October 2026

முல்லைத்தீவு மாணவர்கள், முல்லைத்தீவு அரச பதவிகளை அலங்கரிக்க வேண்டும் – ஆளுநர்.

ஒரு பரிசு ஒருவரை உயர்த்தாது, ஒரு தோல்வியும் ஒருவரைத் தாழ்த்தாது. நீங்கள் எதைச் சாதிக்க முடிவு செய்கிறீர்கள் என்பதே உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். இன்று பரிசு பெறும் மாணவர்களிடம் மட்டுமன்றி, பரிசு கிடைக்காத மாணவர்களிடமும் அதே அளவு நம்பிக்கை எனக்கு உள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று (02.10.2026) வெள்ளிக்கிழமை காலை கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றபோது, பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண […]

முல்லைத்தீவு மாணவர்கள், முல்லைத்தீவு அரச பதவிகளை அலங்கரிக்க வேண்டும் – ஆளுநர். Read More »

உலக வங்கி நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடல்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் உலக வங்கிக் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (01.10.2026) வியாழக்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, வடக்கு மாகாணத்தில் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, குறித்த திட்டங்களின் ஒப்பந்தச் செயன்முறை, திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் அரசு – தனியார் கூட்டாண்மையை உள்ளடக்கிய வகையில் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

உலக வங்கி நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடல். Read More »

தேராவில் விவசாயப் பண்ணையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து விவசாய நடவடிக்கைகளை விரிவுபடுத்த நடவடிக்கை – ஆளுநர்

புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தேராவில் விவசாயப் பண்ணையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அங்கு விவசாய நடவடிக்கைகளை மீளச் சீரமைத்து விரிவுபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். தேராவில் விவசாயப் பண்ணையில் தலா ஒரு ஏக்கர் காணி வீதம் வழங்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட வாழைச் செய்கையில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில், அங்கு விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்த விவசாயிகள் வடக்கு மாகாண ஆளுநரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, ஆளுநர் இன்று

தேராவில் விவசாயப் பண்ணையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து விவசாய நடவடிக்கைகளை விரிவுபடுத்த நடவடிக்கை – ஆளுநர் Read More »

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை விரைந்து நிறைவு செய்ய வேண்டும் – மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தல்.

ஆண்டின் நிறைவுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் மத்திய மற்றும் மாகாண திணைக்களங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்தி, அவற்றின் பயன்களை மக்களுக்கு விரைவாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் வலியுறுத்தப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான மூன்றாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கூட்டுறவுத்துறை கௌரவ பிரதியமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை விரைந்து நிறைவு செய்ய வேண்டும் – மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தல். Read More »

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தின் திறந்தவெளி அரங்கில் 2026 ஆம் ஆண்டுக்கான முதியோர் வார நிகழ்வுகள் 01 ஒக்டோபர் 2026  அன்று சிறப்புற ஆரம்பமாகின. 2026 ஆம் ஆண்டின் சர்வதேச முதியோர் தினத்திற்கான “நீண்ட ஆயுளின் யுகம்: நீண்ட காலம் வாழும் மக்களுக்கேற்ப அமைப்புகளை மறுசிந்தனை செய்தல்” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதல் நாள் நிகழ்வானது வடக்கு மாகாண சமூக சேவைகள் பணிப்பாளர் திருமதி தனுஜா லுக்சாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்… Read More »

ஆளுநர் நா.வேதநாயகனின் முயற்சியால் புலிக்குளத்தில் துருசு அமைக்கும் பணி ஆரம்பம் கிளிநொச்சி பல்கலைக்கழக வளாக விவசாய பீடத்தின் நீண்டநாள் தேவைக்கு நடைமுறைத் தீர்வு.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தின் நீண்டநாள் கனவாக இருந்து வந்த விடயம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் முயற்சியால் சாத்தியமாகியுள்ளமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடாதிபதி பேராசிரியர் கே.பகீரதன் தெரிவித்தார். புலிக்குளத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையில் 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு துருசு அமைக்கும் பணியை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (30.09.2026) புதன்கிழமை மாலை இடம்பெற்றது. இதில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம அதிதியாகக்

ஆளுநர் நா.வேதநாயகனின் முயற்சியால் புலிக்குளத்தில் துருசு அமைக்கும் பணி ஆரம்பம் கிளிநொச்சி பல்கலைக்கழக வளாக விவசாய பீடத்தின் நீண்டநாள் தேவைக்கு நடைமுறைத் தீர்வு. Read More »

சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்ட நடைமுறைப்படுத்தலில் வடக்கு மாகாணம் நாட்டில் முன்னணியில் – ஆளுநர்

சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் வடக்கு மாகாணம் இன்று நாட்டில் முன்னணி மாகாணமாகத் திகழ்கிறது. இந்த முன்னேற்றம் எந்தவொரு ஓர் அலுவலகத்தின் சாதனையுமல்ல, மாவட்டச் செயலர்கள் முதல் கிராம அலுவலர்கள் வரை திட்டமிடல், சமுர்த்தி, சமூக சேவை மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறைகளில் களத்தில் பணியாற்றிய அனைத்து அதிகாரிகளினதும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் பெறுபேறாகும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட வடக்கு மாகாண தேசிய

சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்ட நடைமுறைப்படுத்தலில் வடக்கு மாகாணம் நாட்டில் முன்னணியில் – ஆளுநர் Read More »

நிலக்கடலை பயிர்ச் செய்கையினை ஊக்குவித்தல் வயல்விழா – பளை

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை விவசாயப் போதனாசிரியர் பிரிவில், 2026ஆம் ஆண்டு மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலக்கடலை செய்கை வயல்விழாவானது விவசாயப் போதனாசிரியர் திருமதி.பூ.சங்கீதா தலைமையில் நீதிராசா கிருஜனா என்பவரின் களத்தில் 29.09.2026 மாலை 02.00 மணிக்கு இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலக பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள் கமநல சேவைத்திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம சேவையாளர், கமக்காரஅமைப்பின் உறுப்பினர்கள், மகளிர் அமைப்புக்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும்

நிலக்கடலை பயிர்ச் செய்கையினை ஊக்குவித்தல் வயல்விழா – பளை Read More »

வடக்கு மாகாண சபை வரலாற்றில் முதல் தடவையாக ஒரே தடவையில் 74 சாரதிகள் ஆட்சேர்ப்புக்கு அனுமதி

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் நிலவும் சாரதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, மக்களுக்கான அத்தியாவசிய உள்ளூராட்சி சேவைகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்கும் வகையில் 74 சாரதி பதவிகளை ஆட்சேர்ப்பு மூலம் நிரப்புவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. வடக்கு மாகாண சபையின் வரலாற்றில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒரே கட்டமாக இவ்வளவு பெருந்தொகையான சாரதிகளை ஆட்சேர்ப்பு மூலம் உள்ளீர்ப்பதற்கான அனுமதி கிடைத்திருப்பது முதன்முறையாகும் என வடக்கு மாகாண கௌரவ

வடக்கு மாகாண சபை வரலாற்றில் முதல் தடவையாக ஒரே தடவையில் 74 சாரதிகள் ஆட்சேர்ப்புக்கு அனுமதி Read More »

இரண்டாம் மொழியாகச் சிங்களம் கற்கும் கற்கைநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

இலங்கையின் அரச கரும மொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தேர்ச்சி பெறுவதன் மூலம், எமது ஆளுமையையும் திறமையையும் மேம்படுத்திக்கொள்வதுடன், நாடளாவிய ரீதியில் சிறந்த வேலைவாய்ப்புகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். சூர்ய நிறுவகத்தின் மொழிகள் மற்றும் சமூக அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தால் நடத்தப்பட்ட இரண்டாம் மொழியாகச் சிங்களம் கற்கும் கற்கைநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (29.09.2026) செவ்வாய்க்கிழமை முற்பகல்

இரண்டாம் மொழியாகச் சிங்களம் கற்கும் கற்கைநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு Read More »