இலங்கையின் அபிவிருத்திக்கு கைகொடுப்பதாக உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவிப்பு.
வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கடந்த திங்கட்கிழமை (2023.10.30) உலகவங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜெர்டே மற்றும் அவரது குழுவையும் பெண்கள், சிறுவர்கள் துறை சார்ந்த தலைவர்களையும் சந்தித்திருந்தார். வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தியதுடன், வடமாகாணத்தில் எவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளலாம் என்பதைக் கண்டறிவதில் பெரும் சவால்களை எதிர்கொள்வதாகவும், கல்வி, சுயதொழில் உட்கட்டமைப்பு மற்றும் சிறுவர், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதில் வடக்கு மாகாணத்திற்கு ஆதரவளிக்குமாறும் […]