Balasingam Kajenderan

சேவை என்பது ஒருவரின் தேவையை நாம் முன்கூட்டியே அறிந்து செய்வதாகும். மனமிருந்தால் செய்ய விருப்பமிருந்தால் மக்கள் நலனுக்காக எதையும் செய்யலாம்.

கழிவுகளை தரம் பிரித்து தருமாறு உள்ளூராட்சி மன்றங்கள் கோரினாலும் எங்கள் மக்கள் அவ்வாறு செய்வதில்லை. எல்லாக் கழிவுகளையும் ஒன்றாகவே போடுகின்றார்கள். நீங்கள் போடுகின்றன கழிவுகளை தரம்பிரிப்பதும் மனிதர்களே என்பதை எங்கள் மக்கள் உணர்ந்து கொள்கின்றார்கள் இல்லை. அவர்களும் மனிதர்கள்தான் என்பதை உணர்ந்து கொண்டால் இவ்வாறு செய்யமாட்டார்கள். தரம் பிரித்து கழிவுகளை தராவிட்டால் அதை எடுக்கமாட்டோம் என்று உள்ளூராட்சி மன்றங்கள் சொன்னால், அந்தக் கழிவுகள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கட்டி, வீதியில் போட்டுவிட்டுச் செல்வார்கள். மக்கள் தாங்களாக உணர்வதன் ஊடாகவே […]

சேவை என்பது ஒருவரின் தேவையை நாம் முன்கூட்டியே அறிந்து செய்வதாகும். மனமிருந்தால் செய்ய விருப்பமிருந்தால் மக்கள் நலனுக்காக எதையும் செய்யலாம். Read More »

சட்டத்தை மதிக்கின்ற சமூகமாக, கண்ணியமான, ஒழுக்கமுள்ள சமூகமாக நாங்கள் மாறவேண்டும். அது தனி நபரிலிருந்து ஆரம்பித்து சமூகம் வரை மாற்றம் நீண்டு செல்ல வேண்டும். – ஆளுநர்

மாற்றத்தை ஏற்படுத்த முனையும்போது, ஏற்படுத்தும்போது அது கடினமானதாகத்தான் இருக்கும். ஆனால் எல்லோரும் ஒன்றிணைந்து விடாமுயற்சியுடன் முயன்றால் அந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ‘தூய்மை இலங்கை’ செயற்றிட்டத்தின் ‘இதயபூர்வமான யாழ்ப்பாணத்துக்கு’ என்னும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிகழ்வின் ஓர் அங்கமாக யாழ். மாவட்டப் பாடசாலை அதிபர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்று செவ்வாய்க்கிழமை (19.08.2025) நடைபெற்றது. விழிப்புணர்வுச் செயலமர்வை ஆரம்பித்து உரையாற்றிய ஆளுநர், அரசாங்கம்

சட்டத்தை மதிக்கின்ற சமூகமாக, கண்ணியமான, ஒழுக்கமுள்ள சமூகமாக நாங்கள் மாறவேண்டும். அது தனி நபரிலிருந்து ஆரம்பித்து சமூகம் வரை மாற்றம் நீண்டு செல்ல வேண்டும். – ஆளுநர் Read More »

‘தூய்மை இலங்கை’ செயற்றிட்டத்தின் கீழ், வடக்கு மாகாணத்தில் 9 பேருந்து நிலையங்கள் தூய்மைப்படுத்தல், புனரமைத்தலுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

‘தூய்மை இலங்கை’ செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக நாடு முழுவதும் 50 பேருந்து நிலையங்களை தூய்மைப்படுத்தல் மற்றும் புனரமைத்தல் செயற்றிட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மாகாணமட்ட குழுவின் முதலாவது கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட் கிழமை (18.08.2025) நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணம், நெல்லியடி, பளை, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, மன்னார், நானாட்டான், வவுனியா, வெங்கலச்செட்டிக்குளம் ஆகிய 9 பேருந்து நிலையங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப்

‘தூய்மை இலங்கை’ செயற்றிட்டத்தின் கீழ், வடக்கு மாகாணத்தில் 9 பேருந்து நிலையங்கள் தூய்மைப்படுத்தல், புனரமைத்தலுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன. Read More »

கௌரவ ஆளுநரை, ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் தலைமையிலான குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடினர்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் அ.அன்னராசா தலைமையிலான குழுவினர் இன்று திங்கட் கிழமை (18.08.2025) ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பில் தவிசாளரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதுடன் அது தொடர்பான மனுவும் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.

கௌரவ ஆளுநரை, ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் தலைமையிலான குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடினர். Read More »

பெண் சாதனையாளர்களுக்கான அரியாத்தை விருது வழங்கும் நிகழ்வு

எங்கள் அரச அலுவலர்களில் பலர் எல்லாவற்றுக்கும் பயந்து, துணிந்து முடிவெடுத்துச் செயற்பட முடியாதவர்களாக அல்லது ஊக்கமில்லாதவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள், இந்தப் பெண் சாதனையாளர்களின் அனுபவப்பகிர்வுகளைக் கேட்டு அவர்களின் துணிவு – பல தடைகளைத்தாண்டி சாதிக்கும் ஆற்றல் என்பவற்றை தெரிந்து கொள்ளவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பெண் சாதனையாளர்களுக்கான அரியாத்தை விருது வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை (16.08.2028) முல்லைத்தீவு மாவட்டச்

பெண் சாதனையாளர்களுக்கான அரியாத்தை விருது வழங்கும் நிகழ்வு Read More »

பண்டாரவன்னியன் ஞாபகார்த்த சதுரங்க போட்டி வடக்கு மாகாண ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், முல்லைத்தீவு மாவட்ட கல்விக்கும் அபிவிருத்திக்குமான நம்பிக்கை நிதியம், முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க சங்கம் ஆகியன இணைந்து முல்லைத்தீவு மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கு இடையே முதல் தடவையாக நடத்தும், தேசியவீரன் பண்டாரவன்னியனின் ஞாபகார்த்த முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க போட்டி முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை காலை (16.08.2028) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வை தொடக்கி வைத்து உரையாற்றிய ஆளுநர், சதுரங்க விளையாட்டில் ஈடுபடுவதால் கல்விக்கு எந்தவொரு

பண்டாரவன்னியன் ஞாபகார்த்த சதுரங்க போட்டி வடக்கு மாகாண ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read More »

“நீர் எங்கள் உயிர் நாடி” என்னும் தொனிப் பொருளிலான கண்காட்சியை ஆளுநர் ஆரம்பித்து வைத்தார்

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய பெரும் திருவிழா காலத்தில் ‘நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி’ என்னும் தொனிப்பொருளில், நல்லூர் பாரதியார் சிலைக்கு அண்மையாகவுள்ள நெசவு கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை மாலை (15.08.2025) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாளை சனிக்கிழமையிலிருந்து கண்காட்சி நிறைவு நாளான 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை வரையில் காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணி வரையில் கண்காட்சியை மக்கள் பார்வையிட

“நீர் எங்கள் உயிர் நாடி” என்னும் தொனிப் பொருளிலான கண்காட்சியை ஆளுநர் ஆரம்பித்து வைத்தார் Read More »

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பண்பாட்டு விழாவில் கௌரவ ஆளுநர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்

எமது பிரதேசங்களில் சமூகப்பிறழ்வுகள் கடந்த காலங்களில் திட்டமிட்ட ரீதியில் ஊக்குவிக்கப்பட்டன. ஆனால் எதிர்காலத்தில் அவ்வாறு நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என்று நான் நம்புகின்றேன். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா இன்று வெள்ளிக்கிழமை (15.08.2025) அமரர் வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் அரங்கில் பிரதேச செயலர் த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆளுநர் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு கலைஞர்களுக்கான விருதுகளையும் வழங்கிக் கௌரவித்தார். ஆளுநர் தனது உரையில்,

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பண்பாட்டு விழாவில் கௌரவ ஆளுநர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார் Read More »

நாம் வாசிப்பதால் ஒருபோதும் குறைந்துவிடப்போவதில்லை. நம் அறிவுதான் விருத்தியடைகின்றது – கௌரவ ஆளுநர்

புத்தகங்களின் முக்கியத்துவத்தை நாம், யாழ்ப்பாண நூலக எரிப்பிலிருந்து புரிந்துகொள்ளலாம். யாழ்ப்பாணத்தில் எவ்வளவோ கட்டடங்கள் இருந்தும் அன்று ஏன் நூல் நிலையத்தை பல ஆயிரம் புத்தகங்களோடு தீயிட்டு எரித்தார்கள் என்பதைச் சிந்தித்தோம் என்றால், புத்தகங்களின் அருமை எமக்குத் தெரியும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணத் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில், யாழ்ப்பாணம் வர்த்தக தொழில்துறை மன்றமும், எங்கட புத்தகங்கள் அமைப்பும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள இரண்டாவது சர்வதேச புத்தகக் கண்காட்சியை இன்று வெள்ளிக்கிழமை

நாம் வாசிப்பதால் ஒருபோதும் குறைந்துவிடப்போவதில்லை. நம் அறிவுதான் விருத்தியடைகின்றது – கௌரவ ஆளுநர் Read More »

தனிநபர் ஒவ்வொருவரிலிருந்தும் மாற்றம் ஆரம்பிக்கப்படவேண்டும். இதுவே ‘தூய்மை இலங்கை’ என்ற திட்டத்தின் அடிநாதமாகும் – கௌரவ ஆளுநர்

சட்டத்தை மதிக்கின்ற சமூகமாக நாங்கள் மாறவேண்டும். தனிநபர் ஒவ்வொருவரிலிருந்தும் மாற்றம் ஆரம்பிக்கப்படவேண்டும். அதுவே ‘தூய்மை இலங்கை’ என்ற திட்டத்தின் அடிநாதமாக இருக்கின்றது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ‘தூய்மை இலங்கை’ (Clean Srilanka) எண்ணக் கருவை ஊக்குவிக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் – நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவுடன் இணைந்ததாக ‘இதயபூர்வமான யாழ்ப்பாணத்துக்கு’ என்ற தொனிப்பொருளில் அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாக ஜனாதிபதி செயலகம், வடக்கு

தனிநபர் ஒவ்வொருவரிலிருந்தும் மாற்றம் ஆரம்பிக்கப்படவேண்டும். இதுவே ‘தூய்மை இலங்கை’ என்ற திட்டத்தின் அடிநாதமாகும் – கௌரவ ஆளுநர் Read More »