‘வடக்கு மாகாணத்தை இலங்கையின் பொருளாதார மையமாக மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது.’ – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தின் வளங்களைச் சரியான முறையில் பயன்படுத்தி, அதற்கான வசதிகளை ஏற்படுத்துவதன் ஊடாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வடக்கு மாகாணத்தின் பங்களிப்பை 10 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை கௌரவிக்கும் இரண்டாவது வர்த்தகச் சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் ஜே ஹோட்டலில் நேற்று (19.06.2026) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. […]
