ஆளுநர்

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விசேட விடுமுறை

சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி  சிவராத்திரி தினத்தின் மறுநாள் 05.03.2019 அன்று செவ்வாய்க்கிழமை வடமாகாண  பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை தினமாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் அறிவித்துள்ளார். மேற்படி தினத்தில் தனியார் கல்வி நிறுவனங்களும்  மாணவர்களுக்கான விடுமுறையை வழங்குமாறு ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இத்தினத்திற்கான பதிற்பாடசாலை நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விசேட விடுமுறை Read More »

சுவிஸ் அரசாங்கத்தின் பிரதிநிதி – கௌரவ ஆளுநர் சந்திப்பு

சுவிஸ் அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சினுடைய சமஷ்டி தொடர்பான திணைக்களத்தின் சிரேஷ்ட ஆலோசகர் மாட்டின் ஸ்ரெரர்ஷிங்கர்  அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (01) நண்பகல் ஆளுநர் அலுவலகத்தில் சந்திந்தார். இந்த சந்திப்பின்போது வடமாகாண மக்களின் தற்போதைய நிலைகுறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன்  , இம்மக்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்தக்கூடிய வழிமுறைகள் குறித்தும்  அவதானம் செலுத்தப்பட்டது. வடமாகாணத்தில் நிலவும் காணி , நீர் , வீடு மற்றும் இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் குறித்தும்   இதன்போது

சுவிஸ் அரசாங்கத்தின் பிரதிநிதி – கௌரவ ஆளுநர் சந்திப்பு Read More »

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரு பாடசாலைக்கட்டடங்கள் கௌரவ ஆளுநர் தலைமையில் மாணவர்களிடம் கையளிப்பு

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரு பாடசாலைக்கட்டடங்கள் கௌரவ ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் 01 மார்ச் 2019 அன்று மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன. யாழ் / பெரியபுலம் மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  மாணவர்களுக்கான ஆரம்ப கற்றல்வள நிலைய கட்டடத்தொகுதி மற்றும் யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட  அதிபர்  விடுதி, சிற்றுண்டிச்சாலை என்பன ஆளுநரால் திறந்துவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் ஆளுநர் அவர்கள் உரையாற்றுகையில், கல்வியினால் மட்டும் அடையாளம் காணப்பட்ட சமூகம் நாங்கள். உடைந்துபோயுள்ள நம்

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரு பாடசாலைக்கட்டடங்கள் கௌரவ ஆளுநர் தலைமையில் மாணவர்களிடம் கையளிப்பு Read More »

151 பாடசாலைகளுக்கு ஆளுநர் தலைமையில் 2 கோடி ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு

அனைத்து வளங்களும் நிறைந்த வடமாகாணம் இலங்கையின் ஏனைய மாகாணங்களுக்கும் மானியம் கொடுக்கக்கூடிய மாகாணமாக ஒரு நாள் மாறவேண்டும் என்பதே என் கனவு. அந்த கனவையே நான் இங்கு விதையாக விட்டுச்செல்ல விரும்புகின்றேன் என்று ஆளுநர் சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். வடமாகாணத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட  பாடசாலைகளுக்கு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழையமாணவர்களினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கௌரவ ஆளுநர் அவர்கள் தலைமையில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் 28 பெப்பிரவரி 2019 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு  ஆளுநர்

151 பாடசாலைகளுக்கு ஆளுநர் தலைமையில் 2 கோடி ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு Read More »

நான் ஆளுநராக இருக்கும் கடைசி நிமிடம்வரை கல்விக்கு முதலிடம் கொடுப்பேன் – ஆளுநர்

மாகாணத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். இதற்காக நாம் பணிபுரிய வேண்டும். நான் ஆளுநராக இருக்கும் கடைசி நிமிடம் வரை கல்விக்கு முதலிடம் கொடுப்பேன் என்று ஆளுநர் சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். வட மாகாண இளைஞர்,யுவதிகளின் தொழிற்கல்வியினை மேட்படுத்தும் நோக்கில் வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் ,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட மாணவர் மற்றும் இளைஞர் யுவதிகளின் உயர்கல்வி,தொழிற்கல்வி தொடர்பிலான தகவல்கள் அடங்கிய கையேட்டினை வெளியிடும் நிகழ்வு ஆளுநர் தலைமையில் 28 பெப்பிரவரி 2019

நான் ஆளுநராக இருக்கும் கடைசி நிமிடம்வரை கல்விக்கு முதலிடம் கொடுப்பேன் – ஆளுநர் Read More »

கிளிநொச்சி மாவட்டத்தின் சில பாடசாலைகளுக்கு ஆளுநர் திடீர் கண்காணிப்பு விஜயம்

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இரு பாடசாலைகளுக்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 27 பெப்பிரவரி 2019 அன்று திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். கடந்த வருட இறுதியில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கினால் பாதிப்படைந்த 11 பாடசாலைகளை புனரமைப்பதற்காக ஆளுநர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களினால் கடந்த மாதம் 31.5 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 8 பாடசாலைகளும் கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தின் சில பாடசாலைகளுக்கு ஆளுநர் திடீர் கண்காணிப்பு விஜயம் Read More »

வடமாகாணத்தில் இயங்கும் அனைத்து மருந்தகங்களிலும் மருந்தகர்கள் கட்டாயம் கடமைபுரிய வேண்டும் – ஆளுநர் உத்தரவு

யாழ்ப்பாணத்திலுள்ள மருந்தகங்களின் நிலைமையினை நேரில் ஆராயும் பொருட்டு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் யாழ் நகரிலுள்ள சில மருந்தகங்களிற்கு நேற்று (25) இரவு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். இதன்போது மருந்தக உரிமையாளர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடிய ஆளுநர் அவர்கள், கடையடைப்பு நாளானாலும் மக்களின் அத்தியாவசிய தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கில் மருந்தகங்கள் திறந்திருந்தமையை பாராட்டினார். அத்தோடு வடமாகாணத்தில் உள்ள அனைத்து மருந்தகங்களிலும்   மருந்தகங்களின் உரிமம் கட்டாயம் காட்சிப்படுத்தப்பட வேண்டியதுடன் மருந்தாளர்கள்(Pharmacist) கட்டாயம் கடமையில் இருக்கவேண்டும்

வடமாகாணத்தில் இயங்கும் அனைத்து மருந்தகங்களிலும் மருந்தகர்கள் கட்டாயம் கடமைபுரிய வேண்டும் – ஆளுநர் உத்தரவு Read More »

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் – ஆளுநர் சந்திப்பு

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணாண்டோ அவர்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை 26 பெப்பிரவரி 2019 அன்று முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தில் நிலவும் தமிழ் பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் குறைபாடு தொடர்பிலும் , வட மாகாணத்தில் பொலிஸ் சேவையினை தமிழ் மொழி மூலம் முன்னெடுத்து செல்வதில் காணப்படும்  குறைபாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. அத்துடன் வடமாகாணத்தில் பொலிஸ் பயிற்சி நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பாகவும் இதன்போது அவதானம்

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் – ஆளுநர் சந்திப்பு Read More »

ஓய்வு பெற்ற நில அளவையாளர்களை பதிவு செய்யுமாறு ஆளுநர் கோரிக்கை

வட மாகாணத்தில் நிலவும் காணிப்பிச்சினைகளை கூடிய விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஓய்வுபெற்ற நில அளவையாளர்களை பதிவு செய்யுமாறு ஆளுநர் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். காணிப் பிரச்சினைகளில் முதன்மையானதாக காணிகளை அளவிடுதல் காணப்படுவதால் காணிகளை அளவிட நில அளவையாளர் திணைக்களத்தில் போதிய ஆளணியினர் இல்லாமையின் காரணமாகவே ஓய்வுபெவுற்ற நில அளவையாளர்களின் சேவையினை பெற்றுக்கொள்ளும் முகமாகவே ஆளுநர் அவர்களினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நில அளவையாளர்களை வட மாகாண காணி நிர்வாக திணைக்களத்தில் தம்மை பதிவு

ஓய்வு பெற்ற நில அளவையாளர்களை பதிவு செய்யுமாறு ஆளுநர் கோரிக்கை Read More »

இலங்கை கடற்படையின் வடக்கு கட்டளைத் தளபதி-ஆளுநர் சந்திப்பு

இலங்கை கடற்படையின் வடக்கு கட்டளைத் தளபதி றியர் அட்மிரல் எம் விக்ரமசிங்க அவர்களுக்கும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 20 பெப்பிரவரி 2019 அன்று மாலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை கடற்படையின் வடக்கு கட்டளைத் தளபதி-ஆளுநர் சந்திப்பு Read More »