கிளிநொச்சி மாவட்டத்தில் உவரத்தன்மையினால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களுக்கு பொருத்தமான புதிய நெல் இனங்கள் அறிமுகம் தொடர்பான முன்மாதிரித்துண்டத்திற்குரிய வயல் விழாவானது 18.03.2026 அன்று D8 பெரிய பரந்தனில் குமரபுரம் விவசாயப்போதனாசிரியர் திருமதி.ம.எழினி தலைமையில் நடைபெற்றது. கைகளினால் நாற்று நடுகை செய்யப்பட்ட உவரிற்கு தாங்கும் திறன் கொண்ட 3½, 4 மாத நெல் இனங்களாகிய AT 354, Bg369, IS Bg sl 20- Ay3, IS Bg sl 19- 182 ஆகியன அன்றைய தினம் விவசாயிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.
இந் நிகழ்வில் உதவி விவசாயப் பணிப்பாளர்(ஆராய்ச்சி), பரந்தன் நெல் ஆராய்ச்சி நிலையம், பிரதி விவசாயப் பணிப்பாளர் கிளிநொச்சி, பாடவிதான உத்தியோகத்தர்கள், சமயத் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இம் முன்மாதிரித்துண்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய க.கந்தசாமி அவர்கள் தமது கருத்துக்களை விழாவில் கலந்து கொண்டவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளால் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியான முறையில் இவ் இனங்களை இப் பிரதேசத்தில் செய்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதிக விளைச்சலைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.






