், பண்பாட்டியல் காண்பியக்கூடக் கண்காட்சி என மூன்று வகையாக கட்டமைக்கப்பட்டு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி மாவட்டத்தின் கூட்டுறவாளர் கலாசார மண்டபத்தில் பண்பாட்டுப்

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழாவும் பண்பாட்டியல் காண்பியக்கூடக் கண்காட்சியும் – 2023 Read More »

2030 ஆம் ஆண்டுக்குள் உலகில் அனைவருக்கும் பூரண கண்பார்வையை வழங்கும் நிலையான அபிவிருத்தி நோக்கு (SDG) திட்டத்தின் இரண்டாம் கட்டம் வவுனியாவில்

வடக்கு மாகாணத்தில் கண் பார்வையில் சிக்கல்களை  எதிர்நோக்கியுள்ளவர்களுக்கான சிகிச்சைகளை இலவசமாக வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் வவுனியாவில் முன்னெடுக்கப்படுகிறது. அதற்கமைய, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் ஆலோசனைக்கு அமைய,  வவுனியா பொது வைத்தியசாலையில் கண்புரை சத்திரசிகிச்சைகள் இலவசமாக முன்னெடுக்கப்படுகிறது. முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில், கண்புரை காரணமாக பாதிக்கப்பட்ட 1200 பேருக்கு இந்த இலவச சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்படுகிறது. எதிர்வரும் 22 ஆம் திகதி வரை இந்த இலவச கண்புரை சத்திரசிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது. வவுனியா, சிலாபம், முல்லைத்தீவு ஆகிய வைத்தியசாலைகளை சேர்ந்த மூன்று வைத்தியர்களுடன்

2030 ஆம் ஆண்டுக்குள் உலகில் அனைவருக்கும் பூரண கண்பார்வையை வழங்கும் நிலையான அபிவிருத்தி நோக்கு (SDG) திட்டத்தின் இரண்டாம் கட்டம் வவுனியாவில் Read More »

யாழ் மாவட்டத்தில் காணப்படும் அனுமதியற்ற நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பணிப்புரை

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதால்  டெங்கு நுளம்பு  பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ். எம் சார்ள்ஸ் அவர்கள், துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு நுளம்பு அதிகம் பரவும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறிப்பாக வடிகான்களில் நீர் தேங்கி நிற்பதால் நுளம்பு பெருக்கம் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு குறித்த வடிகான்களை சுத்தப்படுத்துவதோடு, வீதி ஓரங்களில் போடப்பட்டிருக்கக்கூடிய நடைபாதை வியாபார

யாழ் மாவட்டத்தில் காணப்படும் அனுமதியற்ற நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பணிப்புரை Read More »

சுவிட்சர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்களும், தென்னாப்பிரிக்காவின் உயர்ஸ்தானிகரும் வடமாகாண கௌரவ ஆளுநரை சந்தித்தனர்

சுவிட்சர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்களும், தென்னாப்பிரிக்காவின் உயர்ஸ்தானிகரும் வடமாகாண கௌரவ ஆளுநரை சந்தித்தனர். சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் (Dr. Siri Walt), ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மிசுகொஷி ஹிடேகி (MIZUKOSHI Hideaki) மற்றும் தென்னாப்பிரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாண்டைல் எட்வின் ஷால்க் (Sandile Edwin Schalk) ஆகியோர் வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை நேற்றிரவு சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த சிநேகபூர்வ

சுவிட்சர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்களும், தென்னாப்பிரிக்காவின் உயர்ஸ்தானிகரும் வடமாகாண கௌரவ ஆளுநரை சந்தித்தனர் Read More »

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – கிராம மட்ட கலந்துரையாடல்கள் ஊடாக பொதுமக்களை தெளிவுபடுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அறிவிப்பு.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, மாகாணத்தின் டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வு கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது. யாழ் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சளால் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 2192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இன்று (14.12.2023) நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கணகேஸ்வரன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி  த.சத்தியமூர்த்தி, வடக்கு மாகாண

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – கிராம மட்ட கலந்துரையாடல்கள் ஊடாக பொதுமக்களை தெளிவுபடுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அறிவிப்பு. Read More »

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானம்

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களிடம், இலங்கை விமானப்படையின் படைத்தளபதி ஏயார் மார்சல் உதேனி ராஜபக்ஸ தெளிவுப்படுத்தினார். யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண கௌரவ ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், இலங்கை விமானப்படையின் படைத்தளபதி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் , கௌரவ ஆளுநரை இன்று (13.12.2023) சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இலங்கை விமானப்படையின் படைத்தளபதி ஏயார் மார்சல் உதேனி ராஜபக்ஸ, ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், ஆளுநரின் இணைப்புச் செயலாளர்

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானம் Read More »

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்கத்துக்கான சுயாதீன ஆணைக்குழுவின், இடைக்கால செயலகத்தின் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுப்பு.

அதிமேதகு ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய, பாராளுமன்ற சட்டத்தினூடாக ஸ்தாபிக்கப்படவுள்ள உண்மை, ஒற்றுமை, நல்லிணக்கத்துக்கான உத்தேச சுயாதீன ஆணைக்குழுவின், இடைக்கால செயலகத்தின் அங்கத்தவர்கள், வடமாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை, கொழும்பிலுள்ள வாசஸ்தலத்தில் நேற்று(09.12.2023) மாலை சந்தித்து கலந்துரையாடினர்.  உத்தேச சுயாதீன ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவன்ச, இடைக்கால செயலகத்தின் கொள்கை பிரிவு தலைவர் கலாநிதி யுவி தங்கராஜா, இடைக்கால செயலகத்தின் சட்டப்பிரிவு உத்தியோகஸ்தர் நிசாந்தெனி ரத்னம், உத்தேச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நிறைவேற்று அதிகாரியும்,  சட்டப் பிரிவு

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்கத்துக்கான சுயாதீன ஆணைக்குழுவின், இடைக்கால செயலகத்தின் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுப்பு. Read More »