எந்தவொரு நிறுவனத்தினதும் வளர்ச்சிப் பாதைக்கு, அதன் தலைமைத்துவமும் நிர்வாகத்தினரின் ஒற்றுமையுமே மிக அவசியமானதாகும். – கௌரவ ஆளுநர்
சமூகமாக இணைந்து ஒற்றுமையாகச் செயற்பட்டால் எப்படிச் சாதிக்க முடியும் என்பதற்கு நீங்கள் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றீர்கள். அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் இங்கிருந்து மாணவர்களை அனுப்பியுள்ள நீங்கள், தற்போது மருத்துவபீடத்துக்கும் மாணவர்களை அனுப்பியுள்ளமை பெருமைக்குரியதாகும். உங்களின் இந்தச் சிறப்பான முயற்சிகளை ஒருபோதும் கைவிடாதீர்கள் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டு விழாவும், சாதனை மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் கலைமகள் கலையரங்கில் கழகத் தலைவர் நீலவண்ணன் […]
