June 2026

வடக்கு மாகாண சுகாதாரத்துறை மேம்பாடு தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியத் தேவைகள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார். ஏனைய மாகாணங்களைப் போலன்றி, வடக்கில் மாவட்டப் பொது மருத்துவமனைகள் மாகாண சபையின் கீழ் இயங்குவதைக் கருத்தில் கொண்டு, நிதி ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி விசேட மேலதிக நிதி ஒதுக்கீடுகள் பெற்றுத் தரப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். வடக்கு […]

வடக்கு மாகாண சுகாதாரத்துறை மேம்பாடு தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. Read More »

764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களில் இயங்கும் பேருந்துச் சங்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தீர்த்து, ஒழுங்குமுறையான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது

யாழ்ப்பாண மாவட்டத்தினுள் சேவையில் ஈடுபடும் 764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களில் இயங்கும் பேருந்துச் சங்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தீர்த்து, ஒழுங்குமுறையான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (26.06.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் போது, குறித்த இரு வழித்தடங்களிலும் நீண்டகாலமாக நிலவி வரும் முரண்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதற்குத் தீர்வாக, எதிர்காலத்தில் எவ்வாறு ஒழுங்குமுறையான சேவைகளை முன்னெடுப்பது என்பது

764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களில் இயங்கும் பேருந்துச் சங்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தீர்த்து, ஒழுங்குமுறையான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது Read More »

பூநகரி, கௌதாரிமுனைப் பிரதேசத்தை ஒரு சிறந்த சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

பூநகரி, கௌதாரிமுனைப் பிரதேசத்தை ஒரு சிறந்த சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (26.06.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கௌதாரிமுனையைச் சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்யும் நோக்கில், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் விசேட வரைவுத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்துக்கு அமைவாகக் குழுவொன்று நியமிக்கப்பட்டு, இத்திட்டத்திற்கான முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளமை குறித்து இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது. இன்றைய

பூநகரி, கௌதாரிமுனைப் பிரதேசத்தை ஒரு சிறந்த சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

வருமானப் பரிசோதகர்கள், ஆய்வுகூட உதவியாளர்கள் என 12 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளும், ஊழல்வாதிகளுமே நேர்மையாகச் சேவையாற்றுபவர்களை விமர்சிப்பார்கள். எனவே, இன்று கடமைகளைப் பொறுப்பேற்கும் நீங்கள், இவ்வாறான விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாது மக்களுக்காக நேர்மையான சேவையை முன்னெடுக்க வேண்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் கீழான உள்ளூராட்சித் திணைக்களத்துக்கான 10 வருமானப் பரிசோதகர்கள் மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்கான 2 ஆய்வுகூட உதவியாளர்கள் என மொத்தமாக 12 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும்

வருமானப் பரிசோதகர்கள், ஆய்வுகூட உதவியாளர்கள் என 12 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. Read More »

ஜெய்ப்பூர் நிறுவனம் எமது மண்ணில் இயங்கியிருக்காவிட்டால், எமது மக்களில் பலரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் – கௌரவ ஆளுநர்

அவயவங்களை இழந்த எமது மக்கள் முடங்கிப்போகாமல், அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களின் வழமையான செயற்பாடுகளுக்கு உதவும் ஜெய்ப்பூர் நிறுவனம் தனது சேவைகளை முற்றிலும் இலவசமாக வழங்குவது எமது மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இந்நிறுவனம் தொடர்ந்தும் இயங்குவதற்கு கொடையுள்ளம் கொண்டவர்கள் தங்களின் உதவிகளை வழங்க முன்வர வேண்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாணம் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலையத்தின் புனரமைக்கப்பட்ட கட்டடத்தின் மீள்திறப்பு விழாவும், புதிய செயற்கைக் கால் தயாரிப்புத்

ஜெய்ப்பூர் நிறுவனம் எமது மண்ணில் இயங்கியிருக்காவிட்டால், எமது மக்களில் பலரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் – கௌரவ ஆளுநர் Read More »

ஒரு கிராமத்தின் வளர்ச்சிக்குக் கல்வி மிகவும் இன்றியமையாததாகும். பலர் கல்வியைப் பணம் சம்பாதிப்பதற்கான வழியாகவே பார்க்கின்றனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும். – ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

கல்வியானது பணம் சம்பாதிப்பதற்கோ அல்லது பதவிகளை அடைவதற்கோ மட்டுமன்றி, மக்களுக்குச் சேவை செய்வதற்கே பயன்பட வேண்டும் எனவும், கல்வி கற்பதன் மிக உயர்ந்த நிலையே மக்களுக்குச் சேவை செய்யும் ஒருவராக உருவாவதுதான் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். அளவெட்டி ஞானோதயா நம்பிக்கை நிதியத்தின் ஆண்டு விழாவும், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று (25.06.2026) வியாழக்கிழமை மாலை பன்னாலை வரத்தலம் பிள்ளையார் கோவில் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த

ஒரு கிராமத்தின் வளர்ச்சிக்குக் கல்வி மிகவும் இன்றியமையாததாகும். பலர் கல்வியைப் பணம் சம்பாதிப்பதற்கான வழியாகவே பார்க்கின்றனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும். – ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். Read More »

இலங்கை அரச மருத்துவத்துறை வரலாற்றில் முதற்தடவையாக, கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் இலவச ‘செயற்கை முறை கருக்கட்டல்’ (ஐ.வி.எவ்.) சேவை ஆரம்பம்

இலங்கை அரச மருத்துவத்துறை வரலாற்றிலேயே முதற்தடவையாகக் கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘செயற்கை முறை கருக்கட்டல்’ (ஐ.வி.எவ்.) சேவையின் முன்னேற்றங்கள் மற்றும் அதற்கான அத்தியாவசியத் தேவைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (25.06.2026) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், இலங்கையிலேயே முதல் தடவையாக அரச மருத்துவமனையொன்றில் செயற்கை முறை கருக்கட்டல் சேவையை முழுமையாக

இலங்கை அரச மருத்துவத்துறை வரலாற்றில் முதற்தடவையாக, கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் இலவச ‘செயற்கை முறை கருக்கட்டல்’ (ஐ.வி.எவ்.) சேவை ஆரம்பம் Read More »

உலக வங்கியின் நிதியுதவியுடன் குருநகர் இறங்குதுறை, யாழ். கோட்டை ஆகிய இடங்களை மையப்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

உலக வங்கியின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இரண்டு பிரதான செயற்றிட்டங்களின் நடைமுறைப்படுத்தல் மற்றும் அதற்கான கால அட்டவணை தொடர்பில் ஆராயும் விசேட சந்திப்பொன்று, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையிலான குழுவினருக்கும் உலக வங்கிப் பிரதிநிதிகளுக்கும் இடையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை (24.06.2026) மாலை நடைபெற்றது. உலக வங்கியின் நிதியுதவியுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ‘றிவைவ்’ (REVIVE – Regional Empowerment through Vibrant, Inclusive, and Viable Economies)

உலக வங்கியின் நிதியுதவியுடன் குருநகர் இறங்குதுறை, யாழ். கோட்டை ஆகிய இடங்களை மையப்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. Read More »

கூட்டுறவுத்துறை வளர்ச்சியடைய வேண்டுமாயின் மக்கள் மத்தியில் அது குறித்த ஆழமான நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். – ஆளுநர் தெரிவித்தார்.

மக்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் வென்றெடுக்கும் அமைப்புகளாலேயே ஒரு சமூகத்தை வலுவாகக் கட்டியெழுப்ப முடியும் எனத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பொருளாதார நெருக்கடியான காலகட்டங்களில் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் கூட்டுறவுத்துறையே அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளது எனவும் தெரிவித்தார். ஏழாலை மேற்கின் மைந்தனும் கூட்டுறவாளனுமான அமரர் கந்தையா மகாதேவன் அவர்களின் திருவுருவச்சிலை திறப்பு விழா நிகழ்வு இன்று புதன்கிழமை பிற்பகல் (24.06.2026) ஏழாலை மேற்கு ஸ்ரீ விநாயகர் ஐக்கிய நாணயச் சங்கத்தில் நடைபெற்றது. இந்த

கூட்டுறவுத்துறை வளர்ச்சியடைய வேண்டுமாயின் மக்கள் மத்தியில் அது குறித்த ஆழமான நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். – ஆளுநர் தெரிவித்தார். Read More »

வடக்கு மாகாண இறைவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண இறைவரித் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் வரி மதிப்பீட்டாளர்கள் மற்றும் வரி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (24.06.2026) புதன்கிழமை காலை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின்போது, வரி மதிப்பீட்டாளர்கள் மற்றும் வரி உத்தியோகத்தர்களின் சேவைப் பிரமாணக் குறிப்பு தொடர்பில் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளை குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இதற்கமைவாக, வடக்கு மாகாணத்துக்குரிய புதிய சேவைப் பிரமாணக் குறிப்பு எவ்வாறு

வடக்கு மாகாண இறைவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »