இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தை கட்டியெழுப்புவதற்கு எதிர்காலத்தில் உயர்பதவிகளில் அமரப்போகும் இன்றைய மாணவர்கள், கல்விக்கு மேலதிகமாக தங்கள் தலைமைத்துவப்பண்புகளையும் வளர்த்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் இந்தச் சமூகத்துக்கு தேவையானவர்களாக நீங்கள் மாறமுடியும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு யாழ். மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலர் ம.பிரதீபன் தலைமையில் 25.05.2025 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற […]
