Balasingam Kajenderan

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இ.சந்திரசேகர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் இணைத்தலைவருமான நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் இன்று வியாழக்கிழமை (06.11.2025) மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரனின் வரவேற்புரையுடன் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஆரம்பமானது. தொடர்ந்து ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் ஆரம்ப உரை இடம்பெற்றது. அதன் பின்னர் இணைத்தலைவர் உரையாற்றிய ஆளுநர், ஆண்டு நிறைவடைவதற்கு இன்னமும் ஆறு வாரங்கள் […]

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் இடம்பெற்றது. Read More »

எங்கள் எதிர்காலச் சந்ததியை வளர்த்தெடுக்கும் நிறுவனங்கள்தான் பாடசாலைகள். மாணவர்களுக்கு நாங்கள் கல்விக்கு மேலதிகமாக தலைமைத்துவப்பண்பையும் வளர்த்துவிட வேண்டும். – கௌரவ ஆளுநர்

மாணவர்களிடத்தில் கல்வியிலும் இணைபாடவிதானச் செயற்பாடுகளிலும் போட்டி தேவை. ஆனால் பொறாமை இருக்கக் கூடாது. நாங்களும் நன்றாக வரவேண்டும். மற்றவர்களும் நன்றாக வரவேண்டும். அப்போதுதான் எமது சமூகம் வளர்ச்சியடையும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவுரை வழங்கினார். கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் பி.ரவீந்திரநாதன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை காலை (06.11.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், மாணவர்களுக்கான

எங்கள் எதிர்காலச் சந்ததியை வளர்த்தெடுக்கும் நிறுவனங்கள்தான் பாடசாலைகள். மாணவர்களுக்கு நாங்கள் கல்விக்கு மேலதிகமாக தலைமைத்துவப்பண்பையும் வளர்த்துவிட வேண்டும். – கௌரவ ஆளுநர் Read More »

தற்போது ஒரு சிலர் மாத்திரமே எமது சமூகத்தை மீட்டெடுப்பதற்கு அர்ப்பணிப்புடனும் அக்கறையுடனும் செயற்படுகின்றனர் – கௌரவ ஆளுநர்

கட்டுக்கோப்பாக வாழ்ந்த எமது சமூகம் இன்று அவ்வாறில்லாமல் இருக்கின்றது. சமூகத்தின் மீதான அக்கறை என்பதும் குறைந்து செல்கின்றது. ஒரு சிலர் மாத்திரமே எமது சமூகத்தை மீட்டெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் – அக்கறையுடன் செயற்படுகின்றனர் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். சுவிற்சர்லாந்து உறவுகளும் நித்திலம் கலையகமும் இணைந்து நடத்திய கலைஞர் மதிப்பளிப்பு மற்றும் திரையிசை வெளியீடு என்பன முகமாலை சிவபுர வளாகத்தில் நேற்று புதன்கிழமை மாலை (05.11.2025) மூத்த சட்டத்தரணி சோமசுந்தரம் தேவராஜா தலைமையில்

தற்போது ஒரு சிலர் மாத்திரமே எமது சமூகத்தை மீட்டெடுப்பதற்கு அர்ப்பணிப்புடனும் அக்கறையுடனும் செயற்படுகின்றனர் – கௌரவ ஆளுநர் Read More »

யாழ். வர்த்தக சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் கௌரவ ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது

2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண நகரை அழகுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு யாழ்ப்பாண வர்த்தக சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடனான சந்திப்பின்போது உறுதியளிக்கப்பட்டது. வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை (04.11.2025) நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் வர்த்தக சங்கத்தால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டு அவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. யாழ்ப்பாணம்

யாழ். வர்த்தக சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் கௌரவ ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது Read More »

யாழ். தொழில்நுட்பவியல் கல்லூரியின் தொழில் கல்வி கண்காட்சியை கௌரவ ஆளுநர் ஆரம்பித்து வைத்தார்.

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் தொழில் கல்வி கண்காட்சியையும் திறந்த நாள் நிகழ்வையும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை (04.11.2025) ஆரம்பித்து வைத்தார். இதன் பின்னர் கல்லூரியின் பணிப்பாளர் ஏ.நற்குணேஸ்வரன் அவர்களால் கல்லூரியில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பாகவும் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் ஆளுநருக்கு எடுத்துக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து கண்காட்சிக் கூடங்களை ஆளுநர் பார்வையிட்டார். கண்காட்சியை பெருமளவு பாடசாலை மாணவர்களும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.  

யாழ். தொழில்நுட்பவியல் கல்லூரியின் தொழில் கல்வி கண்காட்சியை கௌரவ ஆளுநர் ஆரம்பித்து வைத்தார். Read More »

வடக்கு மாகாணத்தில் யாழ். மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் நீளமான வீதிகள் பல திருத்தப்பட வேண்டியுள்ளன. – கௌரவ ஆளுநர்

மழை காலங்களில் மக்கள் பயணிக்க முடியாத நிலையில் காணப்பட்ட வவுனியா மாவட்டத்தின் பிரமனாலன்குளம் – பரப்புக்கடந்தான் வீதியில், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக அமைக்கப்பட்ட இரண்டு ஆற்றுச்சருக்கைகளை (causeway) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று சனிக்கிழமை காலை (01.11.2025) மக்கள் பாவனைக்கு கையளித்தார். மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில், ரூ. 45.49 மில்லியனில் இந்த இரண்டு ஆற்றுச்சருக்கைகளும் முழுமையாக வீதி அபிவிருத்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட அலுவலகத்தின் மேற்பார்வையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்தில் யாழ். மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் நீளமான வீதிகள் பல திருத்தப்பட வேண்டியுள்ளன. – கௌரவ ஆளுநர் Read More »

அனலைதீவு, எழுவைதீவு பிரதேச கல்வி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

அனலைதீவு, எழுவைதீவு பிரதேச கல்வி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (31.10.2025) நடைபெற்றது. இது தொடர்பான முதலாவது கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரன், மேற்படி பிரதேசங்களுக்கு நேரடியாக களப் பயணம் மேற்கொண்டு தனது அவதானிப்புக்களை சமர்ப்பித்திருந்தார். அதற்கு அமைவாக எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் தொடர்பிலும் இன்றைய கலந்துரையாடலில் ஆராயப்பட்டது. அத்துடன் அடுத்த ஆண்டு

அனலைதீவு, எழுவைதீவு பிரதேச கல்வி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

இலங்கையில் வளமுள்ள மாகாணமான வடக்கு மாகாணம், வறுமையிலும் முன்னணியில் இருக்கின்றது – கௌரவ ஆளுநர்

விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணியிலுள்ள இந்தோனேஷpயா தனது அனுபவங்களை வடக்கு மாகாணத்துடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், இலங்கைக்கான இந்தோனேஷியத் தூதுவர் டெவி குஸ்டினா டோபிங் அவர்களிடம் கோரிக்கை விடுத்தார். இலங்கைக்கான இந்தோனேஷியத் தூதுவர், பிரதித்தூதுவர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர், வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் (31.10.2025) சந்தித்துக் கலந்துரையாடினர். வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் மற்றும் சவால்கள் தொடர்பில் எடுத்துரைத்த ஆளுநர், தற்போதைய

இலங்கையில் வளமுள்ள மாகாணமான வடக்கு மாகாணம், வறுமையிலும் முன்னணியில் இருக்கின்றது – கௌரவ ஆளுநர் Read More »

வைத்திய நிபுணர் மலரவனால் எழுதப்பட்ட “தெளிந்த பார்வை, ஒளிமயமான எதிர்காலம்” என்ற நூல் ஆளுநரால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கண்பரிசோதனைகளை நடத்தி தேவையான மாணவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகளை வழங்கி இலங்கையில் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமான செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக முன்பள்ளி மற்றும் அடுத்த ஆண்டு தரம் 1 இல் இணையும் மாணவர்களுக்கான கண்பரிசோதனை நடவடிக்கைகளையும் பல தரப்பினருடன் இணைந்து முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கான, ‘நகுலேஸ்வரி வாசுதேவன் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்ணாடி விநியோகத் திட்டம்’

வைத்திய நிபுணர் மலரவனால் எழுதப்பட்ட “தெளிந்த பார்வை, ஒளிமயமான எதிர்காலம்” என்ற நூல் ஆளுநரால் வெளியிட்டு வைக்கப்பட்டது. Read More »

புங்குடுதீவில் ‘அபிவிருத்தி நோக்கிய பயணம் – புங்குடுதீவு 2025’ என்னும் தொனிப்பொருளில் நடமாடும் சேவை நடைபெற்றது.

‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு எதிராக மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை நாமும் சரிவரப் பயன்படுத்தி எமது பிரதேசத்திலும் உயிர்கொல்லி போதைப்பொருளை அடியோடு ஒழிக்கவேண்டும். இளைய சமூகத்தை அதிலிருந்து பாதுகாப்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மக்களை நோக்கிய நிர்வாகம் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் சந்திப்பு, ‘அபிவிருத்தி

புங்குடுதீவில் ‘அபிவிருத்தி நோக்கிய பயணம் – புங்குடுதீவு 2025’ என்னும் தொனிப்பொருளில் நடமாடும் சேவை நடைபெற்றது. Read More »