ரூ.4,081 மில்லியன் செலவில் 516 வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு – மக்களுக்கு ஏற்பட்ட பயன்களை ஆவணப்படுத்த ஆளுநர் பணிப்பு
விவசாயம், கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர் விநியோகம் மற்றும் சுற்றாடல் ஆகிய துறைகளை உள்ளடக்கிய அபிவிருத்திப் பணிகளுக்காக ஐந்து நிதி மூலங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் 516 வேலைத்திட்டங்கள் 4,081 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், இத்திட்டங்களால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நேரடி மற்றும் நடைமுறைப் பயன்களை முறையாக ஆவணப்படுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை வழங்கினார். வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, […]
