கிளிநொச்சி மாவட்ட புன்னைநீராவி விவசாயப்போதனாசிரியர் பிரிவில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியத்தினால் வழங்கப்பட்ட பயிர் மாற்றீட்டுத் திட்டத்திற்கான உழுந்து(MIBG4) பயிர்ச்செய்கை த.சிவராசசிங்கம் எனும் விவசாயின் வயல் துண்டத்தில் திருமதி கி.தண்குழலி விவசாயப் போதனாசிரியர் தலைமையில் 03.06.2026 அன்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி.சோ.விஜயதாசன், பாடவிதான உத்தியோகத்தர், விவசாயப்போதனாசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர், கமக்கார அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வயல் நிலங்களில் மறுவயற்பயிர் செய்கை செய்வதால் கிடைக்கும் பயன் பற்றி பிரதி விவசாயப்பணிப்பாளரினால் எடுத்துரைத்தார். பயிராக்கவியல் நடவடிக்கைகள் மற்றும் நோய் பீடைக்கட்டுப்பாடுகள் பற்றிய விளக்கம் பாடவிதான உத்தியோகத்தர்(OFC) ஆல் வழங்கப்பட்டது. களப்பார்வையுடன் விவசாயின் கருத்துப்பகிர்வுடன் வயல்விழாவானது இனிதே நிறைவு பெற்றது.







