ஆளுநர்

வடமாகாண கல்வி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

வடமாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளராக எல். இளங்கோவன் அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களால் இன்று (20) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனமானது எதிர்வரும் ஜுலை 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமாகாண கல்வி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம் Read More »

ஆளுநரின் புதிய செயலாளர் நியமனம்

வடமாகாண ஆளுநரின் புதிய  செயலாளராக சி.சத்தியசீலன் அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால்  நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனமானது 2019 ஜுலை 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. -வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

ஆளுநரின் புதிய செயலாளர் நியமனம் Read More »

ஊழல் புரியும் உயரதிகாரிகளும் தண்டிக்கப்படுவர் – ஆளுநர்

இலஞ்ச ஊழல் புரியும் அனைத்து உயரதிகாரிகளும் தண்டிக்கப்படுவார்கள் என்று கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். வடமாகாண அரச சேவையில் இலஞ்ச ஊழலை ஒழிக்கும் முகமாகவும் இது தொடர்பான விழிப்புணர்வினை அரச அதிகாரிகள் , ஊழியர்களுக்கு ஏற்படுத்தும் கௌரவ ஆளுநரின் எண்ணக்கருவிற்கு அமைவாக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சரத்துக்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் வடமாகாண கல்வித்துறையின் அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் மற்றும் மாணவர்களுக்கான இலஞ்ச ஊழல் ஒழிப்பு தொடர்பான ஆரம்ப விழிப்புணர்வு செயற்திட்டம்

ஊழல் புரியும் உயரதிகாரிகளும் தண்டிக்கப்படுவர் – ஆளுநர் Read More »

ஐ.நா அபிவிருத்தி திட்ட இலங்கை பணிப்பாளர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் .ஜோயர்ன் சோரென்சென் அவர்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (20) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினால் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் தொடர்பில் ஆளுநர் அவர்களுக்கு விபரிக்கப்பட்டது. போரினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாகாணமாக வடமாகாணம் காணப்படுவதால் இங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தினை பொருளாதார ரீதியாக உயர்த்தக்கூடிய திட்டங்களை செயற்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார். இதேவேளை, வடமாகாண மக்கள்

ஐ.நா அபிவிருத்தி திட்ட இலங்கை பணிப்பாளர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு Read More »

வவுனியா மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் – ஆளுநர் சந்திப்பு

வவுனியா மாவட்ட நகர மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு 19 யூன் 2019 அன்று பிற்பகல் வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. வவுனியா மாவட்டத்திலுள்ள நகர மற்றும் பிரதேச சபைகளின் தற்போதைய நிலைமைகள் , அவற்றினூடாக முன்னெடுத்துள்ள மக்கள் நல செயற்பாடுகள் மற்றும் அவற்றை மேற்கொள்ளும் போது முகம்கொடுக்கும் சவால்கள் , பிரச்சனைகள் குறித்தும் இந்த கலந்துரையாடலின் போது விரிவாக ஆராயப்பட்டது. இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர்

வவுனியா மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் – ஆளுநர் சந்திப்பு Read More »

ஆளுநரின் பொதுமக்கள் தினம் வவுனியாவில் நடைபெற்றது

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில்  வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன்  வவுனியா மாவட்ட செயலகத்தில் ஆளுநரின் பொதுமக்கள் தினம் இன்று (19)  நடைபெற்றது. – வடமாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு

ஆளுநரின் பொதுமக்கள் தினம் வவுனியாவில் நடைபெற்றது Read More »

வவுனியா செட்டிப்புலவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை புதிய வகுப்பறைக்கட்டடம் மாணவர்களிடம் கையளிப்பு

இந்திய அரசின் 45 இலட்சம் நிதியுதவியில் வவுனியா செட்டிப்புலவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத் தொகுதி ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் இன்று காலை (19) மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்தியத் துணைத் தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் அவர்களும் இதன்போது கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் கௌரவ ஆளுநர் அவர்களினால் பாடசாலை வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. -வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

வவுனியா செட்டிப்புலவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை புதிய வகுப்பறைக்கட்டடம் மாணவர்களிடம் கையளிப்பு Read More »

33 இலட்சம் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடம் கௌரவ ஆளுநரினால் மாணவர்களிடம் கையளிப்பு

வவுனியா அரசினர் சிங்கள கலவன் பாடசாலையில் இந்திய அரசின் 33 இலட்சம் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடம் இன்று (19) முற்பகல் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் அவர்களும் கலந்துகொண்டார். -வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

33 இலட்சம் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடம் கௌரவ ஆளுநரினால் மாணவர்களிடம் கையளிப்பு Read More »

யாழில் பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு – ஆளுநர் விஜயம்

பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் தமிழ் பொலிசாரின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக வடமாகாணத்திலிருந்து இளைஞர் யுவதிகளினை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு 18 யூன் 2019 அன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றபோது ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் அங்கு விஜயம் மேற்கொண்டு நேர்முகத்தேர்வுக்கு வருகை தந்தவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதுவரை காலமும் பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுகள் தென்னிலங்கையிலேயே இடம்பெற்று வந்திருந்ததும் ஆளுநர் அவர்கள் கௌரவ ஜனாதிபதி

யாழில் பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு – ஆளுநர் விஜயம் Read More »

ஆளுநரின் பொதுமக்கள் தினம் வவுனியாவில் நடைபெறவுள்ளது

ஆளுநரின் பொதுமக்கள் தினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் 19 யூன் 2019 அன்று புதன்கிழமை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது -வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

ஆளுநரின் பொதுமக்கள் தினம் வவுனியாவில் நடைபெறவுள்ளது Read More »