Balasingam Kajenderan

‘இலங்கையில் தகவல் சீர்குலைவு ஆராய்ச்சியின் தொடக்கம் மற்றும் டிஜிட்டல் மீள்தன்மையை உருவாக்குவதற்கான மன்றம்’ என்ற நிகழ்வு

தவறான தகவல்கள் என்ற விடயம் முன்னைய காலத்திலிருந்தே இருந்து வந்தாலும், டிஜிட்டல் யுகம் அதன் அணுகலையும் வேகத்தையும் பெருக்கியுள்ளது, இதனால் பொய்யிலிருந்து உண்மையைப் பிரிப்பது மிகவும் சவாலானதாக மாறியுள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் லேர்ன்ஏசியா (LIRNEasia) நிறுவனமும் இணைந்து நடத்திய ‘இலங்கையில் தகவல் சீர்குலைவு ஆராய்ச்சியின் தொடக்கம் மற்றும் டிஜிட்டல் மீள்தன்மையை உருவாக்குவதற்கான மன்றம்’ என்ற நிகழ்வு நோர்த்கேட் ஹொட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை (01.07.2025) நடைபெற்றது. […]

‘இலங்கையில் தகவல் சீர்குலைவு ஆராய்ச்சியின் தொடக்கம் மற்றும் டிஜிட்டல் மீள்தன்மையை உருவாக்குவதற்கான மன்றம்’ என்ற நிகழ்வு Read More »

வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபையையும் பார்வையிட்டார்

வவுனியா மாவட்டத்துக்கு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (28.06.2025) பயணம் மேற்கொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், பயணத்தின் ஓர் அங்கமாக வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபையையும் பார்வையிட்டார். இதன்போது சபையின் தவிசாளர் எஸ்.சி.வீரக்கோன், ஆளுநர் மற்றும் கௌரவ பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், வவுனியா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரன் ஆகியோரை வரவேற்றார். வவுனியா பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தை ஆளுநர் பார்வையிட்டார். நெல்சிப் திட்டத்தில் அமைக்கப்பட்டு

வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபையையும் பார்வையிட்டார் Read More »

வவுனியாவில் கட்டப்பட்டு மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவது தொடர்பான கலந்துரையாடல்

வவுனியாவில் கட்டப்பட்டு மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவதென்று வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நா.வேதநாயகன் மற்றும் கூட்டுறவுத்துறை கௌரவ பிரதி அமைச்சரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டச் செயலகத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (28.06.2025) அன்று விசேட கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், வவுனியா மாவட்டச் செயலர் சரத் சந்திர, வவுனியா மாநகர

வவுனியாவில் கட்டப்பட்டு மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவது தொடர்பான கலந்துரையாடல் Read More »

உலக வங்கியால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளின் தொடர் நடவடிக்கைக்காக இணைப்புக்குழுவொன்று இன்றைய கலந்துரையாடலில் முன்மொழியப்பட்டுள்ளது.

உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினருக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் கௌரவ அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, சுனில் ஹந்துன்நெத்தி, இ.சந்திரசேகரன், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.சிறீபவானந்தராஜா, ஜெ.ரஜீவன், க.திலகநாதன், ம.ஜெகதீஸ்வரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கின் 5 மாவட்டங்களினதும் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (29.06.2025) நடைபெற்றது. ஆளுநர் தனது வரவேற்புரையில், அதிமேதகு ஜனாதிபதி

உலக வங்கியால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளின் தொடர் நடவடிக்கைக்காக இணைப்புக்குழுவொன்று இன்றைய கலந்துரையாடலில் முன்மொழியப்பட்டுள்ளது. Read More »

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை, யாழ். மாவட்ட விமானப் படைத்தளபதி சந்தித்துக் கலந்துரையாடினார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, யாழ். மாவட்ட விமானப் படைத்தளபதியாகப் பொறுப்பேற்ற குறூப் கப்டன் செனவிரத்ன ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (27.06.2025) சந்தித்துக் கலந்துரையாடினார்.

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை, யாழ். மாவட்ட விமானப் படைத்தளபதி சந்தித்துக் கலந்துரையாடினார். Read More »

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 14ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு பரந்தளவில் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களைச் சந்தித்த தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்தார். தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர், தென்னை பயிர்ச் செய்கை சபையின் பொதுமுகாமையாளர் விஜயசிங்க, தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் ரி.வைகுந்தன் உள்ளிட்ட

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை Read More »

இலங்கையின் ஒன்பது மாகாணங்களுக்கும் இடையில் ஒரே சீரான மாகாண நிதி ஒழுங்கு விதிகளை உருவாக்குதல் தொடர்பான பயிற்சிப்பட்டறை

இலங்கையின் ஒன்பது மாகாணங்களுக்கும் இடையில் ஒரே சீரான மாகாண நிதி ஒழுங்கு விதிகளை உருவாக்குதல் தொடர்பான பயிற்சிப்பட்டறைத் தொடரின் 4ஆவது அமர்வு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் கிளிநொச்சியிலுள்ள முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகில் இன்று வெள்ளிக்கிழமை (27.06.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆளுநருடன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் அவர்களும் நிகழ்வில் பங்கேற்றார். இந்த நிகழ்வில் ஒன்பது மாகாணங்களையும் சேர்ந்த பிரதிப் பிரதம செயலாளர் – நிதி, திட்டமிடல், நிர்வாகம்

இலங்கையின் ஒன்பது மாகாணங்களுக்கும் இடையில் ஒரே சீரான மாகாண நிதி ஒழுங்கு விதிகளை உருவாக்குதல் தொடர்பான பயிற்சிப்பட்டறை Read More »

தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் கலந்துரையாடல்

தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (26.06.2025) நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் தெருநாய்களால் ஏற்படும் பாதிப்புக்கள் அதிகரித்துள்ளமை தொடர்பிலும், இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு கடந்த காலங்களில் பல்வேறு திணைக்களங்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும் போதியளவு முன்னேற்றம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இது தொடர்பில் ஒருங்கிணைந்த வேலைத் திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். வடக்கு

தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் ராசிக குமாரவுக்கும் இடையிலான சம்பிரதாயபூர்வ சந்திப்பு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் ராசிக குமாரவுக்கும் இடையிலான சம்பிரதாயபூர்வ சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை (26.06.2025) நடைபெற்றது. சந்திப்பின்போது வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த ஆண்டு விவசாயத் தேவைக்காக விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கு அண்மையாக அமைந்துள்ள இராணுவ வேலியை பின்நகர்த்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்குரிய நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாத போதிலும் தற்காலிக பின்னரங்க வேலியை அமைக்கப்பட்டு வருவதாகவும் ஆளுநருக்கு

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் ராசிக குமாரவுக்கும் இடையிலான சம்பிரதாயபூர்வ சந்திப்பு Read More »

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான குழுவினருக்கும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 25.06.2025 அன்று புதன்கிழமை மாலை சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், முல்லைத்தீவு மாவட்டச்

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் Read More »