ஆளுநர்

பருத்தித்துறை துறைமுக பிரதேசத்திற்கு ஆளுநர் விஜயம்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் மீள் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ள பருத்தித்துறை துறைமுகப் பகுதிக்கு இன்று (29) மாலை விஜயம் மேற்கொண்ட கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் துறைமுகத்தின் ஆரம்ப அபிவிருத்தி நிலைமைகள் குறித்து ஆராய்ந்தார். பருத்தித்துறை பிரதேச மீனவர்களின் பொருளாதார நிலைமையினை மேம்படுத்தும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த துறைமுக அபிவிருத்தி செயற்திட்டத்தினை முன்னெடுப்பதில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் கௌரவ ஆளுநரின் இவ்விஜயத்தில் ஆராயப்பட்டதுடன் , துறைமுகத்திற்கு அண்மையில் அமைந்துள்ள மெதடிஸ்ட் பாடசாலைக்கும் ஆளுநர் […]

பருத்தித்துறை துறைமுக பிரதேசத்திற்கு ஆளுநர் விஜயம் Read More »

ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் நடைபெற்றது

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் இன்று (29) இடம்பெற்றது. –வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் நடைபெற்றது Read More »

வடக்கு மாகாண இணைந்த சேவையின் பதவியணியான அலுவலக பணியாளர் சேவை நியமனக்கடிதங்கள் வழங்கல்

வடக்கு மாகாண அலுவலக பணியாளர் சேவையின் தரம் 3 இன் 16 வெற்றிடங்களிற்கான போட்டிப் பரீட்சை மூலம் தெரிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரிகளிற்கு நியமனக்கடிதங்கள் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் 2019.05.29ம் திகதி வடக்கு மாகாண சபை வளாகத்தில் வழங்கி வைக்கப்பட்டன.

வடக்கு மாகாண இணைந்த சேவையின் பதவியணியான அலுவலக பணியாளர் சேவை நியமனக்கடிதங்கள் வழங்கல் Read More »

புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் – ஆளுநர் சந்திப்பு

வடமாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி விஜயகுணவர்தன ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை 28 மே 2019 அன்று காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், வடமாகாணத்தில் இடம்பெறும் சமூகவிரோத செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பிலும் , யாழ்மாவட்டத்திலே அதிகளவிலான சமூக விரோத செயல்கள் காணப்படுவதாகவும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் ஆளுநர் அவர்கள் இதன்போது கேட்டுக்கொண்டார். மேலும் சட்டவிரோத மண்அகழ்வு நடவடிக்கைகள்

புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் – ஆளுநர் சந்திப்பு Read More »

கௌரவ ஆளுநர் எண்ணக்கருவிற்கு அமைவாக யாழில் புத்தக கண்காட்சி

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக புத்தக விற்பனை மற்றும் கண்காட்சி எதிர்வரும் ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் செப்டம்பர் 1ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில்  நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சி தொடர்பான ஊடக சந்திப்பு இன்று (24) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது குறித்த கண்காட்சியினை ஏற்பாடு செய்யும் இலங்கை நூல் விற்பனையாளர்கள் ஏற்றுமதி இறக்குமதி சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.  

கௌரவ ஆளுநர் எண்ணக்கருவிற்கு அமைவாக யாழில் புத்தக கண்காட்சி Read More »

சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர் Mr. Damiano Sguaitamatti அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (23) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இலங்கையில் தனது பணிக்காலத்தை நிறைவு செய்து அடுத்த மாதம் மீண்டும் சுவிஸிற்கு திரும்பவுள்ள Mr.Damiano அவர்கள் மரியாதை நிமித்தம் கௌரவ ஆளுநர் அவர்களை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. – வடக்கு

சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு Read More »

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வில் ஆளுநர் கலந்து கொண்டார்

கடந்த மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் ஒரு மாத பூர்த்தியினை நினைவுகூரும் நிகழ்வு மிருசுவில் புனித நீக்ளஸ் ஆலயத்தில் இடம்பெற்றபோது ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (21) காலை 8:45 மணிக்கு இணைந்து கொண்டார்.

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வில் ஆளுநர் கலந்து கொண்டார் Read More »

முல்லைத்தீவு மாவட்ட பிரதேசசபை உறுப்பினர்களுடன் ஆளுநர் கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளினதும் உறுப்பினர்களுக்கும் கௌரவ ஆளுநர் சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (21) முல்லைத்தீவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. யுத்தத்திற்கு முகம்கொடுத்த மாவட்டமாக காணப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மக்களுடைய உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் அவற்றை மேம்படுத்துவது தொடர்பிலும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. மக்கள் பிரதிநிதிகளாக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேச சபை உறுப்பினர்கள் தமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமையாக

முல்லைத்தீவு மாவட்ட பிரதேசசபை உறுப்பினர்களுடன் ஆளுநர் கலந்துரையாடல் Read More »

வடமாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம்

வடமாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு வடமாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் 20 மே 2019 அன்று பிற்பகல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்த நியமனம் வழங்கும் நிகழ்வில் 57 தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களும் 15 கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்களும் 09 விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனங்களும் வழங்கப்பட்டன.  

வடமாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் Read More »

ஈஸ்டர் தாக்குதலின் ஒரு மாத பூர்த்தியை முன்னிட்டு வடமாகாண ஆளுநரின் விசேட வேண்டுகோள்

  இலங்கையில் பல பாகங்களிலும் கடந்த மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் ஒரு மாத பூர்த்தியினை நினைவுகூரும் முகமாக எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8:45 மணிக்கு வடமாகாணத்தின் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களிலும் மணியோசை ஒலிக்க செய்வதுடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியினையும் மேற்கொள்ளுமாறு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடமாகாணத்தின் அனைத்து சமயத் தலைவர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த தருணத்தில் வடமாகாணத்தின் அனைத்து மக்களையும்

ஈஸ்டர் தாக்குதலின் ஒரு மாத பூர்த்தியை முன்னிட்டு வடமாகாண ஆளுநரின் விசேட வேண்டுகோள் Read More »