Kathir Sadagopan

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் “அறுவடை – 02 ” பருவ இதழ் வெளியீடு

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் “அறுவடை பருவ இதழின் 02 ஆவது இதழ் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த அறுவடை பருவ இதழின் வெளியீட்டு நிகழ்வு, 20.06.2024 அன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய மாநாட்டு மண்டபத்தில், விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் தின நிகழ்வின்போது நடைபெற்றது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மரியதாசன் ஜெகூ அவர்கள் தலைமையில் நடைபெற்ற “அறுவடை” பருவ இதழ் 02 வெளியியீட்டு நிகழ்வில் வடக்கு மாகாண […]

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் “அறுவடை – 02 ” பருவ இதழ் வெளியீடு Read More »

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றுச்சூழல் தின நிகழ்வு

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவினால் சுற்றுச்சூழல் தின நிகழ்வு 20.06.2024 அன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய மாநாட்டு மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.மரியதாசன் ஜெகூ தலைமையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தின நிகழ்வில், சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு, அறுவடை சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு ஆகியன இடம்பெற்றதோடு சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நாடகப்போட்டியில்

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றுச்சூழல் தின நிகழ்வு Read More »

யாழ் கோப்பாய் பகுதியில் அம்மாச்சி பாரம்பரிய உணவகம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால் இன்று திறந்து வைப்பு

நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடையும் நோக்குடன், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் இன்று (16/05/2024) திறந்து வைத்தார். இதன்போது வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவும் வகையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஒதுக்கீட்டின் கீழ் 10 இலட்சத்து அறுபதாயிரம் ரூபா பெறுமதியான 12 தையல் இயந்திரங்களும் பயனாளிகளுக்குவழங்கி வைக்கப்பட்டது. பெண்களுக்கான

யாழ் கோப்பாய் பகுதியில் அம்மாச்சி பாரம்பரிய உணவகம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால் இன்று திறந்து வைப்பு Read More »

வியாஸ்காந்த் தனது கிரிக்கெட் பயணத்தில் இன்னும் பல சாதனைகளை நிலைநாட்ட வேண்டும் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் வாழ்த்து…

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சன் ரைசஸ் ஹைதரபாத் அணிக்காக விளையாடியுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு வடக்கு மாகாணம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். வடக்கு மாகாணத்திலிருந்து தனது கிரிக்கெட் பயிற்சியை பெற்ற இவர் இலங்கைக்கு பெருமிதத்தை பெற்றுக்கொடுத்துள்ளதுடன், யாழ் மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார். பல்வேறுபட்ட சமூக சீர்கேடான செயற்பாடுகளில் கவனம் செலுத்தும் இளைய தலைமுறையினருக்கு, விளையாட்டின் மூலம் சாதனை படைக்கும் 22 வயதேயான வியாஸ்காந்த் ஒரு

வியாஸ்காந்த் தனது கிரிக்கெட் பயணத்தில் இன்னும் பல சாதனைகளை நிலைநாட்ட வேண்டும் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் வாழ்த்து… Read More »

“ஜெயகமு ஸ்ரீ லங்கா” நடமாடும் சேவை – மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து சேவைகளையும் தமது பிரதேசங்களிலேயே நடமாடும் சேவையின் மூலம் பெற்றுக்கொள்ளும் நிகழ்வானது சித்திரை மாதம் 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் மன்னார் நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது. இதில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மானுச நானயக்கார மற்றும் வெளிநாட்டு வேலைவாயப்பு ஊக்குவிப்பு இராஜங்க அமைச்சர் கௌரவ ஜகத் புஷ்பகுமாரஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். இந்நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச

“ஜெயகமு ஸ்ரீ லங்கா” நடமாடும் சேவை – மன்னார் மாவட்டம் Read More »

தென்னையை தாக்கும் வெண் ஈக்களை முகாமைத்துவம் செய்யும் முகமாக வவுனியாவில் ஒட்டுண்ணி விடுவிப்பு

அண்மைக் காலத்தில் நிலவிய அதிக வெப்பநிலை காரணமாக நாடு முழுவதும் தென்னைச் செய்கையில் வெண் ஈக்களின் (Aleurodicus disperse) தாக்கம் பாரிய அளவில் அவதானிக்கப்பட்டிருந்தது. இவ் வெண் ஈக்களின் தாக்கத்தை முகாமைத்துவம் செய்யும் முகமாக வெண் ஈக்களைத் தாக்கும் ஒட்டுண்ணி (Encarsia gaudulapae) விவசாயத் திணைக்களத்தினால் வடமாகாண தென்னம் தோட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக 15.04.2024 ஆம் திகதியன்று வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் சமனன்குளம் விவசாயப்

தென்னையை தாக்கும் வெண் ஈக்களை முகாமைத்துவம் செய்யும் முகமாக வவுனியாவில் ஒட்டுண்ணி விடுவிப்பு Read More »

வர்த்தக ரீதியிலான செவ்வாழைச்செய்கை என்னும் கருப்பொருளிலான வயல் விழா

கிளிநொச்சி மாவட்ட அன்புபுர வீதி, முழங்காவில் பகுதியில் உள்ள திரு.தம்பிப்பிள்ளை சேகர் அவர்களுடைய GAP Certified விவசாயப்பண்ணையில் ‘வர்த்தக ரீதியிலான செவ்வாழைச்செய்கை என்னும் கருப்பொருளிலான வயல் விழா நிகழ்வானது 03.04.2024 அன்று காலை 9.30 மணியளவில், திரு.மகானந்தன் மகிழன் (விவசாயப் போதனாசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி சுகந்தினி செந்தில்குமரன் (விவசாயப்பணிப்பாளர், வடக்கு மாகாணம்.) கலந்து கொண்டதுடன், பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி. ஜெகதீஸ்வரி சூரியகுமார், திருமதி. லோகா பிரதீபன்(சிரேஸ்ட விரிவுரையாளர்), கிளிநொச்சி

வர்த்தக ரீதியிலான செவ்வாழைச்செய்கை என்னும் கருப்பொருளிலான வயல் விழா Read More »

Red Lasoda உள்ளுர் இன உருளைக்கிழங்கு முன்மாதிரி துண்ட வயல்விழா

யாழ் மாவட்டத்தில் பெரும்போகம் 2023/2024 இல் உருளைக்கிழங்கு செய்கையில் உள்ளுர் விதை கிழங்கினை நடுகைக்கு பயன்படுத்தக்கூடிய சாத்தியப்பாடுகளை கண்டறிவதற்காக மத்திய விவசாயத் திணைக்களத்தினால் 732 kg ரெட் லசோடா உள்ளுர் விதை கிழங்கு சுன்னாகம், புன்னாலைக்கட்டுவன் , நீர்வேலி , உரும்பிராய், புத்தூர், ஆவரங்கால் , அச்சுவேலி மற்றும் வசாவிளான் விவசாயப்போதனாசிரியர் பிரிவுகளில் முன்மாதிரி துண்டமாகச் செய்கை பண்ணப்பட்டது. இவ்விதை உருளைக்கிழங்கானது சீதா எலிய விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் இழைய வளர்ப்பு மூலம் உற்பத்தி செய்யப்பட்டு இழைய

Red Lasoda உள்ளுர் இன உருளைக்கிழங்கு முன்மாதிரி துண்ட வயல்விழா Read More »

CRIWMP திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட எள்ளு செய்கை வயல் விழா – மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தில் CRIWMP திட்டத்தின் உதவியுடன் விவசாய திணைக்களத்தின் தொழில்நுட்ப வழிகாட்டலுடன் மாவட்டத்தில் எள்ளு செய்கையை முகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 67 பயனாளிகளிற்கு 1/2 ஏக்கர் வீதம் ANKSE-4 வர்க்க எள்ளு விதைகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் வஞ்சியன்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவில் கள்ளியடிப்பிட்டி கிராமத்தில் திரு. மயில்கண்ணன் எனும் விவசாயி தேர்ந்தெடுக்கப்பட்டு 1.5 கிலோ கிராம் எள்ளு விதைகள் வழங்கப்பட்டு மேற்படி பிரிவின் விவசாய போதனாசிரியர் திருமதி து. ஆ. ஸ்ரெல்லா விவசாய ஆலோசனைகளிற்கு அமைவாக எள்ளு

CRIWMP திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட எள்ளு செய்கை வயல் விழா – மன்னார் மாவட்டம் Read More »

செத்தல் மிளகாய் உற்பத்தி வயல் விழா- மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தில் மத்திய விவசாயத் திணைக்கள நிதி உதவியுடன் மாகாண விவசாய திணைக்களத்தின் தொழில்நுட்ப வழிகாட்டலுடன் மாவட்ட ரீதியில் செத்தல் மிளகாய் உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 240 பயனாளிகளிற்கு 0.25 ஏக்கர் வீதம் MICH Hy-1 வர்க்க மிளகாய் விதைகள் வழங்கப்பட்டன. அந்தவகையில் கொண்டச்சி விவசாய போதனாசிரியர் பிரிவில் திரு. ந. நலீன் எனும் விவசாயி தேர்ந்தெடுக்கப்பட்டு, 50 கிராம் விதை மிளகாய் வழங்கப்பட்டு மேற்படி பிரிவின் விவசாய போதனாசிரியர் திருமதி டிவைனி பீரீஸின் விவசாய

செத்தல் மிளகாய் உற்பத்தி வயல் விழா- மன்னார் மாவட்டம் Read More »