வடக்கு மாகாணத்தின் பல வளங்கள் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதுடன், பயன்படுத்தப்படும் வளங்களினூடான உற்பத்திகளுக்கும் உரிய விலை கிடைப்பதில்லை. – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.
எமது பிரதேசத்தைச் சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை, கொழும்பைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் நேரடியாகக் கொள்வனவு செய்வதற்குரிய வணிக இணைப்பை ஏற்படுத்தும் இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது, என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் மற்றும் கைத்தொழில் அபிவிருத்திச் சபை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த வணிக இணைப்புக் கருத்தரங்கு, யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று […]
