இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சங்கம், றொட்டரி – யாழ்ப்பாணத்துடன் இணைந்து வட மாகாணத்தில் ஏற்றுமதிக்குத் தயாரான உற்பத்தியாளர்களை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்
ஏற்றுமதியை அதிகரிக்காமல் வருமானத்தை உயர்த்த முடியாது. ஏற்றுமதியை அதிகரிக்கவேண்டுமானால், வடக்கு மாகாணத்தின் மிகச்சிறந்த வளமாக உள்ள விவசாயம் மற்றும் கடற்றொழிலின் உற்பத்திப் பொருட்களை பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகள் உருவாக்கப்படவேண்டும். தொழிற்சாலைகள் உருவாக்கப்படுவதன் ஊடாக எமது வேலைவாய்ப்பு பிரச்சினையையும் தீர்க்கக் கூடியதாக இருக்கும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சங்கம், றொட்டரி – யாழ்ப்பாணத்துடன் இணைந்து வட மாகாணத்தில் ஏற்றுமதிக்குத் தயாரான உற்பத்தியாளர்களை மேம்படுத்துவது தொடர்பான […]
