வடக்கு மாகாணத்தின் பின்தங்கிய பிரதேசங்களில் முன்னெடுக்கவுள்ள தொழில்வழிகாட்டல் மற்றும் தொழில்திறன் வலுவூட்டல் திட்டங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும், வூசூ (WUSC) அமைப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல்
வடக்கு மாகாணத்தின் பின்தங்கிய பிரதேசங்களில் முன்னெடுக்கவுள்ள தொழில்வழிகாட்டல் மற்றும் தொழில்திறன் வலுவூட்டல் திட்டங்கள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், வூசூ (WUSC) அமைப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 17.06.2025 அன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் வூசூ அமைப்பு வடக்கில் முன்னெடுக்கவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பில் அந்த அமைப்பினரால் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. பாடசாலைகளிலிருந்து இடைவிலகியோர், இளையோருக்கு தொழில்வழிகாட்டல் மற்றும் அவர்களின் தொழில்திறன் வலுவூட்டல் திட்டங்களை எதிர்காலத்தில் அரச நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாகக் குறிப்பிட்டனர். […]
