October 2026

திக்கம் வடிசாலையை மீள இயக்க சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவும், ஏற்றுமதி நோக்கிய உற்பத்தித் திட்டங்களைத் தயாரிக்கவும் தீர்மானம்.

திக்கம் வடிசாலையை மீள இயக்குவதற்குச் சாத்தியமான அனைத்து வழிகளிலும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், அதனை ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக மீளச் செயற்படுத்துவதற்கான திட்டங்களைத் தயாரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், திக்கம் வடிசாலையை மையப்படுத்திப் பனை அபிவிருத்திச் சபைக்கும் தனியார் நிறுவனத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் சட்டவலு தொடர்பில் ஆராய்ந்து, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், பெருந்தோட்ட மற்றும் […]

திக்கம் வடிசாலையை மீள இயக்க சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவும், ஏற்றுமதி நோக்கிய உற்பத்தித் திட்டங்களைத் தயாரிக்கவும் தீர்மானம். Read More »

மாற்றுத்திறனாளிகள் மாகாண மட்டத்தைக் கடந்து தேசிய, சர்வதேச மட்டங்களிலும் சாதிக்க வேண்டும் – ஆளுநர்

மாற்றுத்திறனாளிகள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர். இன்று மாகாண மட்டத்தில் சாதிக்கும் நீங்கள், நாளை தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களிலும் சாதனை படைக்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டிகளும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வும் இன்று (13.10.2026) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றன. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். நிகழ்வுக்கு

மாற்றுத்திறனாளிகள் மாகாண மட்டத்தைக் கடந்து தேசிய, சர்வதேச மட்டங்களிலும் சாதிக்க வேண்டும் – ஆளுநர் Read More »

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்காக அமைக்கப்பட்ட நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது உத்தியோகபூர்வக் கூட்டம்

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது உத்தியோகபூர்வக் கூட்டம் இன்று (10.10.2026) சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையை உருவாக்குவதற்கான ஆவணத்தில் அதன் உறுப்பினர்கள் கடந்த செப்ரெம்பர் மாதம் 18ஆம் திகதி கையெழுத்திட்டிருந்தனர். அதற்கமைவாக, சபையின் முதலாவது உத்தியோகபூர்வக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நம்பிக்கைப் பொறுப்பு

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்காக அமைக்கப்பட்ட நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது உத்தியோகபூர்வக் கூட்டம் Read More »

வவுனியா மாவட்டத்தின் எல்லைக் கிராமமான காஞ்சிரமோட்டைக்கு ஆளுநர் கள விஜயம்

வவுனியா மாவட்டத்தின் எல்லைக் கிராமமான காஞ்சிரமோட்டையில் கடந்த ஆண்டு மேற்கொண்ட களப் பயணத்தின்போது மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் வன்னி மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டார். மக்களின் வாழ்வாதாரமான விவசாயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பாராட்டியதுடன், அர்ப்பணிப்புடன் செயற்பட்ட விவசாயத் திணைக்கள அதிகாரிகளையும் ஆளுநர் வாழ்த்தினார். வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான

வவுனியா மாவட்டத்தின் எல்லைக் கிராமமான காஞ்சிரமோட்டைக்கு ஆளுநர் கள விஜயம் Read More »

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒதியமலை பிரதேசத்தில் ஆளுநர் நேரடி ஆய்வு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒதியமலை பிரதேச மக்கள் முன்வைத்த வீதிப் புனரமைப்பு, நீர்ப்பாசனம், குடிநீர், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு தேவைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினர் இன்று (09.10.2026) வெள்ளிக்கிழமை ஒதியமலை பிரதேசத்துக்குக் களப் பயணம் மேற்கொண்டு, மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்ததுடன், அவர்கள் சுட்டிக்காட்டிய பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தித் தேவைகள் தொடர்பான இடங்களை

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒதியமலை பிரதேசத்தில் ஆளுநர் நேரடி ஆய்வு Read More »

தர்மபுரம் பிரதேசத்தில் கம்பு சிறுதானிய அறுவடை விழா – வயல்விழா

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில், 2026ஆம் ஆண்டு மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறுதானிய செய்கையை ஊக்குவித்தல் திட்டத்தில் கம்பு சிறுதானிய செய்கை வயல்விழாவானது விவசாயப்போதனாசிரியர் திருமதி.கி.சரண்யா தலைமையில் தர்மபுரம் கிழக்கு பகுதியில் 07.10.2026 காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலக பாடவிதான உத்தியோகத்தர்கள், கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள், தர்மபுரம் மத்திய கல்லூரி அதிபர், விவசாயப்போதனாசிரியர்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர், மேலும்

தர்மபுரம் பிரதேசத்தில் கம்பு சிறுதானிய அறுவடை விழா – வயல்விழா Read More »

கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் இலவச செயற்கை முறை கருக்கட்டல் சேவையை தொடர்ச்சியாக வலுப்படுத்த நடவடிக்கை – ஆளுநர்.

கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘செயற்கை முறை கருக்கட்டல்’ சேவையைத் தொடர்ச்சியாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுப்பதற்குத் தேவையான வளங்கள் மற்றும் நிர்வாக ஏற்பாடுகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை வழங்கினார். கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்கை முறை கருக்கட்டல் சேவையின் முன்னேற்றம் மற்றும் அதனைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்குத் தேவையான அத்தியாவசிய ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன்

கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் இலவச செயற்கை முறை கருக்கட்டல் சேவையை தொடர்ச்சியாக வலுப்படுத்த நடவடிக்கை – ஆளுநர். Read More »

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வடக்கு மாகாண ஆளுநர் களப் பயணத்தை மேற்கொண்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேரில் கேட்டறிந்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (08.10.2026) வியாழக்கிழமை களப் பயணத்தை மேற்கொண்டு, மக்கள், பாடசாலை சமூகம் மற்றும் முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேரில் கேட்டறிந்தார். அல்லைப்பிட்டி மற்றும் சுழிபுரம் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் முதலீட்டுச் செயற்பாடுகளை ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது, குறித்த முதலீடுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்களால் வழங்கப்பட வேண்டிய மேலதிக ஒத்துழைப்புகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இம்முதலீடுகள் வளர்ச்சியடைவதன் மூலம் அந்தப்

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வடக்கு மாகாண ஆளுநர் களப் பயணத்தை மேற்கொண்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேரில் கேட்டறிந்தார். Read More »

கைதடியில் கால்நடைகளுக்கான புதிய கேணி – மக்கள் முன்முயற்சியை ஆளுநர் பாராட்டு.

ஒரு கிராமம் வளர்ச்சியடைவது அரசாங்கத்தின் முயற்சிகளில் மட்டுமல்ல, அந்தக் கிராம மக்களின் ஆர்வத்திலும், முன்முயற்சியிலும், தமது தேவைகளைத் தாமே அடையாளம் கண்டு அதற்காக ஒன்றிணைந்து செயற்படுவதிலும்தான் தங்கியிருக்கிறது. இன்று கைதடி மக்கள் தமது கிராமத்தின் தேவையை உணர்ந்து, அதற்காக இணைந்து மேற்கொண்ட முயற்சியின் பெறுபேறாக இந்தக் கேணி உருவாகியுள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். தற்போது நிலவும் எல்நினோ காலநிலைச் சவாலால் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியைக் கருத்திற்கொண்டு கால்நடைகளுக்கான குடிநீர்த் தேவையைப் பூர்த்தி

கைதடியில் கால்நடைகளுக்கான புதிய கேணி – மக்கள் முன்முயற்சியை ஆளுநர் பாராட்டு. Read More »

வடக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறையின் முன்னேற்றத்தை மேலும் துரிதப்படுத்த வேண்டும் – ஆளுநர்

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் திட்டங்கள் மற்றும் நிதிப் பயன்பாட்டில் இம்முறை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாகத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், ஒதுக்கப்பட்ட நிதிகளை உரிய முறையில் விரைந்து பயன்படுத்தி திட்டங்களை தாமதமின்றி நிறைவு செய்யுமாறு பணிப்புரை வழங்கினார். அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தற்கொலை உயிரிழப்புகளைத் தடுக்கும் ஒருங்கிணைந்த செயற்றிட்டத்தை வடக்கு மாகாணத்தின் ஏனைய நான்கு மாவட்டங்களிலும் முக்கியத்துவத்துடன் முன்னெடுக்குமாறும் அவர் அறிவுறுத்தினார். வடக்கு மாகாண சுகாதார, சுதேச

வடக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறையின் முன்னேற்றத்தை மேலும் துரிதப்படுத்த வேண்டும் – ஆளுநர் Read More »