ஆளுநர்

நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பு குறைவாகவே உள்ளது – கௌரவ ஆளுநர்

உள்நாட்டுப் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பு குறைவாகவே காணப்படுகின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தற்போது இலங்கையின் தேசிய பொருளாதார வளர்ச்சி இலக்கு 7 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், வடக்கு மாகாணம் தனது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு 10 சதவீத வளர்ச்சியை எட்டுவதை முக்கிய இலக்காகக் கொண்டு அதற்குரிய செயற்பாடுகளை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். […]

நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பு குறைவாகவே உள்ளது – கௌரவ ஆளுநர் Read More »

எல் நினோ காலநிலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.

எல் நினோ காலநிலைத் தாக்கத்துக்கு முகம்கொடுக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயக் குழுக் கூட்டங்களை உடனடியாக நடத்தி நெல் விதைப்புக்கான திகதியைத் தீர்மானிக்குமாறும், போதிய நீருள்ள குளங்களின் கீழான சிறுதானியப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்குமாறும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். எல் நினோ காலநிலையை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தங்கள் மற்றும் தணிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (24.07.2026) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் ‘சூம்’ தொழில்நுட்பத்தின்

எல் நினோ காலநிலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது. Read More »

பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியை வடக்கு மாகாண சபைக்குப் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியை (Corporate Social Responsibility – CSR) வடக்கு மாகாண சபைக்குப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட ஆரம்பக் கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (24.07.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் போது கருத்துத் தெரிவித்த ஆளுநர், ‘மாகாண சபைக்குக் கிடைக்க வேண்டிய வருமான வழிகளில் ஒன்றாகப் பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியும் காணப்படுகின்றது. எனினும், இதுவரை ஒரு சில

பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியை வடக்கு மாகாண சபைக்குப் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

யாழ்ப்பாணம், மலையகம் மற்றும் சென்னையைச் சேர்ந்த கரப்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான சிநேகபூர்வ கரப்பந்தாட்டப் போட்டியை கௌரவ ஆளுநர் ஆரம்பித்து வைத்தார்.

யாழ்ப்பாணம், மலையகம் மற்றும் சென்னையைச் சேர்ந்த கரப்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான சிநேகபூர்வ கரப்பந்தாட்டப் போட்டியை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதிதியாகக் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார். ‘யாழ்ப்பாண நண்பர்கள்’ அமைப்பின் ஏற்பாட்டில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் தொனிப்பொருளின் கீழ் இந்தச் சிநேகபூர்வ கரப்பந்தாட்டப் போட்டி இன்று (24.07.2026) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. விளையாட்டின் ஊடாகப் பிரதேசங்களுக்கிடையிலான நல்லுறவையும் சகோதரத்துவத்தையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச்சிநேகபூர்வ தொடரில்,

யாழ்ப்பாணம், மலையகம் மற்றும் சென்னையைச் சேர்ந்த கரப்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான சிநேகபூர்வ கரப்பந்தாட்டப் போட்டியை கௌரவ ஆளுநர் ஆரம்பித்து வைத்தார். Read More »

ஒரு மனிதன் தன்னலமின்றி அறிவுக்காகவும் சமூகத்துக்காகவும் உழைத்தால், அவர் மறைந்த பிறகும் அவரது பெயர் என்றென்றும் வாழும் – கௌரவ ஆளுநர்

இந்த உலகின் தொன்மையான மொழிகளில் இன்றும் உயிர்ப்புடன் உள்ள மொழிகளில் ஒன்றாக எமது தமிழ் மொழி இருப்பது எமக்கு எல்லோருக்கும் பெருமையாகும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தமிழ்மொழியையும் கலாசாரத்தையும் போற்றும் வகையிலான ‘தமிழ்மொழித் தினமும் சுவாமி விபுலானந்தர் நினைவு தினமும் – 2026’ நிகழ்வு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (24.07.2026) கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் தொடர்ந்தும்

ஒரு மனிதன் தன்னலமின்றி அறிவுக்காகவும் சமூகத்துக்காகவும் உழைத்தால், அவர் மறைந்த பிறகும் அவரது பெயர் என்றென்றும் வாழும் – கௌரவ ஆளுநர் Read More »

யாழ். மாவட்டத்துக்கு உத்தியோகபூர்வப் பயணமொன்றை மேற்கொண்ட கௌரவ புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர், கௌரவ ஆளுநரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்

மத்திய அரசாங்கத்தின் ஊடாக கலாசார உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களை வழங்குதல் மற்றும் வடக்கு மாகாணத்திலுள்ள கலாசார நிலையங்களின் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்தல் தொடர்பில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி அவர்களிடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரத்தியேக கோரிக்கைகளை முன்வைத்தார். யாழ்ப்பாண மாவட்டத்துக்கு இன்று (23.07.2026) வியாழக்கிழமை உத்தியோகபூர்வப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள கௌரவ அமைச்சர் அவர்கள், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு வருகை தந்து ஆளுநரை

யாழ். மாவட்டத்துக்கு உத்தியோகபூர்வப் பயணமொன்றை மேற்கொண்ட கௌரவ புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர், கௌரவ ஆளுநரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார் Read More »

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோர், யாழ்ப்பாண பழைய மாவட்டச் செயலகக் கட்டடம், யாழ். பொது நூலகம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு இன்று (23.07.2026) வியாழக்கிழமை உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர், யாழ்ப்பாண பழைய மாவட்டச் செயலகக் கட்டடம் மற்றும் யாழ்ப்பாணம் பொது நூலகம் ஆகியவற்றுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்கு எதிரே அமைந்துள்ள தொன்மை வாய்ந்த பழைய மாவட்டச் செயலகக் கட்டடத்தைப் பார்வையிட்ட அமைச்சர் தலைமையிலான குழுவினர், அதன்

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோர், யாழ்ப்பாண பழைய மாவட்டச் செயலகக் கட்டடம், யாழ். பொது நூலகம் ஆகியவற்றை பார்வையிட்டனர். Read More »

இசையால் எல்லைகளைத் தாண்டி மனித மனங்களை இணைத்த ஒரு மாபெரும் கலைஞனுக்கு, அவரது பெயரில் வீதியொன்றைத் திறந்து வைத்துக் கௌரவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். – கௌரவ ஆளுநர்

இன்று திறக்கப்பட்டுள்ள இந்த வீதி வெறுமனே ஒரு போக்குவரத்துப் பாதையாக அமையாது, எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு மாபெரும் கலைஞனின் அர்ப்பணிப்பையும், இந்திய – இலங்கை நாடுகளுக்கிடையிலான ஆழமான கலாசாரப் பிணைப்பையும் நினைவூட்டும் வரலாற்றுச் சுவடாகவே நிலைத்திருக்கும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இசையால் எல்லைகளைத் தாண்டி மனித மனங்களை இணைத்த ஒரு மாபெரும் கலைஞனுக்கு, அவர் வாழ்ந்து சேவையாற்றிய மண்ணில், அவரது பெயரில் வீதியொன்றைத் திறந்து வைத்துக் கௌரவிப்பதில் தான் மட்டற்ற

இசையால் எல்லைகளைத் தாண்டி மனித மனங்களை இணைத்த ஒரு மாபெரும் கலைஞனுக்கு, அவரது பெயரில் வீதியொன்றைத் திறந்து வைத்துக் கௌரவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். – கௌரவ ஆளுநர் Read More »

எமது மாகாணத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் புதிய முதலீடுகளை நாங்கள் பெரிதும் வரவேற்கின்றோம்,’ – கௌரவ ஆளுநர்

ஜேர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதியுதவியின் கீழ், ஜேர்மனியின் ஆசிய-பசிபிக் வர்த்தக சங்கம் உள்ளூர் பங்காளர்களுடன் இணைந்து, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் ஆராயும் விசேட சந்திப்பொன்று வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் ஜேர்மன் நிபுணர் குழுவுக்கும் இடையில் இன்று (22.07.2026) புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் ஜேர்மனியின் sequa gGmbH நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் கலாநிதி. ரோலண்ட் ஸ்ட்ரோஹ்மேயர், Kasoma

எமது மாகாணத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் புதிய முதலீடுகளை நாங்கள் பெரிதும் வரவேற்கின்றோம்,’ – கௌரவ ஆளுநர் Read More »

யாழ். இந்துக் கல்லூரியின் அழைப்பின் பேரில், ”SCIVERSE 2K26′ விஞ்ஞானச் செய்முறைக் கண்காட்சியைச் கௌரவ ஆளுநர் பார்வையிட்டார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நிர்வாகத்தின் அழைப்பின் பேரில், கல்லூரி வளாகத்தில் இடம்பெற்று வரும் ”SCIVERSE 2K26′ விஞ்ஞானச் செய்முறைக் கண்காட்சியைச் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (22.07.2026) புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் விஞ்ஞான மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியானது, கல்லூரியின் உயர்தரப் பிரிவு வளாகத்தில் ‘பரிசோதிப்போம், ஆராய்வோம், சிறந்து விளங்குவோம்’ எனும் தொனிப்பொருளில் இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று தினங்களுக்கு

யாழ். இந்துக் கல்லூரியின் அழைப்பின் பேரில், ”SCIVERSE 2K26′ விஞ்ஞானச் செய்முறைக் கண்காட்சியைச் கௌரவ ஆளுநர் பார்வையிட்டார். Read More »