Balasingam Kajenderan

வடக்கு மாகாணத்திலுள்ள பத்து வைத்தியசாலைகளுக்கு ஜேர்மன் நாட்டிலிருந்து நன்கொடைகள் கையளிப்பு

வடக்கு மாகாணத்திலுள்ள பத்து வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சை பிரிவிற்கான அதிநவீன படுக்கைகள் உள்ளிட்ட நன்கொடைகள் ஜேர்மன் நன்கொடையாளர் ஒருவரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான நிகழ்வு வவுனியா பொது வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்று (19/09/2024) மாலை நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களிடம் இந்த நன்கொடை பொருட்கள் கையளிக்கப்பட்டன. ஸ்ரீ சக்தி ஆன்மீக இந்து அமைப்பின் ஊடாக சர்வதேச இந்து கலாசார ஆலோசகரான கலாநிதி இரத்னசாமி ராமேஸ்வரன் என்பவரால் ஜேர்மன் நாட்டிலிருந்து பெறப்பட்ட

வடக்கு மாகாணத்திலுள்ள பத்து வைத்தியசாலைகளுக்கு ஜேர்மன் நாட்டிலிருந்து நன்கொடைகள் கையளிப்பு Read More »

நெடுந்தாரகை பயணிகள் படகை வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்கள் உத்தியோகபூர்வமாக இன்று கையளித்தார்

சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நெடுந்தாரகை பயணிகள் படகு 19/09/2024 அன்று தனது சேவையை ஆரம்பித்துள்ளது. படகில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப்பணிகளை தொடர்ந்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் , வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் நெடுந்தாரகை பயணிகள் படகு இன்று காலை உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. நெடுந்தீவு இறந்குத்துறைக்கு சென்ற கௌரவ ஆளுநர் அவர்கள், படகை பார்வையிட்டார். இதுவரை காலம் மாகாண சபையின் பொறுப்பில் காணப்பட்ட இந்த படகானது 52 மில்லியன் ரூபா செலவில்

நெடுந்தாரகை பயணிகள் படகை வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்கள் உத்தியோகபூர்வமாக இன்று கையளித்தார் Read More »

காங்கேசன்துறையில்சீமெந்து தொழிற்சாலை நிறுவுவது தொடர்பில் கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடல்

காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இன்று (18/09/2024) நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் , ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் யாழ் பிராந்திய சிரேஷ்ட பிரதி பணிப்பாளர் எ.ஆர். ஜெயமனோன், ஆய்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக்கொண்டனர். உள்ளூர் மூலப்பொருட்களை பயன்படுத்தாது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களை கொண்டு சீமெந்து தயாரித்து பொதி செய்து உள்நாட்டு தேவைக்காக விற்பனை செய்யும் நோக்குடன் இந்த செயற்றிட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, காங்கேசன்துறையில்

காங்கேசன்துறையில்சீமெந்து தொழிற்சாலை நிறுவுவது தொடர்பில் கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் மனிதாபிமானப் பணி

வடமாகாணத்தில் விவசாயத்தை வாழ்வாதாரமாக நம்பி காணப்படும் கிராமங்களில் மணலாறு என்ற கிராமமும் ஒன்றாகும். மகாவலி L வலயமாக இந்த பகுதி அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த கிராமத்திலுள்ள எதா வெட்டுனு வெவ வித்தியாலயத்தில் 382 மாணவர்கள் கல்வி பயில்வதுடன், 19 ஆசிரியர்கள் சேவையாற்றுகின்றனர். இந்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான விடுதியில் நீர் விநியோக கட்டமைப்பு சீர்க்குழைந்தமையால் பல நாட்கள் விடுமுறையில் ஆசிரியர்கள் தங்களின் வீடுகளுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. இதனால் மாணவர்களின் கற்றல் செயற்பாடு பாதிக்கப்பட்டது. இந்த சிக்கல் நிலைமை

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் மனிதாபிமானப் பணி Read More »

வடக்கின் பொருளாதாரத்திற்கு உந்து சக்தியாக அமையவுள்ள ஏற்றுமதி செயலாக்க வலய நடவடிக்கைகள் ஆரம்பம்

வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ள மூன்று ஏற்றுமதி செயலாக்க வலயங்களில் இரண்டு வலயங்களின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் காங்கேசன்துரை மற்றும் கிளிநொச்சி பரந்தன் ஆகிய ஏற்றுமதி செயலாக்க வலயங்களின் நடவடிக்கைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.   இந்த இரண்டு வலயங்களும் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டு அங்குரார்பணம் செய்யப்பட்டன. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், முதலீட்டு ஊகுவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோரால் ஏற்றுமதி செயலாக்க வலயத்தின் நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. வடக்கு

வடக்கின் பொருளாதாரத்திற்கு உந்து சக்தியாக அமையவுள்ள ஏற்றுமதி செயலாக்க வலய நடவடிக்கைகள் ஆரம்பம் Read More »

வடக்கின் இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் இன்று அங்குரார்ப்பணம்

வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ள மூன்று ஏற்றுமதி செயலாக்க வலயங்களில் இரண்டு வலயங்கள் 13/09/2024 அன்று உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டன. யாழ்ப்பாணம் காங்கேசன்துரை மற்றும் கிளிநொச்சி பரந்தன் ஆகிய ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் இன்று பெயரிடப்பட்டன . இந் நிகழ்வுகளில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களும், முதலீட்டு ஊகுவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம அவர்களும், முதலீட்டு பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டு கொண்டனர். இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்களிலும் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பில்

வடக்கின் இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் இன்று அங்குரார்ப்பணம் Read More »

சார்க் திரைப்பட தின நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலந்து சிறப்பித்தார்

சார்க் கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மத்திய கலாசார நிலையத்தில் நேற்று (11/09/2024) ஏற்பாடு செய்யப்பட சார்க் திரைப்பட தினம்  – 2024  நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்துச் சிறப்பித்தார். வடக்கு மாகாண பிரதம செயலாளர், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், இலங்கைக்கான நேபாள நாட்டு உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்

சார்க் திரைப்பட தின நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலந்து சிறப்பித்தார் Read More »

தெய்வீக சுகானுபவ கலை அரங்கத் தொடர்

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் வடக்கு மாகாண தொழிற்றுறை திணைக்களம் ஆகியன இணைந்து நடாத்திய தெய்வீக சுகானுபவம் கலை அரங்கத்தொடர் நிகழ்வுகள் 2024.08.21 ஆம் திகதி தொடக்கம் 2024.08.31ஆம் திகதி வரை மாலை 6.30மணி முதல் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள சங்கிலியன் தோப்பு வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. பதினொரு நாட்களும் வள்ளி திருமணம், பொம்மலாட்டம், கிராமியக் கலைக் கதம்பம், காத்தவராஜன் கூத்து, இசைச் சங்கமம், பண்டார

தெய்வீக சுகானுபவ கலை அரங்கத் தொடர் Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கும் இடையில் சந்திப்பு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்று (09/09/2024) சந்தித்து கலந்துரையாடினர். கௌரவ ஆளுநரின்  யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வடக்கு மாகாணத்தின் கள நிலவரங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என கௌரவ ஆளுநர் இதன்போது கூறினார். அமைதியான முறையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த கௌரவ

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கும் இடையில் சந்திப்பு Read More »