March 2026

உவர் நிலங்களுக்கு பொருத்தமான நெல்லினங்களின் அறிமுகம் முன்மாதிரித்துண்ட வயல்விழா

கிளிநொச்சி மாவட்டத்தில் உவரத்தன்மையினால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களுக்கு பொருத்தமான புதிய நெல் இனங்கள் அறிமுகம் தொடர்பான முன்மாதிரித்துண்டத்திற்குரிய வயல் விழாவானது 18.03.2026 அன்று D8 பெரிய பரந்தனில் குமரபுரம் விவசாயப்போதனாசிரியர் திருமதி.ம.எழினி தலைமையில் நடைபெற்றது. கைகளினால் நாற்று நடுகை செய்யப்பட்ட உவரிற்கு தாங்கும் திறன் கொண்ட 3½, 4 மாத நெல் இனங்களாகிய AT 354, Bg369, IS Bg sl 20- Ay3, IS Bg sl 19- 182 ஆகியன அன்றைய தினம் விவசாயிகளுக்கு […]

உவர் நிலங்களுக்கு பொருத்தமான நெல்லினங்களின் அறிமுகம் முன்மாதிரித்துண்ட வயல்விழா Read More »

வடக்கு மாகாண பொதுச் சேவையில் இணைந்துள்ள புதிய உத்தியோகத்தர்கள்,நேர்மையுடனும் கண்ணியத்துடனும் சிறந்த சேவையாற்ற முன்வர வேண்டும் – ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.

எவ்வித அரசியல் தலையீடுகளோ, இலஞ்ச ஊழல் மோசடிகளோ இன்றி மிகவும் நேர்மையான முறையில் வடக்கு மாகாண பொதுச் சேவையில் இணைந்துள்ள புதிய உத்தியோகத்தர்கள், அதே நேர்மையுடனும் கண்ணியத்துடனும் மக்களுக்குச் சிறந்த சேவையாற்ற முன்வர வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண பொதுச் சேவையில் வெற்றிடமாகக் காணப்பட்ட 3 குடியேற்ற உத்தியோகத்தர்கள் மற்றும் 48 வாகன சாரதிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (24.03.2026) செவ்வாய்க்கிழமை பிற்பகல் வடக்கு

வடக்கு மாகாண பொதுச் சேவையில் இணைந்துள்ள புதிய உத்தியோகத்தர்கள்,நேர்மையுடனும் கண்ணியத்துடனும் சிறந்த சேவையாற்ற முன்வர வேண்டும் – ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார். Read More »

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் கௌரவ ஆளுநருக்கும் இடையே விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அண்ட்ரூ பிரஞ்ச் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் ஆகியோருக்கிடையிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (24.03.2026) நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் ஆளுநரால் மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் முன்னுரிமைத் தேவைகள் குறித்த விடயங்கள் முன்வைக்கப்பட்டன. பொருளாதார அபிவிருத்தி, காணிப் பிரச்சினைகள், சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றம், மீள்திறன் கொண்ட வாழ்வாதாரம் ஆகிய நான்கு பிரதான விடயங்களின் அடிப்படையில் ஆளுநர்

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் கௌரவ ஆளுநருக்கும் இடையே விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பீ.டி.சில்வா மற்றும் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையே விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பீ.டி.சில்வா மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை (23.03.2026) மாலை பலாலியில் அமைந்துள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின்போது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகள் பொதுமக்களின் பாவனைக்காகக் கட்டம்கட்டமாக விடுவிக்கப்பட்டமைக்காக ஆளுநர், தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். அத்துடன், தொடர்ந்தும் விடுவிக்கப்படாதுள்ள ஏனைய காணிகளை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கட்டளைத்

யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பீ.டி.சில்வா மற்றும் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையே விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. Read More »

நெல் நாற்று நடுகை வயல் விழா – வன்னேரிக்குளம்

கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகத்தின்; தொழில்நுட்ப வழிகாட்டலின் கீழ் யூனியன் விழுதுகள் இளைஞர் விவசாயக் கழகத்தால் நடைமுறைப்படுத்தப்படும் இயந்திர நெல் நாற்று நடுகையின் 2026 சிறுபோகத்திற்கான ஆரம்பவிழாவானது வன்னேரிக்குளம் விவசாயப்போதனாசிரியர் பிரிவில் 16.03.2026 அன்று நடைபெற்றது. வன்னேரிக்குளம் தொழில்நுட்ப உதவியாளர் T.துசாந் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் திருமதி சோ.விஜயதாசன்- பிரதி விவசாயப்பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள், யூனியன் விழுதுகள் கழக உறுப்பினர்கள் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். மேற்படி

நெல் நாற்று நடுகை வயல் விழா – வன்னேரிக்குளம் Read More »

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் வளர்ச்சி ஏற்றுமதியை நோக்கியதாக அமைய வேண்டும். அதற்கான உந்துதலை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும் – கௌரவ ஆளுநர் உரை

எந்தவொரு உற்பத்தியாளரினதும் உற்பத்திப் பொருட்களுக்குரிய நியாயமான விலை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் எனவும், இடைத்தரகர்கள் உழைத்துச் செல்வதற்கு இடமளிக்காமல் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்கும்போதே எமது மாகாணம் முழுமையாகத் தன்னிறைவடைய முடியும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ‘வடக்கிற்கான தொழில்துறைகள் மன்றத்தின்’ வருடாந்தப் பொதுக்கூட்டம் யாழ்ப்பாணம் நோர்த் கேட் ஹோட்டலில் இன்று சனிக்கிழமை (21.03.2026) மாலை, மன்றத்தின் தலைவர் எஸ்.நகுலேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விசேட உரையாற்றும்போதே

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் வளர்ச்சி ஏற்றுமதியை நோக்கியதாக அமைய வேண்டும். அதற்கான உந்துதலை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும் – கௌரவ ஆளுநர் உரை Read More »

கிளிநொச்சி விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்பின் செயற்பாடுகளை கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சென்று பார்வையிட்டார்.

கிளிநொச்சி விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்பின் செயற்பாடுகளை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (20.03.2026) மாலை நேரில் சென்று பார்வையிட்டார். கிளிநொச்சி, பாரதிபுரத்தில் அமைந்துள்ள குறித்த வலையமைப்பின் தலைமை அலுவலகத்துக்குச் சென்ற ஆளுநர், அந்த அமைப்பின் கீழ் இயங்கி வரும் 5 வௌ;வேறு இல்லங்களுக்கும் நேரில் பயணம் செய்தார். அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள விசேட தேவையுடையவர்களைச் சந்தித்து அவர்களின் நலன்களைக் கேட்டறிந்துகொண்டார். இதன்போது, குறித்த அமைப்பின் அடிப்படைத் தேவைகள் மற்றும் அங்குள்ள வசதிகள் தொடர்பில்

கிளிநொச்சி விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்பின் செயற்பாடுகளை கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சென்று பார்வையிட்டார். Read More »

ரமழான் பெருநாளை முன்னிட்டு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் வாழ்த்துச் செய்தி

ஒரு மாத காலமாகப் புனித நோன்பு நோற்று, இறை பக்தி மற்றும் ஆன்மீக ஒழுக்கத்துடன் அதனை நிறைவு செய்து, ஈதுல் பித்ர் எனும் ரமழான் பெருநாளைக் கொண்டாடும் வடக்கு மாகாணம் உள்ளிட்ட இலங்கை வாழ் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். ரமழான் பண்டிகையானது வெறுமனே உணவையும் தாகத்தையும் தவிர்ப்பது மட்டுமல்லாமல், பொறுமை, தியாகம், சகோதரத்துவம் மற்றும் சக மனிதர்களின் துன்பங்களைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவும் உன்னத மனிதாபிமானப் பண்புகளை வலியுறுத்துகின்றது.

ரமழான் பெருநாளை முன்னிட்டு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் வாழ்த்துச் செய்தி Read More »

‘தற்போதைய புறச்சூழலைக் காரணம் காட்டி, எந்தவொரு திணைக்களமும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதை இடைநிறுத்தக் கூடாது’ – கௌரவ ஆளுநர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய நிதியொதுக்கீடுகளைக் கருத்திற் கொண்டு, மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை எவ்விதத் தொய்வுமின்றியும், தடங்கலின்றியும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். தற்போதைய நெருக்கடியான புறச்சூழலில் மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதில் காணப்படுகின்ற சவால்கள் மற்றும் அதற்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20.03.2026) காலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத்

‘தற்போதைய புறச்சூழலைக் காரணம் காட்டி, எந்தவொரு திணைக்களமும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதை இடைநிறுத்தக் கூடாது’ – கௌரவ ஆளுநர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். Read More »

பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு, தனியார் நிறுவனப் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்துக்கு 3 நாட்கள் சேவையிலீடுபடத் தடை

பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு, தனியார் நிறுவனப் பணியாளர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்துக்கு 3 நாட்கள் சேவையிலீடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பேருந்தின் நடத்துனருக்கு 5 நாட்கள் சேவைத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். பயணி ஒருவரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 14.03.2026 அன்று தனியார் பேருந்தில் பயணித்த பயணிகளை, பேருந்து பழுதடைந்துவிட்டதாகக் கூறி நடத்துனர் இடைநடுவில் இறக்கிவிட்டுள்ளார்.

பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு, தனியார் நிறுவனப் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்துக்கு 3 நாட்கள் சேவையிலீடுபடத் தடை Read More »