முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட காலமாக தீர்க்கப்படாதிருந்த சுகாதார மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட காலமாக தீர்க்கப்படாதிருந்த சுகாதார மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் 16.05.2025 அன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களின் தொடர் நடவடிக்கையாக இந்தக் கூட்டம் நடைபெறுவதாக மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் குறிப்பிட்டார். இதன் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தின் சுகாதாரப் பிரச்சினை விரிவாக ஆராயப்பட்டிருந்தது. முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் சவால்கள் முதலில் ஆராயப்பட்டது. விடுதி தேவை […]
