“இந்திய மீனவர்களின் இழுவைமடித் தொழிலால் வாழ்வாதாரம் பாதிப்பு: ஜனாதிபதியை நேரில் சந்திக்க வடக்கு மீனவர்கள் கோரிக்கை” – ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு
இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைமடி மீன்பிடி நடவடிக்கைகளால் வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பாதிப்புக்கள் தொடர்பாகவும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் சந்தித்துக் கலந்துரையாடுவது குறித்தும், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்குரிய மனு வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (10.12.2025) சந்தித்து இக்கோரிக்கைக் கடிதத்தைக் கையளித்தனர். பல்வேறு இடர்பாடுகளின் போதும் இந்திய அரசாங்கம் […]
