Kathir Sadagopan

மாகாண மட்ட கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம்

வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கான 4 வது காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம் பிரதம செயலாளர் தலைமையில் 19.12.2024 ஆம் ஆண்டு காலை 10.00 மணிக்கு பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் அமைச்சின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், தேசிய கணக்காய்வு அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதம கணக்காளர்கள், கணக்காளர்கள் மற்றும் மாகாண உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

மாகாண மட்ட கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம் Read More »

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதிகளில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது

இன்று (04.10.2024) காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களும், , வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன்,யாழ் மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜெ.அருள்ராஜ் ,வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் சமன் பத்திரண, யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ..கேதீஸ்வரன், பிரதேச செயலாளர், இராணுவம், கடற்படை, போலீஸ் போன்றவற்றின் உயர் அதிகாரிகளும் சுகாதார உத்தியோகஸ்தர்கள் யாழ்ப்பாண மாநகர சபை ஊழியர்கள் ஆகியோர்

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதிகளில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது Read More »

பரசூட் மற்றும் இயந்திர தொழில்நுட்ப முறையிலான நெல் நாற்று நடுகை வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்ட குமரபுரம் விவசாயப்போதனாசிரியர் பிரிவல் பரசூட் மற்றும் இயந்திர தொழில்நுட்ப முறையிலான நெல் நாற்று நடுகை வயல் விழா நிகழ்வானது 26.08.2024 அன்று காலை 10.00 மணியளவில் T.மகேஸ்வரன்(குணா),குமரபுரம்,பரந்தன் என்னும் முகவரியில் உள்ள அவரது வயலில் வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் வழிகாட்டலில் விவசாயப் போதனாசிரியர் திருமதி.N.சரண்ஜா அவர்களின் தலைமையில் யாழ் பல்கலைக்கழக விவசாய பீட மாணவர்கள் மற்றும் கமநல சேவைகள் நிலையத்தின் அலுவலர்களுடன் இணைந்து நடாத்தப்பட்டது . இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி.சூ.ஜெகதீஸ்வரி

பரசூட் மற்றும் இயந்திர தொழில்நுட்ப முறையிலான நெல் நாற்று நடுகை வயல் விழா நிகழ்வு Read More »

பரசூட் தொழில்நுட்ப முறையிலான நெல் நாற்று நடுகை தொடர்பான வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்ட திணைக்களத்தின் கீழ் உள்ள அக்கராயன் விவசாயப்போதனாசிரியர் பிரிவல் பரசூட் தொழில்நுட்ப முறையிலான நெல் நாற்று நடுகை தொடர்பான வயல் விழா நிகழவானது 07.08.2024 அன்று காலை 09 மணியளவில் கந்தையா சௌந்தரராசா,அக்கராயன் என்னும் முகவரியில் உள்ள அவரது வயலினில் சிரேஸ்ட பாடவிதான உத்தியோகத்தர் திரு.சோ. விஜயன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.ம.விஜிதரன் (கமநல அபிவருத்தி உத்தியோகத்தர்,அக்கராயன் குளம்)அவர்கள் கலந்து கொண்டதுடன்,பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர்,பாடவிதானஉத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள், பகுதிக்குரிய கிராம சேவகர்,

பரசூட் தொழில்நுட்ப முறையிலான நெல் நாற்று நடுகை தொடர்பான வயல் விழா நிகழ்வு Read More »

வரிசை முறையிலான பயறுச் செய்கை – வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தில் ஸ்கந்தபுரம் விவசாயப்போதனாசிரியர் பிரிவல் வரிசை முறையிலான பயறுச் செய்கை தொடர்பான வயல் விழா நிகழவானது 07.08.2024 அன்று காலை 11 மணியளவில் ம.புவநேந்தின் அவர்களினது தோட்டத்தில் பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.சூ.ஜெகதிஸ்வரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.ம.விஜிதரன் (கமநல அபிவருத்தி உத்தியோகத்தர்,அக்கராயன் குளம்) அவர்கள் கலந்து கொண்டதுடன், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள், பகுதிக்குரிய கிராம சேவகர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டமை

வரிசை முறையிலான பயறுச் செய்கை – வயல் விழா நிகழ்வு Read More »

உலர் வலயத்தில் கறுவா பயிர்ச்செய்கை அறிமுகம் மற்றும் பதப்படுத்தல் செயன்முறை விளக்க நிகழ்வு

நிகழ்வானது 25.07.2024 அன்று மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் வட்டக்கச்சியில் “வளம் தரும் வாசனை பயிரை வரவேற்போம்” எனும் தொனிப்பொருளில் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி.சூ.ஜெகதீஸ்வரி தலைமையில் காலை 10 மணிக்கு இடம்பெற்றது. 1/4 ஏக்கர் விஸ்தீரணத்தில் செய்கையை மேற்கொள்ளும் நோக்கில் குறித்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் வைபவ ரீதியான கறுவாச்செடி நடுகை, அதன் பதப்படுத்தல் தொடர்பான செயல்முறை விளக்கங்கள், பயிற்செய்கை முகாமைத்துவம் தொடர்பான தெளிவு படுத்தல்கள் மற்றும் கருவாவிலிருந்து சிற்றுண்டி, தேநீர் தயாரிப்பு

உலர் வலயத்தில் கறுவா பயிர்ச்செய்கை அறிமுகம் மற்றும் பதப்படுத்தல் செயன்முறை விளக்க நிகழ்வு Read More »

நெடுந்தீவின் அபிவிருத்திச் செயற்பாட்டினை முன்னெடுக்கும் வேலைத்திட்டம்

நெடுந்தீவின் அபிவிருத்திச் செயற்திட்டத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் எதிர்வரும் 04.08.2024 தொடக்கம் 10.08.2024 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நெடுவூர் திருவிழா காலத்தை சிறப்பாக நடாத்துவதற்கும் நெடுந்தீவின் அபிவிருத்தியினை முன்னெடுக்கும் பொருட்டான கலந்துரையாடல் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் 22.07.2024 திகதி அன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதேச அபிவிருத்தி மற்றும் மேம்பாடு தொடர்பிலான அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத்தலைவர்களுடன் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் தலைவர், செயலாளர் மற்றும்

நெடுந்தீவின் அபிவிருத்திச் செயற்பாட்டினை முன்னெடுக்கும் வேலைத்திட்டம் Read More »

48 வது தேசிய விளையாட்டு விழாவில் வடமாகாண வீரர்களால் இரு சாதனைகள் பதிவு செய்யப்பட்டன

இலங்கையின் 48 வது தேசிய விளையாட்டு விழா கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இம்மாதம் 17,18,19 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இதில் நாட்டிலுள்ள 9 மாகாண வீர,வீராங்கனைகள் பங்குபற்றினர். இப்போட்டிகளில் கோலூன்றிப்பாய்தல் ஆண்கள் பிரிவில் சாவகச்சேரியினைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரன் 5.11 மீற்றர் உயரத்தினை கடந்து புதிய சாதனையினை நிலைநாட்டியுள்ளார். அத்தோடு கோலூன்றிப்பாய்தல் பெண்கள் பிரிவில் சாவகச்சேரியினைச் சேர்ந்த நேசராசா டக்சிதா 3.51 மீற்றர் உயரத்தினைக் கடந்து புதிய சாதனையினை நிகழ்த்தியுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த காலங்களில் தங்களால்

48 வது தேசிய விளையாட்டு விழாவில் வடமாகாண வீரர்களால் இரு சாதனைகள் பதிவு செய்யப்பட்டன Read More »

பரசூட் முறையிலான நெற் செய்கை வயல் விழா நிகழ்வு – முல்லைத்தீவு மாவட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நட்டாங்கண்டல் விவசாய போதனாசிரியர் பிரிவில் முன்று முறிப்பு கிராமத்தில் நீல வெட்டியர் குளம் வயல்வெளியில் பரசூட் முறையாலான நெற்செய்கையின் அறுவடை விழாவானது 2024.07.04 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு நட்டாங்கண்டல் விவசாய போதனாசிரியர் சண்முகராசா சரண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் யாமினி சசீலன் அவர்களும், சிறப்பு விருந்தினராக பாண்டியன்குள கமநல சேவை நிலையத்தின் பெரும் போக உத்தியோகத்தர், முன்று

பரசூட் முறையிலான நெற் செய்கை வயல் விழா நிகழ்வு – முல்லைத்தீவு மாவட்டம் Read More »

உழுந்துப் பயிர்ச்செய்கையில் மஞ்சள் சித்திர வடிவ வைரஸ் நோய் முகாமைத்துவம் தொடர்பான வயல்விழா – தேராவில் பண்ணை

உழுந்துப் பயிர்ச்செய்கையில் மஞ்சள் சித்திர வடிவ வைரஸ் நோய் முகாமைத்துவம் தொடர்பான வயல்விழாவானது வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவிலில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த பூங்கனியியல் கருமூலவள மாதிரிப் பண்ணையில் 2024.07.03 ஆம் திகதி காலை 9.30 மணியக்கு பண்ணை முகாமையாளர் தங்கராஜா – கமலதீபன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வட மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி செந்தில்குமரன் சுகந்தினி கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர்

உழுந்துப் பயிர்ச்செய்கையில் மஞ்சள் சித்திர வடிவ வைரஸ் நோய் முகாமைத்துவம் தொடர்பான வயல்விழா – தேராவில் பண்ணை Read More »