Balasingam Kajenderan

49ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வடக்கு மாகாணம் புதிய சாதனை

உதைபந்தாட்டத்தில் 4வது தடவையாகவும் சம்பியன் கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனை 8 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தமாக 23 பதக்கங்களைத் கைப்பற்றியது.! இலங்கையின் 49 வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வுகள் காலி தடல்ல விளையாட்டரங்கில் ஆகஸ்ட் மாதம் 29,30, 31 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இதில் வடக்கு மாகாண வீர வீராங்கனைகள் 8 தங்கம் 6 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தமாக 23 பதக்கங்களை பெற்று வடக்கு மாகாணத்திற்கு […]

49ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வடக்கு மாகாணம் புதிய சாதனை Read More »

பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல் நடைபெற்றது.

பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை மாலை (17.09.2025) நடைபெற்றது. நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் அமைக்கப்பட்ட சிகிச்சைப் பிரிவை இயக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் மருத்துவமனையின் பணிப்பாளரை பாராட்டுவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், அவரைப்போன்று ஏனைய மருத்துவமனைப் பணிப்பாளர்களும் செயற்பட முன்வர வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் ஆளணி மற்றும் ஏனைய நிர்வாகத்

பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

ஆசிரிய ஆளணி சீராக்கத்தை முன்னெடுப்பதற்குரிய முழுப்பொறுப்பும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்குரியதே. அவர்கள் தங்கள் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் – ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் சில பாடங்களுக்கான ஆசிரிய ஆளணி மேலதிகம் என்று தரவுகளில் குறிப்பிடப்படுகின்றது. அப்படியானால் அந்தப் பாடங்களுக்கு வடக்கிலுள்ள எந்தவொரு பாடசாலையிலும் வெற்றிடம் இருக்கக் கூடாது. நடைமுறையில் அவ்வாறான நிலைமை இல்லை. இந்த ஆசிரிய ஆளணி சீராக்கத்தை முன்னெடுப்பதற்குரிய முழுப்பொறுப்பும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்குரியதே. அவர்கள் தங்கள் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றி ஒத்துழைக்கவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார். வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின்

ஆசிரிய ஆளணி சீராக்கத்தை முன்னெடுப்பதற்குரிய முழுப்பொறுப்பும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்குரியதே. அவர்கள் தங்கள் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் – ஆளுநர் Read More »

வடக்கு மாகாணத்தில் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துக்களை, விலங்கு விசர் நோயைக் கட்டுப்படுத்தும் முகமாக செயற்றிட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடக்கு மாகாண உள்ளூராட்சி, விவசாய மற்றும் சுகாதார அமைச்சுக்கள் இணைந்து முன்னெடுக்கும், பெண் நாய்களுக்கு இலவசமாக கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் செயற்றிட்டமானது பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகளின் பூரண ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த வாரத்தில் மாத்திரம் 257 பெண் நாய்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்யப்பட்டுள்ளது எனவும் இந்த நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும்

வடக்கு மாகாணத்தில் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துக்களை, விலங்கு விசர் நோயைக் கட்டுப்படுத்தும் முகமாக செயற்றிட்டம் வகுக்கப்பட்டுள்ளது. Read More »

கட்டுமானங்களால் மாத்திரம் கல்வியை மேம்படுத்த முடியாது. இதயசுத்தியுடன் பணியாற்றினால் மாத்திரமே மாற்றங்களை உருவாக்கலாம் – ஆளுநர்

அனலைதீவு மற்றும் எழுவைதீவு பிரதேசங்களின் கல்வி மேம்பாட்டுக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (16.09.2025) நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த புலம்பெயர் தேசங்களில் வதியும் சிலர் தன்னார்வமாக இந்த முயற்சியில் இணைந்துள்ளனர். கடந்த காலங்களிலும் இவ்வாறான முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகள் அடையமுடியவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நம்பிக்கைக்குரியவர்களை உள்வாங்கி தொழில்முறை

கட்டுமானங்களால் மாத்திரம் கல்வியை மேம்படுத்த முடியாது. இதயசுத்தியுடன் பணியாற்றினால் மாத்திரமே மாற்றங்களை உருவாக்கலாம் – ஆளுநர் Read More »

“ராமாயணா” கலாசார மாநாடு, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு பழமையானது. அந்த ஆழமான தொடர்பை இராமாயணத்தை விட வேறு எந்தவொரு இதிகாசமும் தெளிவாக விளக்கவில்லை. இராமாயணத்துடன் தொடர்புடைய பல்வேறு இடங்கள் இன்றும் எங்கள் நிலத்தில் உள்ளன. இதனைப் பயன்படுத்தி கலாசார சுற்றுலாவை மேம்படுத்தவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகமும், (Dhanur) இவென்டர்ஜி அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘ராமாயணா’ கலாசார மாநாடு, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14.09.2025)

“ராமாயணா” கலாசார மாநாடு, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. Read More »

தென்கொரிய முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்

தென்கொரியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை காலை (10.09.2025) இடம்பெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், தென்கொரியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கான ஆர்வத்தை தெரியப்படுத்தியுள்ளனர். அவர்கள் இங்குள்ள நிறுவனங்கள் ஊடாகவே தமது முதலீட்டை மேற்கொள்வதற்கு விரும்புகின்றனர். இங்குள்ள

தென்கொரிய முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர் Read More »

“போசாக்கு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் ஆரம்பகால கற்றல் குறித்த உலகளாவிய கருத்தரங்கு – ஒரு குழந்தையின் எதிர்காலத்துக்கான இணைப்பு”

வடக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு பிள்ளைகளினதும் அடிப்படை உரிமைகளையும் அவர்களது தேவைகளையும் வசதிகளையும் உறுதிப்படுத்தவேண்டியது எங்கள் அனைவரினதும் பொறுப்பாகும். அதேநேரம் அவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்கு பலர் தன்னார்வமாக தயாராக உள்ளபோதும் அது ஒருங்கிணைந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பின் ஊடாக கிடைக்கப்பெறுவதற்குரிய ஏற்பாடுகளை நாம் துரிதமாகச் செய்யவேண்டியிருக்கின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார். இந்தியத் துணைத்தூதரகமும், போலோ ஆய்வகமும் இணைந்து ‘போசாக்கு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் ஆரம்பகால கற்றல் குறித்த உலகளாவிய கருத்தரங்கு – ஒரு

“போசாக்கு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் ஆரம்பகால கற்றல் குறித்த உலகளாவிய கருத்தரங்கு – ஒரு குழந்தையின் எதிர்காலத்துக்கான இணைப்பு” Read More »

குளங்களை தூர்வாருதலுடன் தொடர்புடைய சகல திணைக்களங்களையும் ஒருங்கிணைத்து கலந்துரையாடி நிரந்தரப் பொறிமுறையை உருவாக்குமாறு கௌரவ ஆளுநர் பணிப்புரை

யாழ். மாவட்டத்திலுள்ள குளங்களை தொடர்ச்சியாக தூர்வாருவது தொடர்பான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பிலும், பரீட்சார்த்தமாக தூர்வாருதலை உடனடியாக நடைமுறைப்படுத்தவது தொடர்பாகவும் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை (08.09.2025) நடைபெற்றது. யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் செயன்முறையின் ஒரு பகுதியாக குளங்கள் தூர்வாரப்படவேண்டும் என்றும் அதற்கான பொறிமுறை தொடர்பில் ஆராய்வதே கலந்துரையாடலின் நோக்கம் எனவும் குறிப்பிட்ட ஆளுநர் அது தொடர்பில் துறைசார் அதிகாரிகளிடமிருந்து ஆலோசனைகளை எதிர்பார்ப்பதாக

குளங்களை தூர்வாருதலுடன் தொடர்புடைய சகல திணைக்களங்களையும் ஒருங்கிணைத்து கலந்துரையாடி நிரந்தரப் பொறிமுறையை உருவாக்குமாறு கௌரவ ஆளுநர் பணிப்புரை Read More »

இந்திய அரசின் நிதியுதவியில் பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல்

இலங்கை – இந்திய அரசாங்கங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் பருத்தித்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக பெங்களூரிலிருந்து வருகை தந்துள்ள, இந்தியாவின் மீன்பிடித்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மீன்வளத்துக்கான மத்திய கடலோர பொறியியல் நிறுவனத்தினர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை (08.09.2025) சந்தித்துக் கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பில் இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி அவர்களும் இணைந்து கொண்டார். கலந்துரையாடலின் ஆரம்பத்தில் இந்தியத்

இந்திய அரசின் நிதியுதவியில் பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல் Read More »