இன்று மொழியறிவுக்கு மேலதிகமாக கணனியறிவும் அவசியம். அதனூடாக வேலை வாய்ப்புக்களை இலகுவாகப் பெறக் கூடியதாக இருக்கும். – ஆளுநர்
எமது தாய்மொழிக்கு மேலதிகமாக இன்னொரு மொழியைக் கற்பதால் வேலை வாய்ப்புக்கான சந்தர்ப்பங்களை நாம் இலகுவாக்கிக் கொள்ள முடியும். சிங்கள மொழியைக் கற்றிருந்தால் இலங்கையின் எந்தப் பாகத்திலும் பணியாற்றக்கூடியதாக இருக்கும். இன்னொரு மொழியைக் கற்பதால் ஒருபோதும் நாம் குறைந்துவிடப்போவதில்லை. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ஹெல்தி லங்கா நிறுவனம் மற்றும் சூரிய நிறுவகம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில் இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சுதுமலை […]