புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் இடையில் விசேட சந்திப்பு நடைபெற்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியெழுப்பும் விசேட செயற்றிட்டமான ‘லன்ரேன்’ (LANTERN – Land and Trust-building Engagement in the Regions of the North & East) திட்டத்தை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்துடன் (UNDP) இணைந்து முன்னெடுக்கவுள்ளதாகப் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத் தலைவர் திருமதி கிறிஸ்டின் பார்ஸோ, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் தெரிவித்தார். புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் […]
