ஆளுநர்

நாம் எப்போதும் தோல்விகளால் துவண்டு விடாது அவற்றை படிக்கற்களாக மாற்றவேண்டும் – ஆளுநர்

சிதம்பரா கணிதப் பரீட்சைப் போட்டியில் வெற்றி பெற்று லண்டனுக்கு கல்விச் சுற்றுலா சென்று வந்த மாணவன் கூறியதைப்போன்று, கடின உழைப்பும் விடா முயற்சியும் இருந்தால் எம்மால் எதையும் சாதிக்க முடியும். அதை நான் பல இடங்களில் கூறியிருக்கின்றேன். நாம் எப்போதும் தோல்விகளால் துவண்டு போகக் கூடாது. அதை படிக்கற்களாக மாற்றவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். சிதம்பரா கணிதப் பரீட்சைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும், கணித விழா – […]

நாம் எப்போதும் தோல்விகளால் துவண்டு விடாது அவற்றை படிக்கற்களாக மாற்றவேண்டும் – ஆளுநர் Read More »

தற்போது மக்களுக்கு ஆன்மீகத்தின் மீதுள்ள ஈடுபாடு குறைந்து செல்வது கவலைக்குரிய விடயமாகும் – ஆளுநர்

எந்தவொரு விடயம் அழிக்கப்படுகின்றதோ அல்லது கால ஓட்டத்தில் மறைந்து செல்கின்றதோ அதைத்தக்க வைப்பதற்கும் அடுத்த சந்ததிக்கு ஒப்படைப்பதற்காகவும்தான் தினங்கள், அமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றன. அதைப்போலத்தான் நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் அமைப்பையும் நான் பார்க்கின்றேன். காலத்துக்கு தேவையான அமைப்பு. பொருத்தமான இடத்திலிருந்து பொருத்தமானவர்களால் தொடக்கப்பட்டு நடைபோடுகின்றது. இவ்வாறு புகழாரம் சூட்டினார் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள். நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் அமைப்பின் பரிசளிப்பு நிகழ்வும் ஆண்டு விழாவும், நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தில் இன்று

தற்போது மக்களுக்கு ஆன்மீகத்தின் மீதுள்ள ஈடுபாடு குறைந்து செல்வது கவலைக்குரிய விடயமாகும் – ஆளுநர் Read More »

இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் தலைமையிலான குழுவினர், கௌரவ ஆளுநரை சந்தித்தனர்

உற்பத்திப் பொருட்களை பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதில் சிறப்பாகச் செயற்படும் தாய்லாந்து அது தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதுடன், முதலீட்டாளர்களை இங்கு முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்கவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டார். இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் பெய்ரூன் தலைமையிலான குழுவினர், ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (22.08.2025) சந்தித்துக் கலந்துரையாடினர். தூதுக்குழுவினரை வரவேற்ற ஆளுநர், பொருட்களை பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதில் தாய்லாந்து முன்னணியில் உள்ளமையை சுட்டிக்காட்டினார். மிக

இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் தலைமையிலான குழுவினர், கௌரவ ஆளுநரை சந்தித்தனர் Read More »

நமது கலாசாரம், அடிப்படை விழுமியங்களை கைவிடக்கூடாது. அடுத்த தலைமுறைக்கு அதனை எடுத்துச் செல்லவேண்டும். – ஆளுநர்

பிரதேச, மாவட்ட, மாகாண கலாசார விழாக்கள் பல கலைஞர்களுக்கான மேடை வாய்ப்புக்களை வழங்குகின்றன. இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுவதற்கு தொடர்ந்து ஊக்குவிக்கப்படவேண்டும் என்பதுடன் அதிகளவு கலைஞர்களை குறிப்பாக இளம் கலைஞர்களை மேடையேற்றவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார். வலி. மேற்கு பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடத்திய பண்பாட்டு பெருவிழா அராலி இந்துக் கல்லூரி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (22.08.2025) மாலை, பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

நமது கலாசாரம், அடிப்படை விழுமியங்களை கைவிடக்கூடாது. அடுத்த தலைமுறைக்கு அதனை எடுத்துச் செல்லவேண்டும். – ஆளுநர் Read More »

பாடசாலைகளுக்கான வளப்பங்கீடுகளை உரிய முறையில் செய்யாத வலய கல்விப் பணிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் – ஆளுநர்

எமது மாகாணத்தில் கல்வியில் மாற்றத்தை விரைவாக ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் சேர்த்து எங்கள் அனைவருக்கும் உள்ளது. ஒவ்வொருவரும் அர்ப்பணிப்பாக அதற்காக செயலாற்ற வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார். வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (22.08.2025) நடைபெற்றது.

பாடசாலைகளுக்கான வளப்பங்கீடுகளை உரிய முறையில் செய்யாத வலய கல்விப் பணிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் – ஆளுநர் Read More »

நமக்கான தேவைகளை எப்படி விரைவாக நிறைவேற்றிக்கொள்கின்றோமோ, அதைப்போல பொது மக்களின் தேவைகளையும் உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.

நான் பெரிது, நீ பெரிது என்று பாராமல் உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்களும், செயலாளர்களும் இணைந்து செயற்பட வேண்டும். மக்களுக்கு சேவை செய்வதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை சரிவரப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். நாங்கள் சாதாரணமானவர்கள், எங்களை எப்போதும் மக்கள் சந்தித்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற வகையில் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதற்கே அனைவரும் முக்கியத்துவம் கொடுத்துச் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். வடக்கு மாகாணத்திலுள்ள

நமக்கான தேவைகளை எப்படி விரைவாக நிறைவேற்றிக்கொள்கின்றோமோ, அதைப்போல பொது மக்களின் தேவைகளையும் உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். Read More »

நல்லூர் தேர் திருவிழாவை முன்னிட்டு யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை(21.08.2025) விடுமுறை

நல்லூர் தேர் திருவிழாவை முன்னிட்டு யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை வியாழக்கிழமை (21.08.2025) விடுமுறை வழங்கப்படுவதாக வடமாகாண கெளரவ ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார். பதில் பாடசாலை நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

நல்லூர் தேர் திருவிழாவை முன்னிட்டு யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை(21.08.2025) விடுமுறை Read More »

சேவை என்பது ஒருவரின் தேவையை நாம் முன்கூட்டியே அறிந்து செய்வதாகும். மனமிருந்தால் செய்ய விருப்பமிருந்தால் மக்கள் நலனுக்காக எதையும் செய்யலாம்.

கழிவுகளை தரம் பிரித்து தருமாறு உள்ளூராட்சி மன்றங்கள் கோரினாலும் எங்கள் மக்கள் அவ்வாறு செய்வதில்லை. எல்லாக் கழிவுகளையும் ஒன்றாகவே போடுகின்றார்கள். நீங்கள் போடுகின்றன கழிவுகளை தரம்பிரிப்பதும் மனிதர்களே என்பதை எங்கள் மக்கள் உணர்ந்து கொள்கின்றார்கள் இல்லை. அவர்களும் மனிதர்கள்தான் என்பதை உணர்ந்து கொண்டால் இவ்வாறு செய்யமாட்டார்கள். தரம் பிரித்து கழிவுகளை தராவிட்டால் அதை எடுக்கமாட்டோம் என்று உள்ளூராட்சி மன்றங்கள் சொன்னால், அந்தக் கழிவுகள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கட்டி, வீதியில் போட்டுவிட்டுச் செல்வார்கள். மக்கள் தாங்களாக உணர்வதன் ஊடாகவே

சேவை என்பது ஒருவரின் தேவையை நாம் முன்கூட்டியே அறிந்து செய்வதாகும். மனமிருந்தால் செய்ய விருப்பமிருந்தால் மக்கள் நலனுக்காக எதையும் செய்யலாம். Read More »

சட்டத்தை மதிக்கின்ற சமூகமாக, கண்ணியமான, ஒழுக்கமுள்ள சமூகமாக நாங்கள் மாறவேண்டும். அது தனி நபரிலிருந்து ஆரம்பித்து சமூகம் வரை மாற்றம் நீண்டு செல்ல வேண்டும். – ஆளுநர்

மாற்றத்தை ஏற்படுத்த முனையும்போது, ஏற்படுத்தும்போது அது கடினமானதாகத்தான் இருக்கும். ஆனால் எல்லோரும் ஒன்றிணைந்து விடாமுயற்சியுடன் முயன்றால் அந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ‘தூய்மை இலங்கை’ செயற்றிட்டத்தின் ‘இதயபூர்வமான யாழ்ப்பாணத்துக்கு’ என்னும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிகழ்வின் ஓர் அங்கமாக யாழ். மாவட்டப் பாடசாலை அதிபர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்று செவ்வாய்க்கிழமை (19.08.2025) நடைபெற்றது. விழிப்புணர்வுச் செயலமர்வை ஆரம்பித்து உரையாற்றிய ஆளுநர், அரசாங்கம்

சட்டத்தை மதிக்கின்ற சமூகமாக, கண்ணியமான, ஒழுக்கமுள்ள சமூகமாக நாங்கள் மாறவேண்டும். அது தனி நபரிலிருந்து ஆரம்பித்து சமூகம் வரை மாற்றம் நீண்டு செல்ல வேண்டும். – ஆளுநர் Read More »

‘தூய்மை இலங்கை’ செயற்றிட்டத்தின் கீழ், வடக்கு மாகாணத்தில் 9 பேருந்து நிலையங்கள் தூய்மைப்படுத்தல், புனரமைத்தலுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

‘தூய்மை இலங்கை’ செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக நாடு முழுவதும் 50 பேருந்து நிலையங்களை தூய்மைப்படுத்தல் மற்றும் புனரமைத்தல் செயற்றிட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மாகாணமட்ட குழுவின் முதலாவது கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட் கிழமை (18.08.2025) நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணம், நெல்லியடி, பளை, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, மன்னார், நானாட்டான், வவுனியா, வெங்கலச்செட்டிக்குளம் ஆகிய 9 பேருந்து நிலையங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப்

‘தூய்மை இலங்கை’ செயற்றிட்டத்தின் கீழ், வடக்கு மாகாணத்தில் 9 பேருந்து நிலையங்கள் தூய்மைப்படுத்தல், புனரமைத்தலுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன. Read More »