“இந்த ஆண்டுக்குரிய வேலைத்திட்டங்களை ஓகஸ்ட் மாதத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும்!” – 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுப் புத்தக வெளியீட்டில் ஆளுநர் வலியுறுத்தல்
2025ஆம் ஆண்டு பல்வேறு சவால்களுக்கு மத்தியில் எமது வேலைத்திட்டங்களை நாம் வெற்றிகரமாக நிறைவேற்றியிருந்தோம். 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2026ஆம் ஆண்டில் அத்தகைய சவால்கள் எமக்கு மிகக் குறைவு. எனவே, இந்த ஆண்டுக்குரிய வேலைத்திட்டங்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். 2026ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண சபையின் பாதீட்டுப் புத்தகத்தை (நிதிக்கூற்று) உத்தியோகபூர்வமாக வெளியிடும் நிகழ்வு, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (06.01.2026) காலை […]
