சட்டத்தை மதிக்கின்ற சமூகமாக, கண்ணியமான, ஒழுக்கமுள்ள சமூகமாக நாங்கள் மாறவேண்டும். அது தனி நபரிலிருந்து ஆரம்பித்து சமூகம் வரை மாற்றம் நீண்டு செல்ல வேண்டும். – ஆளுநர்
மாற்றத்தை ஏற்படுத்த முனையும்போது, ஏற்படுத்தும்போது அது கடினமானதாகத்தான் இருக்கும். ஆனால் எல்லோரும் ஒன்றிணைந்து விடாமுயற்சியுடன் முயன்றால் அந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ‘தூய்மை இலங்கை’ செயற்றிட்டத்தின் ‘இதயபூர்வமான யாழ்ப்பாணத்துக்கு’ என்னும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிகழ்வின் ஓர் அங்கமாக யாழ். மாவட்டப் பாடசாலை அதிபர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்று செவ்வாய்க்கிழமை (19.08.2025) நடைபெற்றது. விழிப்புணர்வுச் செயலமர்வை ஆரம்பித்து உரையாற்றிய ஆளுநர், அரசாங்கம் […]
