கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி
வெளிநாட்டு உதவிகளில் நாம் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாது. வெளிநாட்டிலுள்ள அடுத்த தலைமுறைகள் – சந்ததிகள் மாறும்போது இந்த உதவிகள் எதிர்காலத்தில் நின்றுபோகக் கூடும். எனவே நாம் எமது சொந்தக் காலில் நிற்கவேண்டும். அது இந்தச் சிறுவர் இல்லத்துக்கு மாத்திரமல்ல எமது சமூகத்துக்கும் பொருந்தும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நான்காவது ஆண்டாகவும் இல்ல மைதானத்தில் 14.06.2025 அன்று […]