Balasingam Kajenderan

அகிலத் திருநாயகியை, அதிமேதகு ஜனாதிபதி நேரில் சந்தித்துப் பாராட்டினார்

பிலிப்பைன்சில் நடைபெற்ற 22 ஆவது மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முல்லைத்தீவை சேர்ந்த அகிலத் திருநாயகி அவர்கள், அதிமேதகு ஜனாதிபதியால் கௌரவிக்கப்பட்டார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு (06/01/2024) இந்த கௌரவிப்பு இடம்பெற்றது.    

அகிலத் திருநாயகியை, அதிமேதகு ஜனாதிபதி நேரில் சந்தித்துப் பாராட்டினார் Read More »

யாழ்.மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலயத்திற்கான காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

சுமார் 28 வருடங்களின் பின்னர் பாதுகாப்பு படையினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட யாழ்.மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்திற்கான புதிய கட்டடம் ஒன்றை நிர்மாணிக்க இலங்கை விமானப்படை முன்வந்துள்ளது. அதற்கமைய குறித்த பிரதான மண்டபக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (06.01.2024) நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை விமானப்படையின் வான்வெளிப் பொறியியல் துறையின் பணிப்பாளர் நாயகம் ஏயார் வைஸ் மார்சல் முதித்த மஹவத்தகே, திட்ட இணைப்பாளர் குரூப் கப்டன் துஷார பண்டார, இலங்கை

யாழ்.மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலயத்திற்கான காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

கௌரவ ஆளுநருடன் இணைந்து அடுத்த ஐந்துவருடங்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை சமர்பிக்குமாறு அதிமேதகு ஜானதிபதி வவுனியாவில் தெரிவிப்பு

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஜனாதிபதி செயலாளர், வட மாகாண பிரதம செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மூன்று மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கான எதிர்கால திட்டங்கள், மாவட்டங்களில் எதிர்நோக்க்கப்படும் சவால்கள்

கௌரவ ஆளுநருடன் இணைந்து அடுத்த ஐந்துவருடங்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை சமர்பிக்குமாறு அதிமேதகு ஜானதிபதி வவுனியாவில் தெரிவிப்பு Read More »

சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

சிவில் சமூகப் பிரதிநிதிகளை ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை சந்தித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம் பெற்றது. இதன்போது வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்  மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர். இதில் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த பல சிவில் சமூகத்தின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு Read More »

ஜனாதிபதி தலைமையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

யாழ்ப்பாணத்தை வந்தடைந்த அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் வரவேற்றார். வடக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னெடுத்துள்ள அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வரவேற்றார். இதனை தொடர்ந்து யாழ்ப்பாணம் மாவட்ட செயகத்தில், யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், மாவட்ட இணைத்தலைவர்களான கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

ஜனாதிபதி தலைமையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் Read More »

இயற்கைஅனர்த்தங்களின் போது பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்துஅறிக்கையிட வேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர் துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

மழை, வெள்ளம், வறட்சி  உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களினால்  பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கையிட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இயற்கை அனர்த்தங்களின் போது சொத்துக்கள், உயிர் சேதங்கள் தொடர்பில் மாத்திரம் அறிக்கையிடப்படுகின்ற போதிலும், பயிர்ச்செய்கைகளுக்கான சேத விபரங்கள் பட்டியலிடப்படாமையால் விவசாயிகள் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பில் கௌரவ ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அனர்த்தங்களின் போது பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய முறையில் நட்டஈடு கிடைப்பதில்லை எனவும், காப்புறுதிகள் கிடைப்பதில்லை எனவும் விவசாயிகள்

இயற்கைஅனர்த்தங்களின் போது பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்துஅறிக்கையிட வேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர் துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் Read More »

விதை உருளைக்கிழங்குஇறக்குமதி தொடர்பில் விசாரணை அவசியம் – யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுகூட்டத்தில் தெரிவிப்பு

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட விதை உருளை கிழங்கு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார். யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போதே ஆளுநர் இதனை குறிப்பிட்டார். யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா, கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும்  மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் ஆகியோரின் தலைமையில், மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று

விதை உருளைக்கிழங்குஇறக்குமதி தொடர்பில் விசாரணை அவசியம் – யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுகூட்டத்தில் தெரிவிப்பு Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் வழிப்படுத்தலில், லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பினூடாக இடர்கால நிவாரணம்

வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக நிலவும் பலத்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் தொடர்ச்சியாக வழங்கப்படுவதுடன், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் நெறிப்படுத்தலின் ஊடாக பல அரசசார்பற்ற, தனியார் நிறுவனங்களும் இடர்க்கால நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளன. அந்தவகையில், லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பினூடாக பத்தாயிரம் அமெரிக்க டொலர் (USD 10,000) பெறுமதியான உலருணவு பொதிகளை பாதிக்கப்பட்ட ஆயிரம் குடும்பங்களுக்காக வழங்குவதற்குரிய அங்குரார்ப்பண நிகழ்வு, வடக்கு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் வழிப்படுத்தலில், லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பினூடாக இடர்கால நிவாரணம் Read More »

கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தி

மண்ணக மாந்தரின் பாவம் போக்க விண்ணக தேவன் மனித உருவெடுத்த இந்த நாளை உலகவாழ் மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையாக இன்று கொண்டாடுகின்றனர். இந்த மகிழ்ச்சி பொங்கும் நன்நாளில் இலங்கைவாழ் கிறிஸ்தவர்களுக்கு நத்தார் வாழ்த்து தெரிவிப்பதில் அகமகிழ்வடைகின்றோம். “வாக்கு மனிதனானார் நம்மிடையே குடிகொண்டார்” -(யோவான் 1:14 ) என திருவிவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய, இறைமகன் இயேசு குழந்தையாக அவதரித்த திருநாள் கிறிஸ்துமஸ் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது.தியாகம்,கருணையை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடியாக இயேசுவின் பிறப்பு அமைந்துள்ளது. இறைமகன் இயேசு என்றும் எம்மோடு இருக்கிறார் என்பதை கிறிஸ்மஸ் பண்டிகை உணர்த்துகின்றது.

கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தி Read More »