ஆளுநர்

எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி ஆவா குழுவினருடன் கலந்துரையாட தயார் – ஆளுநர் பகிரங்க அழைப்பு

“எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி ஆவா குழுவுடன் கலந்துடையாடுவதற்கு நான் தயாராகவுள்ளேன்” என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்துள்ளார். கொக்குவில் புகையிரத நிலைய அதிபர் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்குமுகமாக ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். இத்தாக்குதலானது வட மாகாணத்தை மையப்படுத்தி ஆயுத வன்முறையிலும் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வரும் ஆவா குழுவினரால் நடாத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இவர்களின் பிரச்சனை தொடர்பாக ஜனநாயக ரீதியிலான கலந்துரையாடலை இக்குழுவினருடன் மேற்கொள்ள தான் தயாராக இருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். […]

எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி ஆவா குழுவினருடன் கலந்துரையாட தயார் – ஆளுநர் பகிரங்க அழைப்பு Read More »

புதிய பொலிஸ் அத்தியட்சகர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு

யாழ் மாவட்ட புதிய பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (14) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது யாழ் மாவட்டத்திலும் வடமாகாணத்திலும் சட்டவிரோதமாக செயற்பட்டுவரும் சமூக விரோத குழுக்களை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கௌரவ ஆளுநர் அவர்கள் பொலிஸ் அத்தியட்சகரிடம் கேட்டுக்கொண்டதுடன் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார். – வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

புதிய பொலிஸ் அத்தியட்சகர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு Read More »

வடக்கின் புதிய கடற்படை கட்டளைத் தளபதி – கௌரவ ஆளுநர் சந்திப்பு

வடமாகாணத்தின் புதிய கடற்படை கட்டளைத் தளபதியாக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள ரியர் அட்மிரல் SMDK சமரவீர அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (14) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தில் காணப்படும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்த ஆளுநர் அவர்கள் கடற்படையினரின் வசமுள்ள தனியார் காணிகளை மீண்டும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினார். இதேவேளை காங்கேசன்துறை பிரதேசத்தில் கடற்படையினரின் வசமுள்ள நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு

வடக்கின் புதிய கடற்படை கட்டளைத் தளபதி – கௌரவ ஆளுநர் சந்திப்பு Read More »

வலி வடக்கு பிரதேசதிற்கு ஆளுநர் விஜயம்

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களின் அழைப்பின் பேரில் வலி வடக்கு பிரதேசத்திற்கு இன்று (13) முற்பகல் விஜயம் மேற்கொண்ட கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் அப்பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுடன் வலி வடக்கில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள தனியார் காணிகள் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது வலி வடக்கு காங்கேசன்துறை பகுதியில் கடற்படையினர் வசமுள்ள நகுலேஸ்வரம் புனித பூமிக்கு சொந்தமான 42 ஏக்கர் காணி உட்பட

வலி வடக்கு பிரதேசதிற்கு ஆளுநர் விஜயம் Read More »

நாளை ஆளுநரின் பொதுமக்கள் தினம்

கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் நாளை (12 யூன் 2019) புதன்கிழமை கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை ஆளுநரின் பொதுமக்கள் தினம் Read More »

கனேடிய உயர்ஸ்தானிகர் – ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை 04 யூன் 2019 அன்று ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வட மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் வட பகுதி சுற்றுலா நடவடிக்கைகளை மேம்படுத்த மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைள் குறித்து ஆராயப்பட்டது. அத்துடன் , வட மாகாண மக்களின் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் எவ்வகையிலான துறைசார் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதற்காக கனடா அரசாங்கம் வழங்கவேண்டிய உதவிகள் தொடர்பிலும்

கனேடிய உயர்ஸ்தானிகர் – ஆளுநர் சந்திப்பு Read More »

வடமாகாண அரச அலுவலர்கள் மக்களுக்கு நன்மைபயக்க கூடிய விதத்திலும் மனிதாபிமானத்துடனும் சேவை செய்ய வேண்டும் – ஆளுநர்

வடமாகாணத்திலுள்ள அனைத்து அரச ஊழியர்களும் போருக்கு பின்னரான இத் தேசத்தில் இருக்கின்ற மக்களுக்கு நன்மை பயக்ககூடிய வகையிலும் மனிதாபிமானத்துடனும் பணியாற்றவேண்டும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். யாழ் நூலக கேட்போர்கூடத்தில் 31 மே 2019 அன்று நடைபெற்ற கொள்முதல் நடைமுறை மற்றும் ஒப்பந்த நிர்வாக பாடநெறியை (CIPPCA 2018/2019) பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு குறிப்பிட்டார். மேலும்

வடமாகாண அரச அலுவலர்கள் மக்களுக்கு நன்மைபயக்க கூடிய விதத்திலும் மனிதாபிமானத்துடனும் சேவை செய்ய வேண்டும் – ஆளுநர் Read More »

வடக்கின் உயிர்நாடியாக திகழும் சுற்றுலாத்துறை – வடமாகாண ஆளுநர்

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் கௌரவ வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன்  ராகவன் அவர்கள் தலைமையில்      வடக்கின் உயிர்நாடியாக  திகழும் சுற்றுலா விடுதி உரிமையாளர்களுக்கான சந்தைப்படுத்தல் உபாயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கலந்துரையாடல் இன்று (31) யாழ் ரில்கோ விடுதியில் இடம்பெற்றது இந்நிகழ்வில் ஆளுநர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் , சுயாதீனமாக இயங்கக் கூடிய ஒரே ஒரு மாகாணமாக வடமாகாணம் காணப்படுகின்றது. பொருளாதார ரீதியில் அதனை நாங்கள் அபிவிருத்தி அடையச் செய்வதன் ஊடாகவே எதிர்காலத்தில் எமது சமூகத்தினையும் அபிவிருத்தி அடையச் செய்ய முடியும் என தெரிவித்தார். மேலும் வட மாகாணத்தின் உயிர் நாடியாகவும்

வடக்கின் உயிர்நாடியாக திகழும் சுற்றுலாத்துறை – வடமாகாண ஆளுநர் Read More »

ஐ.நா சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் – ஆளுநர் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் ஜீன் கோப் மற்றும் இலங்கைக்கான பணிப்பாளர் ரிம் சட்ரன் ஆகியோர் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை 31 மே 2019 அன்று காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது வடமாகாண பாடசாலைகளின் பாதுகாப்பு மற்றும் ஆக்கபூர்வமான வகுப்பறை நடவடிக்கைகளை வினைத்திறனாக முன்னெடுத்து செல்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

ஐ.நா சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் – ஆளுநர் சந்திப்பு Read More »

மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த மாசு உங்கள் கைகளால் துடைக்கப்படவேண்டும் – ஆளுநர்

மதத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கம், மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த மாசு உங்கள் கைகளால் துடைக்கப்படவேண்டும். அது ஒவ்வொரு இலங்கை இஸ்லாமியருடைய ஆறாவது கடமையாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகின்றேன் என்று வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வடக்கு மாகாண இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மொகைதீன் ஜூம்மா பள்ளிவாசலில் 28 மே 2019 அன்று மாலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஆளுநர்

மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த மாசு உங்கள் கைகளால் துடைக்கப்படவேண்டும் – ஆளுநர் Read More »