‘பசுமை யாழ்ப்பாணம்’ எனும் விசேட செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பசுமையான மற்றும் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் திறன்மிக்க ஒரு நகரமாக மாற்றியமைக்கும் உயரிய நோக்கோடு, ‘இம்பக்ட்’ அணியினரால் ‘பசுமை யாழ்ப்பாணம்’ எனும் விசேட செயற்றிட்டமொன்று முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மாதிரிச் செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (03.03.2026) காலை இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின்போது, இச்செயற்றிட்டம் தொடர்பில் இம்பக்ட் அணியினரால் ஆளுநருக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. இது வெறுமனே ஒரு மரநடுகைத் திட்டமாக […]
