‘பி.எல்.சி. கம்பஸின்’ (BLC Campus) இணைவு விழா (Fusion Fest) வலம்புரி ஹோட்டலில் நடைபெற்றது.
எதிர்காலத்தில் இங்கு முதலீட்டாளர்கள் ஊடாக தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்படும்போது அதில் பங்கெடுக்கும் வகையில் எம்மை நாம் தயார்படுத்திக்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார். ‘பி.எல்.சி. கம்பஸின்’ (BLC Campus) இணைவு விழா (Fusion Fest) வலம்புரி ஹோட்டலில் 07.06.2025 அன்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், நிறுவனத்தின் விரிவுரையாளர்களுக்கான கௌரவத்தை வழங்கி வைத்தார். ஆளுநர் தனது உரையில், நாங்கள் கல்வி கற்கின்ற காலத்தில் வாய்ப்புக்கள் மிகக் குறைவு. […]