கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்டகாலம் தீர்க்கப்படாதுள்ள அரச காணிகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் நடமாடும் சேவை
கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்டகாலம் தீர்க்கப்படாதுள்ள அரச காணிகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் காணி நடமாடும் சேவை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் 08.05.2025 அன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. காணிப் பிணக்குத் தொடர்பில் ஏற்கனவே வழங்கப்பட்ட இணக்கப்பாட்டை ஏற்றுக்கொள்ளாமல் ஆளுநருக்கு முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமையடுத்தே, காணி நடமாடும் சேவை நடத்தப்பட்டிருந்தது. இதன்போது சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைக்கு அமைவாக தீர்வுகள் வழங்கப்பட்டிருந்தன. பெரும்பாலான தரப்பினர்கள் அதனை ஏற்றுக்கொண்டிருந்தனர். […]
