Balasingam Kajenderan

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவில், சந்திரன் நகர் மாதிரிக் கிராமத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு .

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவில், சந்திரன் நகர் மாதிரிக் கிராமத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (28.05.2025) இடம்பெற்றது. இந்திய அரசாங்கத்தின் 5 லட்சம் ரூபா நிதியுதவியும், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஒரு லட்சம் ரூபா பங்களிப்புடனும் 24 வீடுகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளை, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு கௌரவ அமைச்சர் அனுர கருணாதிலக, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், […]

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவில், சந்திரன் நகர் மாதிரிக் கிராமத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு . Read More »

இந்திய துணைத்தூதரக அதிகாரி அமரர் பிரபாகரன் அவர்களின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்

இந்திய துணைத்தூதரக அதிகாரி அமரர் பிரபாகரன் சச்சிதானந்தக் குருக்கள் அவர்களின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று புதன்கிழமை (28.05.2025) நேரில் அஞ்சலி செலுத்தினார். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டிருந்த சமயம் ஆளுநர் அஞ்சலி செலுத்தியதுடன், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய துணைத்தூதரக அதிகாரி அமரர் பிரபாகரன் அவர்களின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார் Read More »

உலக வங்கியின் இலங்கை நாட்டுக்கான செயற்பாட்டு முகாமையாளர், செயற்றிட்ட தலைவர் உள்ளிட்ட உலக வங்கிக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினர்.

கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வடக்கு – கிழக்கு மாகாணங்களை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தபோதும், கொழும்பிலுள்ள சில திணைக்களங்களின் அதிகாரிகள் அவற்றுக்கு முட்டுகட்டைபோடும் விதத்தில் செயற்படுகின்றனர் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சுட்டிக்காட்டினார். உலக வங்கியின் இலங்கை நாட்டுக்கான செயற்பாட்டு முகாமையாளர் அபிட் கலி செயற்றிட்ட தலைவர் காயத்திரி சிங் உள்ளிட்ட உலக வங்கிக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (28.05.2025) சந்தித்துக்

உலக வங்கியின் இலங்கை நாட்டுக்கான செயற்பாட்டு முகாமையாளர், செயற்றிட்ட தலைவர் உள்ளிட்ட உலக வங்கிக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினர். Read More »

நோர்வேயின் பிரதித் தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த பாதைகள் விடுவிக்கப்படுதல் மற்றும் காணிகள் விடுவிக்கப்படும்போது தென்பகுதியிலுள்ள சில அரசியல்வாதிகள் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் நிலைமை இப்போதும் காணப்படுவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இலங்கைக்கான நோர்வேயின் பிரதித் தூதுவர் மார்ரைன் அம்டால் பொத்தெமுக்கு சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள நோர்வேயின் பிரதித் தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (27.05.2025) சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில்

நோர்வேயின் பிரதித் தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். Read More »

3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியில், 3 ஆண்டுகளுக்கு முன்னெடுக்கப்படவுள்ள ‘க்ரோ’ (GROW) திட்டத்தின் அறிமுக நிகழ்வு

3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியில், 3 ஆண்டுகளுக்கு முன்னெடுக்கப்படவுள்ள ‘க்ரோ’ (GROW) திட்டத்தின் அறிமுக நிகழ்வு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில், இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்ரீபன்ஸ், இலங்கைக்கான நோர்வேயின் பிரதித் தூதுவர் மார்ரைன் அம்டால் பொத்தெம் ஆகியோரின் பங்கேற்புடன் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (27.05.2025) நடைபெற்றது. இந்தத் திட்டத்தின் பங்காளர்களாக வடக்கு மாகாண சபையும், சர்வதேச தொழிலாளர் நிறுவனமும் செயற்படவுள்ளன. இதன் அறிமுக நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர்,

3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியில், 3 ஆண்டுகளுக்கு முன்னெடுக்கப்படவுள்ள ‘க்ரோ’ (GROW) திட்டத்தின் அறிமுக நிகழ்வு Read More »

இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்ரீபன்ஸூக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு

அரசாங்கத்துக்கு தவறான தகவல்களை வழங்கி சில திணைக்களத்தின் அதிகாரிகள் செயற்படுகின்றனர் எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அதனால் வடக்கு மாகாணம் பெருமளவு பாதிப்பை இன்றும் எதிர்கொண்டிருக்கின்றது எனக் குறிப்பிட்டார். இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்ரீபன்ஸூக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (27.05.2025) நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் ஆளுநர் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவுஸ்திரேலியத் தூதுவருக்கு சுட்டிக்காட்டினார். முதலில், மக்களின் மீள்குடியமர்வு மற்றும் காணிகள் விடுவிப்புத்

இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்ரீபன்ஸூக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களை, வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி தனுஜா முருகேசன் மரியாதை நிமித்தமாக ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி தனுஜா முருகேசன் இன்று செவ்வாய்க்கிழமை (27.05.2025) மரியாதை நிமித்தமாக ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். வடக்கு மாகாண பிரதம செயலாளராக கடந்த செவ்வாய்க்கிழமை (20.05.2025) ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து நியமனம் பெற்ற திருமதி தனுஜா முருகேசன், கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களை, வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி தனுஜா முருகேசன் மரியாதை நிமித்தமாக ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். Read More »

யாழ்ப்பாண பிரதேச செயலக நலன்புரி சங்கத்தால் நான்காவது ஆண்டாகவும் நடத்தப்பட்ட யாழ்பாடி சதுரங்கச் சுற்றுப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு

இன்றைய பிள்ளைகள் அதிகமாக அலைபேசியுடனே நேரத்தைச் செலவிடுகின்றனர். அத்தகைய பிள்ளைகளுக்கு இவ்வாறு சதுரங்கத்தைப் பழக்கி போட்டியில் பங்குபற்றச் செய்த பெற்றோர் பாராட்டுக்குரியவர்கள். சதுரங்கம் விளையாடுவதால் மூளை வளர்ச்சியடைகின்றது. அதை ஊக்குவித்த பெற்றோரை வாழ்த்துகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாண பிரதேச செயலக நலன்புரி சங்கத்தால் 4ஆவது ஆண்டாகவும் நடத்தப்பட்ட யாழ்பாடி சதுரங்கச் சுற்றுப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 26.05.2025 அன்று திங்கட்கிழமை பிரதேச செயலர்

யாழ்ப்பாண பிரதேச செயலக நலன்புரி சங்கத்தால் நான்காவது ஆண்டாகவும் நடத்தப்பட்ட யாழ்பாடி சதுரங்கச் சுற்றுப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு Read More »

புங்குடுதீவு மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, வடக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் இ.இளங்கோவன் அவர்களின் மணிவிழாவும் சேவைநலன் பாராட்டு விழாவும்

புங்குடுதீவு மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, வடக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் இ.இளங்கோவன் அவர்களின் மணிவிழாவும் சேவைநலன் பாராட்டு விழாவும் அம்பலவாணர் கலையரங்கில் 25.05.2025 அன்று ஞாயிற்றுக்கிழமை பேராசிரியர் கா.குகபாலன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் பிரதம செயலர் இ.இளங்கோவன் மற்றும் அவர் தம் பாரியார் ஆகியோர் புங்குடுதீவு ஸ்ரீ கணேசா வித்தியாலயத்திலிருந்து விருந்தினர்கள் சகிதம் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் நிகழ்வு மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இதன்போது யாழ். நகரப் பகுதியைச் சேர்ந்த நூறு மாணவர்களால் மலர்மாலை அணிவித்து

புங்குடுதீவு மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, வடக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் இ.இளங்கோவன் அவர்களின் மணிவிழாவும் சேவைநலன் பாராட்டு விழாவும் Read More »

இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தை கட்டியெழுப்புவதற்கு எதிர்காலத்தில் உயர்பதவிகளில் அமரப்போகும் இன்றைய மாணவர்கள், கல்விக்கு மேலதிகமாக தங்கள் தலைமைத்துவப்பண்புகளையும் வளர்த்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் இந்தச் சமூகத்துக்கு தேவையானவர்களாக நீங்கள் மாறமுடியும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு யாழ். மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலர் ம.பிரதீபன் தலைமையில் 25.05.2025 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற

இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. Read More »